உண்மையில் யாரேனும் சபித்தால் அது பலிக்குமா?[சத்குரு]

           முன்காலத்தில் ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் கோபம் வந்தால் அவர்கள் சாபம் கொடுப்பதும், அது அப்படியே பலிப்பதும் நாம் கதைகளாக கேட்டு வளர்ந்திருக்கிறோம். இருந்தாலும், இந்த 21ம் நூற்றாண்டில், இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று தான் நமக்குத் தோன்றுகிறது. இது உண்மைதானா? உண்மையில் யாரேனும் சபித்தால் அது பலிக்குமா?


சத்குரு: சில நேரங்களில் ஆமாம் என்றே சொல்ல வேண்டும். பல நேரங்களில், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள், இல்லையா? எண்ணம் என்பது உங்கள் மூளையில் ஏற்படும் ஒரு வகையான சப்தம். ஆனால் அதற்கு நீங்கள் அர்த்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டால் வெவ்வேறு வகைகளில் அர்த்தங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம். ஒரு எண்ணத்தை பலமாக உருவாக்கி அதற்கு அர்த்தம் கொடுத்துக் கொண்டே போகும்போது அந்த எண்ணம் மிகுந்த சக்தி வாய்ந்ததாக மாறுகிறது. இதுபோன்று ஒரு சக்தியான எண்ணத்தை உருவாக்கி மற்றவர்களுக்கு பயன்களையும் விளைவிக்க முடியும், கேடுகளையும் உண்டாக்க முடியும். உண்மையிலேயே ஒருவர்மீது மிகவும் கோபமாக இருந்தால், உங்கள் முழு சக்தியும் ஒரு திசையில் இருக்கும். தீவிரமான ஆசை கொண்ட மனது எப்படி தீவிரத்துடன் செயல்பட முடியுமோ, தியானத்தன்மையில் உள்ளவர் ஒரே நோக்கத்துடன் எப்படி செயல்பட முடியுமோ, அதேபோல் வெறுப்பான மனமும் அதே தீவிரத்துடன் செயல்பட முடியும். அப்படி ஒரு எண்ணம், ஒரே முகமாக அதிதீவிரத்தில் செயல்படும்போது, பலிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

0 comments:

Post a Comment