இடதுக்கை பழக்கம் கொண்ட குழந்தை-அனுமதிக்கலாமா?


ஒரு சில பிள்ளைகள்  பிறவியிலே வலதுக்கையை விட இடதுக்கை பழக்கம்   காணப்படுவதை அவர்களுடைய  எல்லா பெற்றோர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே குழந்தைகளை வலதுகைப் பழக்கத்த்துக்குத் தூண்டுவார். ஆனால் இடதுகைப் பழக்கம் எவ்வளவு வலுவானது என்பதனை அறிந்துகொள்வோம்.

1. ஆக்கப்பூர்வ உணர்வு:

பொதுவாக நாம் வெளிப்படுத்தும் உணர்ச்சி மற்றும் உள்ளுணர்வுக்கு சொந்தம் வலது மூளை ஆகும். அதேபோல் மிகவும் ஆழ்ந்த சிந்தனை திறன், கணித சிந்தனை, சமூகத்துடன் ஒன்றி செயல்படுதல் போன்ற விஷயங்களுக்கு இடது பக்க மூளையின் செயல்பாடு தான் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனால் இடதுக்கை பழக்கம் கொண்டவர்கள் எல்லாவற்றிலும் இடதுபக்க உறுப்பை உபயோகிப்படுத்தவே நினைப்பார்கள். எனவே இவர்கள் மூளை வளர்ச்சி என்பது வலதுக்கை பழக்கம் கொண்டவரை விட ஒரு மடங்கு அதிகமாகவே செயல்படும்.

2. பேஸ்பால் ராஜா:

இடதுக்கை பழக்கம் கொண்டவர்கள் கை விசை என்பது மிகவும் சக்திவாய்ந்து காணப்படும். இதனால் தான் கிரிக்கெட்டில் கூட, இடதுக்கை ஆட்டக்காரர்கள் மட்டை வீசும் விதம் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். ஓர் உதாரணத்திற்கு யுவராஜை நாம் சொல்லலாம். அதுவும் கிரிக்கெட்டை விட, பேஸ்பால் விளையாட மிகவும் உதவுவது இடதுக்கை ஆட்டக்காரர்களே. காரணம், ஒரு நிலையில் கைகளை ஓங்கியபடி இவர்கள் நிற்க, பந்தை ஒட்டு மொத்த விசையையும் இடதுகைக்கே தந்து வேகமாக வீசவும் செய்கிறார்கள்.

3. வீடியோ கேம் விளையாடுவது:

நரம்பியல் மன நிபுணர் ஆய்வுப்படி தெரியவருவது என்னவென்றால், இடதுக்கை பழக்கம் கொண்டவர்கள் சிந்தனையை தூண்டும் திறனை மிகவும் அழுத்தமாக கொண்டிருப்பார்களாம். இதனால் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் சக்தி என்பது இடதுக்கை பழக்கம் கொண்டவரிடம் இருக்கிறது. உங்கள் குழந்தை வீடியோ கேம் விளையாடும்போது பார்த்து இருப்பீர்கள். ஆம், அவர்கள் சிந்தனை திறன் என்பது வெற்றியின் இலக்கை நோக்கி விதவிதமான கோணத்தில் யோசிக்கும் இதற்கு காரணம் கூட அவர்கள் இடதுக்கை பழக்கம் கொண்டதால் தான் என்பதை நீங்கள் அறிவீரா!

4. குபேர வாசல் திறந்திருக்கும்:

இலண்டனில் நடந்த ஒரு ஆய்வின்படி தெரியவருவது என்னவென்றால், இடத்துகை பழக்கம் கொண்டவருக்கு 10 முதல் 15 சதவிகித அதிக பணம் புழங்குமாம். இது வேடிக்கையான விஷயம் என்றாலும், இதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால், இடதுக்கை பழக்கம் கொண்டவர்கள் பணத்தை சேமிப்பதில் கெட்டிக்காரராக இருக்கக்கூடும் என ஒரு அர்த்தமும் ஒளிந்திருக்கிறது. அத்துடன் பணம் ஈட்டுவதில் குறிக்கோள் கொண்ட இவர்கள், கடினமாக உழைத்து வருவாய் ஈட்டவும் செய்வார்கள் எனவும் சொல்கிறது.

5. பிரச்சனைக்கு தீர்வு:

இடதுக்கை பழக்கம் கொண்டவர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் கெட்டிக்காரர்கள். ஓர் உதாரணத்திற்கு பில் கிளிண்டன், ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா போன்ற தலைவர்கள் எல்லோரும் இடதுக்கை பழக்கம் கொண்டவர்கள் தான். அதேபோல் கண்டுபிடிப்பாளரான பெஞ்சமின் பிராங்கிளின், ஹென்றி போர்ட் போன்றவர்களும் அவர்கள் சிந்தனையில் உதித்த பிரச்சனைக்கான தீர்வை கண்டே மிகப்பெரிய மேதையாக விளங்கினர்.


இனிமேல் உங்கள் குழந்தைகள் இடதுக்கை பழக்கம் கொண்டவர் என்பதை நீங்கள் அறிந்தால், அவர்களுக்கு இப்படி என்ன தான் திறமை இருக்கிறது என்பதை பார்த்து அதன்வழியே செயல்படுத்த முயலுங்கள். உண்ணுவதை தவிர எந்த பழக்கத்தையும் மாற்ற முயலாதீர்கள். எழுதுவது முதற்கொண்டு...
          நன்றி;விரித்திக          

0 comments:

Post a Comment