தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:9‏

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள்/ முயற்சிகள் தொடங்கப்படாத நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற ஒரு கேள்வி எழுபது இயற்கையே?இந்த நிலையில் பண்டைய இலக்கியங்களிலும் காவியங்களிலும் கூறிய தகவல்களையும் மேலும் மதுரை ஆதீனத்தின்[ஆதினத்தின் ]  அதிகாரப் பூர்வமான கணினி இணையத்தில் பதியப்பட்ட  தகவல்களையும் கிழே தருகிறோம். 

இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட பண்டைத்தமிழ்
இலக்கிய நூல்களில் மூழ்கிப் போன குமரிக்கண்டம் பற்றிய பல முக்கிய சான்றுகள் காணப்படுகின்றன.கிழே தரப்பட்ட குறிப்புகள் 2000-2700 ஆண்டு பழமை வாய்ந்த முன்றாவது சங்க இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டவையும் . [புறநானுறு 9, 6 & 67,கலித்தொகை 4&7,+ தொல்காப்பியம்],1900-1800 ஆண்டு பழமை வாய்ந்த சிலப்பதிகாரமும் ஆகும். 

"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" -(புறம் 9) 

சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை கூத்தர்க்கு  வழங்கிய மன்னன்,பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி,"பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என்கிறது.பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த[குமரி கண்டம் என கருதப்படும் பழந்தமிழ் நாடு] ஓர் ஆற்றின் பெயர்.பல் துளி என்னும் சொற்கள் இணையும் போது பஃறுளி என அமையும்.

"வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்" (புறம் 6)

வடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத்  தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், என்கிறது.

"முகிழ்நிலா விளங்கும் 
மையல் மாலையாம் கையறுபு இனையக்
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் "[புறம் 67]

முழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில், நான் செயலற்று வருந்துகிறேன். நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், என்கிறது.

"மலிதரை யூர்ந்துதன்மண்கடல் வௌவலின் 
மெலிவின்றி மேற்சென்றுமேவார் நாடிடம்படப் 
புலியோடு வின்னீக்கிப்புகழ்பொறிந்த கிளர்கெண்ட 
வலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்" (கலித். 104)

முற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான் என்கிறது. 

 "வட வேங்கடந் தென்குமரி"[தொல்காப்பியம்"

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் 
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள 
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு 
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" (சிலப். 11:19-22)

கடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக் கோட்டையையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான் என்கிறது. 

ராவணனின் பேரரசு,25 மாளிகைகளுடனும்  400000
வீதிகளுடனும் , வரலாற்றின் ஒரு காலகட்டமான துவாபர யுகத்தில்[ இந்து காலக் கணிப்பு முறையின் படி இதற்கு அடுத்த யுகம் தான் இப்ப நடக்கும் கலியுகம் ஆகும்] கடலில் மூழ்கியது என ராமாயணம் கூறுகிறது 

சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட "மகாவம்சம்'' நூலிலும் பின்னர் "ராஜாவலிய" என்ற வரலாற்று நூலிலும் பாரிய கடற்கோள் ஒன்று ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது.

ஆனால் சுனாமியின் தாக்குதலின் பின்,இந்த உப கண்டத்தில்  இப்ப எலோருக்கும் தெரியும் சிலப்பதிகாரம் ,கலித்தொகை,ராமாயணம், மகாவம்சம் ஆகியவற்றில் கூறிய கடற்கோள் என்றால் என்னவென்று.

நாம் மேலே சுட்டிக்காட்டியவாறு,பண்டைத்தமிழ் இலக்கிய
ஆகக் குறைந்தது 14 இடங்களில்,கடலில் மூழ்கிய ஒரு நிலப்பரப்பு பற்றி எடுத்து காட்டுகிறது.எல்லாம் ஒரே கருத்தையே முன் வைக்கிறது. அதாவது பாண்டிய அரசனால் ஆளப்பட்ட இந்த பண்டைய தமிழ் நாகரிகம் ஒரு பெரும் சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்/ கடல்கோளால் அழிவிற்குட்பட்டது என்பதே.இது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது ஒரு கட்டுக் கதையாகவும் இருக்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் நிட்சயம். நிலத்தையும் கடலையும் தொடர்பு படுத்தி ஏதாவது ஒரு சம்பவம் பண்டைய காலத்தில் நடைபெற்று இருக்க வேண்டும்.அதுவே பிற் காலத்தில் அவர்களை பல இடங்களில் பலரால் எழுத தூண்டி இருக்கலாம்.இந்த சம்பவம் தலை முறை, தலை முறையாக கடந்து வந்து இருக்கலாம்.அப்படி வரும் போது அந்த கதையே மாற்றம் அடைந்து இப்ப சங்க இலக்கியங்களில் கூறப்படும் வடிவத்தை அடைந்து இருக்கலாம்,அல்லது இது இப்ப கூறப்படுவது போல உண்மையாகவே நடந்து இருக்கலாம்.அது மட்டும் அல்ல இது மாதிரியான கதைகள் வேறு இடங்களிலும் கூறப்பட்டு உள்ளது. உதாரணமாக இலங்கையில் மகாவம்சம், இந்தியாவில் இராமாயணம்,சுமேரியாவில் கில்கமெஷ் காவியம் போன்றவையாகும் இதில் நாம் கவனிக்க வேண்டியது இவை அனைத்தும் பண்டைய தமிழர்களுடனோ அல்லது அவர்கள் வாழ்ந்த,வாழ்கின்ற இடங்களுடனோ தொடர்புடையது என்பதே.ஆகவே நாம் இலகுவாக ஊகிக்க முடியும் அவர்கள் இந்த வெள்ளம் சம்பந்தமான கதையை அங்கு வாழ்ந்த அல்லது அங்கு குடியேறிய தமிழர்களான தமது மூதாதையர்களிடம் இருந்து பெற்றிருக்கலாம் என்பதே.இவை எல்லாம் சுட்டி காட்டுவது ஒரு நிலப்பரப்பு முன்பு ஒரு காலம் கடலில் மூழ்கியது என்பதே.அது குமரி நாடு போல் ஒரு பெரும் கண்டமாக இருக்கலாம் அல்லது கரையோர கிராமமான ஒரு சிறு நிலப்பரப்பாக இருக்கலாம் என்பதே.

 பகுதி:10 or 01வாசிக்க கீழே தரப்படட தலைப்பினை அழுத்தவும்.


🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋

0 comments:

Post a Comment