நல்லெண்ணெய் (Gingelly Oil), எள் எண்ணெய் (Sesame Oil) -எது சிறந்தது?

[உடல்நலம்] 

நல்லெண்ணெய் (Gingelly Oil)  என்பது தமிழர்கள் தலைமுறைகளாக பயன்படுத்தும் பாரம்பரியமான எண்ணெய். இது மருத்துவ பயன்பாடுகளுக்குமான சிறந்த இயற்கை எண்ணெய்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

அதேவேளையில்  எள் எண்ணெய் (Sesame Oil) என்பதும் நல்லெண்ணெய் (Gingelly Oil) என்பதுக்கும் உள்ள வேறுபாட்டினை நாங்கள் முதலில் அறியவேண்டியவர்களாக உள்ளோம்.

எள் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் (Gingelly Oil) – இரண்டின் வித்தியாசமும் நன்மைகளும்

எள் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் என்பது ஒரே பொருளைப் போல் தோன்றினாலும், இவை தயாரிக்கும் முறையில் முக்கியமான வித்தியாசம் உள்ளது.

நல்லெண்ணெய் (Gingelly Oil)பொதுவாக "செக்கு எண்ணெய்" என அழைக்கப்படும். இந்தியா ,இலங்கை போன்ற நாடுகளில் வழமையாகப் பயன்படுத்தப் படும் , இவ்வகை எண்ணெய்வாட்டாமல் பச்சையான எள் வித்துகளை  , குளிர்சாதன முறையில் (cold-pressed method) அரைத்து எடுக்கப்படுகிறது.

எள் எண்ணெய் (Sesame Oil)இது சுடப்பட்ட எள் விதைகளை பயன்படுத்தி நுட்பமாகச் சுத்திகரிக்கப்படும் எண்ணெய்.

 

நல்லெண்ணெயின் (Gingelly Oil) நன்மைகள்:

1.   சத்து நிறைந்ததுகுறைந்த செயலாக்கத்தால், விட்டமின்கள் E, B, கால்சியம், மக்னீசியம், இரும்பு போன்ற சத்துகள் அதிகமாகக் கிடைக்கும்.

2.   ஆண்டிஆக்ஸிடண்ட்இதில் உள்ள செசமோலின், செசமின் போன்ற பொருட்கள் நம் உடலில் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸைக் குறைக்கும்.

3.   இதய ஆரோக்கியம்பாலிஅன்சாசுரேட்டட் கொழுப்புச்சத்து அதிகம் இருப்பதால், கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தை பாதுகாக்க உதவும்.

4.   நுரையீரல் அழற்சி குறைக்கும்இது சிறந்த அழற்சி தடுப்பு எண்ணெய்.

5.   தோல் நலம்சிறந்த ஈரப்பதம் கொடுக்கும். பாரம்பரிய மருத்துவத்தில் தோலுக்கு, முடிக்கு பூசுவது வழக்கமாக உள்ளது.

குறிப்பு: நல்லெண்ணெயின் புகை புள்ளி (smoke point) குறைவாக இருப்பதால், அதை அதி வறுவல் (deep fry) செய்ய பயன்படுத்தக் கூடாது.

 

எள் எண்ணெயின் (Sesame Oil) நன்மைகள்:

அதிக புகை புள்ளி (High Smoke Point):சுத்திகரிக்கப்பட்ட எள் எண்ணெய் (refined sesame oil) அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடியது. அதனால், ஆழ்கழுகல் (deep frying), வறுத்தல், தாளிக்கல் போன்ற உயர் வெப்ப சமையலுக்கு சிறந்தது.

  • மெதுவான சுவை (Mild Flavor):நல்லெண்ணெயைப் போல அல்லாமல், இதன் சுவை மென்மையானதாக இருப்பதால், உணவில் உள்ள மற்ற சுவைகளை மங்காமல் வைத்துக்கொள்ள உதவுகிறது.

  • நீண்டகால சேமிப்பு (Longer Shelf Life):
    சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கு இயற்கையாகவே நெடுநாள் கெடாமல் நிலைத்திருக்கும் தன்மை உள்ளது.

  • சத்து உறிஞ்சலுக்கு உதவுகிறது (Enhances Nutrient Absorption):
    கொழுப்பு கரைக்கும் விட்டமின்கள் (A, D, E, K) மற்றும் சத்து கூறுகளை உணவிலிருந்து உடல் சிறப்பாக உறிஞ்ச இந்த எண்ணெய் உதவுகிறது.

  • சமையலில் பல்வகை பயன்பாடு (Versatile Culinary Uses):
    வறுத்தல், தாளிக்கல் மட்டுமல்லாது, சாலட்கள், சாஸ், மாரினேட், சூப் போன்றவற்றிலும் இதனை finishing oil ஆகப் பயன்படுத்தலாம்.

  •  

    முக்கிய வேறுபாடு

    நல்லெண்ணெய் (gingelly oil) – அதிக சத்து, அதிக நன்மை, ஆனால் உயர்வெப்ப சமையலுக்கு உகந்ததல்ல.

    எள் எண்ணெய் (sesame oil) – சுத்திகரிக்கப்பட்டது, உயர்வெப்பத்தில் சமையலுக்கு ஏற்றது.

     

    குறிப்பு:

    செக்கு எண்ணெய் என்பது (gingelly oil) நல்லெண்ணெயின் ஒரு வடிவம் தான், ஆனால் சில நேரங்களில் இதில் தூசி, சிறு அணுக்கள் போன்ற மாசுகள் இருக்கக்கூடும்.

    உடலில் பூச உகந்தது. வெப்பம் கொடுத்து மூட்டுகளில் ஒத்தடம் கொடுக்கலாம்.

    முடிவாக கூறினால்  அதிக வெப்பத்தில் சமைக்கசுத்திகரிக்கப்பட்ட (Sesame Oil) எள் எண்ணெயே சிறந்த தேர்வாகும்.

    நன்றி: DR.பத்மா சோமலிங்கம்- கனடா


    0 comments:

    Post a Comment