வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்வதற்கு...

 (How to Tackle Negative Attitude in Working Place)
ஒருவர் நம்மீது கோபப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்நீங்களும் பதிலுக்குஅவரை விட அதிகமாகக் கோபப்படுவீர்கள்ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்..அவரை விட அதிகமாகஅவரை மோசமாகத் திட்டுவீர்கள் இல்லையாஇது தான்நம்முடைய மனநிலைஇதனால் உங்களுடைய கோபத்திற்குத் தற்காலிக வடிகால்கிடைத்தாலும் இந்த மனநிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றதுபொது இடங்களில் உங்களுக்குத் தெரியாத நபர்களிடம் இந்த மாதிரிநடந்து கொள்கிறீர்கள்ஆனால் அலுவலகத்தில் உங்களுக்கு மிகமிகத் தெரிந்தநபர்களிடம் இம்மாதிரி நடந்து கொண்டால் ஏற்படும் விளைவுகளை யோசித்துப்பாருங்கள்.
உங்களை விட கீழ்நிலை வேலையில்இருப்பவர்களிடம் இவ்வாறு நடந்தால்..அவரால் நேரடியாக உங்களைப் பழிதீர்க்க முடியாதுஅதனால் அவருக்குத்தெரிந்தவர்களிடத்திலெல்லாம் உங்களைப் பற்றி மோசமாகச் சொல்லி பழிதீர்த்துக்கொள்வார்கள்இதனால் உங்களுடைய மதிப்புப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இன்றைய சூழலில் பெரும்பாலான ஊழியர்கள் வேலை பார்க்கும் இடங்களில்,எதிர்மறையான எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துமன அமைதியைஇழந்து தவிக்கிறார்கள்இதுபோன்றநிலையில்வேலை பார்க்கும் இடங்களில்மனஅமைதியை இழக்காமல் இருக்கவேண்டுமானால் ஒன்று தங்களின்அமைதியின்மைக்குப் பிறரையோசூழ்நிலையையோ குறைகூறுவதைத் தவிர்க்கவேண்டும்மற்றொன்று எதிர்மறையான அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பதுஎன்றஇரண்டு செயல்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் காணப்பட்டாலும் அதைத்தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.
மேலதிகாரிகளுடன் நல்லுறவு கொள்ளவேண்டும்பணியிடத்தில் சிலவிரும்பத்தகாத சூழ்நிலை உருவாகும்போது அச்சூழ்நிலை பற்றி அவ்வப்போதுமேலதிகாரியிடம் அதுகுறித்தத் தகவல் அளித்து வரவேண்டும்உங்கள் பணியைபற்றிய உண்மை உங்களைவிட அவருக்குத்தான் நன்றாகத் தெரியும்இந்நிலையில்மேலதிகாரியுடனான தகவல் பரிமாற்றம் இல்லையெனில் 50% தவறுகளுக்குஅப்பணியாளர் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
உங்கள் அதிகாரியுடன் முழுமையான நல்லுறவுக்கு மனதைத் தயார்படுத்திக்கொள்ள தவறவேண்டாம்முதுகுக்குப் பின்னால் குத்துவதுஇரட்டை வேடம்போடுவதுவதந்திகளைப் பரப்புவதுவம்பு பேசுவது போன்றகுணங்களைமுழுமையாக விட்டொழிக்க வேண்டும்இதனால் இன்று உங்களால்விமர்சிக்கப்படுபவர் இன்னொரு நாள் உங்களுக்குப் பாடம் கற்பிக்கும் நிலையைதவிர்த்திட இது வகைசெய்யும்உணர்ச்சிவசப்படும் நிலையை முழுமையாககுறைத்துக் கொள்ள வேண்டும்.
நம்மோடு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் அடிப்படையில் மனிதர்கள்தான்அதன்பின்தான் அலுவலகத்தில் சக ஊழியர்கள் என்பதை எப்போதும்நினைவில் கொள்ள வேண்டும்எப்போதும் பிரச்சனைகளைத் தனித்தனியாகபிரித்துப் பார்த்துஅதை சரிசெய்ய முயற்சித்தால் எதிர்மறைஎண்ணங்கள்குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
மனோபாவத்தை மாற்றநீங்கள் தயாரா?
எதிர்மறைமனோபாவத்தை ஒருவர் வெளிப்படுத்தும் போது கீழ்க்கண்டகேள்விகளைத் தங்களுக்கு தாங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
இந்த நபர் எனக்கு முக்கியமானவரா?
இதற்கு முன் இதே போன்றஒரு மனோபாவத்தை என்னிடம் வெளிப்படுத்திஇருக்கிறாரா?
அவரின் இந்த எதிர்மறை மனோபாவம் என்னை எந்த அளவிற்குப் பாதிக்கிறது?
இந்த நபரின் எதிர்மறை மனோபாவம் மாறும் வரை பொறுத்துப் பார்க்கலாம் என்னும்அளவிற்கு தன்னுடைய நேரத்தைச் செலழிக்கத் தயாராக இருக்கிறீர்களா?
அவருடைய எதிர்மறை மனோபாவத்தை மாற்றுவதற்கான முயற்சியைச் செய்துபார்க்கத் தயாராக இருக்கிறீர்களா?
