குயிலே நீ கூறாயோ!!


குயிலே குயிலே குயிலக்கா.
கூ கூ கூ என கூவி.
கூக்குரல் போட்டு  .
நீ என்னை அழைத்தது ஏனோ.

ஊரெல்லாம் வாழும்.
சோலா குயில்கள் நாங்கள்
சோகமின்றி பாட்டு பாடுகின்றோம்
ஆவலுடன் இளசுகள் யாரும் .
திரும்பி பார்களையே சின்னக்கண்ணு.

நீ குயிலே
எத்தனையோ காவியத்தில்.
அழகாக அளவெடுத்து
எடுப்பாக இருந்தாயே.

காலம்மாறி போகையிலே  .
நலிந்து போனாயோயென 
 எண்ணம் தோன்றுதடி.
 ..
கவசம் தரும் இயற்கையை .
 காக்கின்ற கடவுளின் பண்புகளும்.
காணாமல் போனதால்.
தேய்ந்து போகுமோ என் இனம்.
போற்றிட யாருமில்லை.
இனி என்ன செய்வோம்.

நாகரீகம் வளர.
பண்புகளும் காணாமல் போவதால்.
சொந்தமென உறவு கொள்ளும் .
தன்மையும் இன்றதனை காணவில்லை.
எங்கேதான் போனதுவோ.
எனக்கும் தெரியலை
யே சின்ன குயிலே.
குயிலே நீ கூறாயோ!!

-காலையடி,அகிலன்.

0 comments:

Post a Comment