கடவுளும் பிராத்தனையும்



பிராத்தனை என்பது கடவுளை சென்றடைவதற்கான ஒரு வழியல்ல.கடவுள்தான் பிராத்தனைக்கான ஒருவழி……………
பிராத்தனை என்றால் என்ன?இது கொடு,காப்பாற்று என்பதா?நீங்கள் கடவுளிடம் கேட்பது பிராத்தனை அல்ல!இலவசமான சந்தோசம்.உங்களுக்குத் தேவை ஆரோக்கியம்.அதை வெளிப்படையாக சொல்ல உங்களுக்கு விருப்பமில்லை.முதலில் எதையும் நேர்மையாக உங்களுக்கு என்ன வேண்டும் என்று நேரடியாக கேட்டுப் பழகுங்கள்.
அதன் பிறகு உண்மையான மகிழ்ச்சிக்கும், நலவழ்வுக்கும் என்னவழி என்பதனைப் பார்க்கலாம். நீங்கள் உங்கள் முட்டாள் தனத்தினை பார்த்துக் கொள்ளாமல் கடவுளைப் போய் பார்ப்பதில் எப்பயனுமில்லை.சமயம் சார்ந்து உங்கள் ஆழமான உந்து சக்தி என்னவென்றால்,தெய்வீகம் சார்ந்ததாக அது உங்களுக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது.உங்கள் உச்சத்தை தொடவேண்டும் என்று நீங்கள்மதத்தைஅணுகியதுஇல்லை.வசதி,செல்வவளம்,அதிகாரம்,இன்பம் இவற்றைத் தேடித்தான் பலர் மதத்திற்கு வருகிறார்கள். இதற்கெல்லாம் கடவுள் நல்ல கருவி என்று நீங்கள் கருதிக்கொண்டு இருக்கிறீர்கள்.பதுகாப்பினையோ,பொருளியல் சார்ந்த நலன்களையோ நீங்கள் தேடுகின்றபோது உங்கள் பிராத்தனைக்கு அடித்தளமாக ஆசையும் அச்சமும் இருக்கிறது.
எனவே இந்தப் பிர்ரத்தனையில் எந்தப் பயனும் இருக்காது.
பிராத்தனை முலம் கடவுளைச் சென்றடையலாம் என்று பலரும் கருதுகிறார்கள்.ஆனால் கடவுளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?நீங்கள் உண்மையானவர்களாயின் கடவு ளைப்பற்றி ஒன்றும் தெரியாது என்று ஒப்புக்கொள்வீர்கள்.ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை முறைகளினூடு நீங்கள் வருகிறீர்கள்.நேரடி அனுபவமில்லாத கடவுளை சென்றடையப் பிராத்தனையைப் பயன்படுத்துவது ஒரு மாயையாகக் குட இருக்கலாம்.எண்ணங்களும் சிந்தனைகளும் ஒரு மனிதனுக்குள் ஒரு திறப்பை ஏற்படுத்தினாலும் அவை சில மாயத் தோற்றங்களை ஏற்படுத்தும்.அந்தத் தோற்றங்கள் வளரத்தொடங்கி ஒரு பெரிய பரிமாணததையே ஆட்கொள்ளத் தொடங்கும்
ஏனென்றால்,உண்மையை விட கற்பனைக்கு வலிமை அதிகம்.ஒரு மாயைத் தோற்றம் எதுவாக இருந்தாலும் உருக்கொள்ளக் கூடிய இயல்பு உடையது.நிதர்சன வாழ்க்கையினை விட திரைப்படம் வலிமையாக இருப்பது ஏனெனில் நீங்கள் வேண்டியதை அது மிகைப்படுத்தித் தருகிறது.உங்களுடைய மாயைத் தோற்றங்கள் மிகைப்ப்படும்போது அது உங்கள் வாழ்க்கையை விட வலிமையாகிறது.அதனால்த் தான் நாம் உண்மையான பிராத்தனையில் இருந்து தள்ளி இருக்கிறோம்.ஏனெனில் பிராத்தனை தவறாகப் பயன்படுவதோடு,ஏமாற்றத்திற்கும் இட்டுச் செல்லும்.
உள்நிலையை எட்டுவதற்கும்,தெய்வீகத்தை உணர்வதற்கும் பிராத்தனையோடு,ஒப்பிடுகின்ற பொது தியானம் இன்னும் உகந்த வழியாகத் திகழ்கிறது.எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தெய்வீகத்தொடு ஆழமான நடபுக்கொள்ள உண்மையான பிராத்தனையும் ஒரு வழி.அது ஒரு தன்மை.நாம் பிராத்தனை பூர்வமாக மாறுகின்ற போது அது மிக உன்னத நிலை.ஆனால் உள்நிலையோடு  நீங்கள் தொடர்புக்கு வந்தால் அது நிகழும்.அப்படி வந்துவிட்டால் அந்த அனுபவம் ஆனந்த மயமானது.  
நாம் ஆனந்த மயமாக இருக்கின்ற போது திறந்த மனநிலையில் இருக்கிறோம்..பிராத்தனை என்பது ஒரு வழிப்பாதையாக இருக்க முடியாது.ஆனால்அதுஒருஅற்புதமானஅம்சமாகவும்,கொண்டாட்டத்தினைக் கொண்டு வருகின்ற ஆனந்தமாகவும் அமையும்.அந்த நிலையில் அச்சத்திற்காகவோஅல்லது ஆசைக்காகவோ பிராத்தனை செய்வதில்லை.ஏனென்றால்,
யோகக்கலையின் தந்தை என்று கூறப்படும் பதஞ்சலி சொல்கிறார்,"உண்மையான பிராத்தனைத் தன்மையோடு ஒருவர் இருப்பரே யானால்,பிராத்தனை என்பது கடவுளை சென்றடையும் வழியல்ல.கடவுள் தான் பிராத்தனையை  சென்றடைவதற்கான வழி என உணர முடியும்".
……………………சற்குரு வாசுதேவ்



0 comments:

Post a Comment