மேற்கண்ட கேள்விகளில் ஏதாவது ஒன்றிற்கு ‘இல்லை என்றபதில்உங்களிடமிருந்து வந்தால் அந்த இடத்தை விட்டு அமைதியாக வந்துவிடுங்கள்.தயவு செய்து உங்களுடைய ஆத்திரத்தைகோபத்தை வெளிப்படுத்தி விடாதீர்கள்.அது தான் உங்களுக்கு நல்லதுமேற்கண்ட கேள்விகளுக்கு ஆமாம் என்று பதில்கூறினால் இரண்டாவது படிக்குச் செல்லுங்கள்.
உண்மையான காரணத்தைக் கண்டறியுங்கள்:                                                       
அந்த நபரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்அவர் திடீரென இவ்வாறு நடந்துகொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள்ஒரு குறிப்பிட்டகாரணத்திற்காகத்தான் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டாராஎன்பதைநிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்உங்களின் நிலையை விளக்குங்கள்ஆனால் சமயம்பார்த்து இதனைச் செய்ய வேண்டும்பொறுமையாக இருங்கள்உங்களின் அமைதி,மௌனம் நிச்சயமாக அவரைச் சோதிக்கும்.
நீங்கள் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொண்டால்.. எவ்வளவு உயர் பதவிகளில்இருப்பவர்கள் கூட அவர்களுடைய கோபம் தணிந்தவுடன்மனநிலை மாற்றம்ஆனவுடன் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டதற்கு வருந்துவார்உங்களைஅழைத்துப் பேசுவார்அவ்வாறு பேசத் தயாராகும் போது நீங்கள் இயல்பாக அவரைவரவேற்பது போலஉற்சாகப்படுத்துவது போலப் பேசவேண்டும்உங்களின்உண்மையான விளக்கத்தை இப்போது கூறலாம்இப்படியெல்லாம் நடக்கும்என்றநம்பிக்கை உங்களுக்கு இருந்தால் மூன்றாவது படிக்குச் செல்லுங்கள்.
மனநிலையை மாற்றுங்கள்:
இப்போது அவரது மனநிலையை உங்களுடைய நேர்மறைச் சிந்தனையால்மாற்றமுயற்சியுங்கள்பிரச்சனையைத் தெளிவாகப் பேசிவிடுங்கள்உங்களின் மேல்தவறுகள் இருந்தால் தாராளமாக மன்னிப்புக் கேளுங்கள்மீண்டும் நடக்காதுஎன்பதை நிச்சயப்படுத்துங்கள்உங்களிடம் தவறு இல்லையென்றால் அதுபோன்றசூழ்நிலைக்கு யார்அல்லது எது காரணம்என்பதைக் கண்டறியுங்கள்.ஏனென்றால் புரிதலின்மை (Misunderstanding) என்பது பெரும்பாலான உறவுகளைப்பிரிக்கிறதுஇதனை சரியான புரிதல்கள் (Understanding) மூலம் தான் தீர்க்க முடியும்.மனம் விட்டுப் பேசுவதன் மூலமும் கேள்விகள் கேட்டு உண்மைகளைக்கண்டறிவதன் மூலம் தான் அதைச் சரி செய்ய முடியும்ஆனால்அதற்கு நீங்கள்தயாராக இருக்க வேண்டும்உங்களைப் பற்றி ஒருவருக்குத் தவறான அபிப்ராயம்ஏற்படுகிறது என்றால் அதை மாற்றவேண்டியது உங்களின் கடமைஆனால்அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயமாய்ஏதாவது ஒரு விதத்தில் உங்களைப் பாதிக்கும்.
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுங்கள்:
பிரச்சனைகளைக் கண்டறிந்த பிறகு அதற்கானத் தீர்வுகளைக் கண்டறியுங்கள்.
என்ன செய்தால் ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்ய முடியும் என்று எண்ணிப்பாருங்கள்.
அதற்கு ஒத்து வருகிறாராஎன்று ஆராய்ந்து பாருங்கள்.
இருவரும் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு முடிவினை நோக்கிச்செல்லுங்கள்.
ஆனால்தீர்வு காணாமல் விட்டு விடாதீர்கள்.
ஏனென்றால் அது எப்போதாவது அதே பிரச்சனையை மீண்டும் கிளப்பும்.
பழைய நிலைக்குத் திரும்புங்கள்:
இப்போது அந்த மனநிலை மாறி விட்டதென நீங்கள் நினைத்தால்அந்த நபரைஇயல்பான சூழ்நிலைக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டால்கசப்புகளை நிச்சயமாகமறந்து இயல்பாகப் பேசுங்கள்கசப்புகளைகோபங்களை மனத்திற்குள் வைத்துவெறும் ஒப்புக்குச் சிரிக்காதீர்கள்இப்போது அவரும் நீங்களும் நிச்சயமாக பழைய,இயல்பானசுமூகமானநட்பான சூழ்நிலைக்கு வந்து விட்டால் அதை முழுமனத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்அவருக்கு நீங்கள் உத்தரவாதம் கொடுத்த அந்தவிஷயத்தைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
இது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக்கொள்வதற்குத் துணைபுரியும்இதனையே உங்களின் குடும்பத்திலும்,நண்பர்களிடத்தும் கூடச் செயல்படுத்திப் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment