"தமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி: 15

  [ஒரு அலசல்- தமிழிலும் ஆங்கிலத்திலும்]மனிதன் உட்பட எல்லா உயிரிகளும் தெய்வீக சக்திகளால் படைக்கப் பட்டவையே என்பது சுமேரியர்களின் நம்பிக்கை. அவர்கள் நம்பிக்கையில் இயற்கையும் தெய்வமும் ஒன்றே. சுமேரியர்கள் ஆதியிலிருந்து அல்லது கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் இருந்தே, கடலே முதலில் உலகில் இருந்ததாக நம்பினார்கள். அதை கடல் தேவதை நம்மா / நம்மு (Goddess of the Primordial Sea: Namma / Nammu ] என அழைத்தார்கள். சுமேரியர்களின் அண்டவியல் நம்முவில் இருந்து ஆரம்பித்து, பிரபஞ்சத்தில் வானுலகமாகிய நட்சத்திரம், கிரகங்கள் போன்றவை தோன்றியதை ஒரு  வரிசைக் கிரமத்தில் சொல்கிறது. அவளுடன் எந்த ஒரு ஆண் தெய்வத்தையோ அல்லது கணவனையோ தொடர்பு படுத்தாமையால், அண்டத்தின் முதலாவது படைப்பு பால் வழியல்லாத இனபெருக்கம் மூலம் நடைபெற்றதாக நம்பலாம். இந்த கடல் தேவதை தனது உடம்பில் இருந்து, வானமாகிய "அன்" (An / Anu God of the Heavens) என்ற தேவனையும் "கி" (Ki, Goddess of the Earth) என்ற பூமியாகிய பெண் தேவதையையும் உலகில் முதலில் தோற்றுவித்தாள் அல்லது அவைகளை பெற்றெடுத்தாள்.

 

அதன் பிற்பாடு, "அன்",  "கி" இவர்களின் பாலியல் உறவு மூலம்  "என்-லில்" (Enlil, God of Air and Storms) என்ற காற்றுக் கடவுள் பிறந்தார். பூமித்தாய் வானம் என்னும் ஆடவனோடுசேர்க்கைவைத்துக் கொண்டாள் என கிரேக்க மக்கள் புனைந்த ஒரு கதையும் இதை உறுதிப்படுத்துவது போல கூறுகிறது. பண்டைய சுமேரிய நூலின் படி, இன்று பெயரளவில் சுமேரியன் குடும்ப பரம்பரைக்கு தலைமை தாங்கும் "அனு" க்கு இரண்டு மகன்கள் இருந்து உள்ளார்கள். அவர்கள் காற்றுக் கடவுள் - என்லில், நீர் கடவுள் - என்கி [Enki (Ea / எயா / ஈஅ)] ஆவார். மேலே சுட்டிக் காட்டியவாறு, என்லில்லின் தாய், அனுவின் மனைவி "கி"[Ki] ஆகும். ஆனால் என்கியின் தாய், அனுவின் வைப்பாட்டி [concubine] அல்லது இன்னொரு துணைவி [consort], அன்டு / அன்டும் / நம்மு {Antu / Antum / Nammu} ஆகும். சுமேரிய பழங் கதையின் படி, வானும் பூமியும் இணைபிரியாமல் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவாறு, என்லில் பிறக்கும் மட்டும் இருந்தார்கள். ஆனால் என்லில் வானையும் பூமியையும் இரண்டு வெவ்வேறு பகுதிகளாக பிளந்தான். அதாவது காற்று [என்லில் / Enlil] மலைகளுக்கு இடையில் இருட்டில் கலக்க ஆரம்பித்த போது, அது வானையும் பூமியையும் பிரித்து எடுத்தது என கொள்ளலாம். அன் / அனு வானை கொண்டு சென்றது."கி" என்லில் உடன் சேர்ந்து பூமியை எடுத்தது.

 

சாமுவேல் நோவா கிரமர்  "கி" யை, சுமேரியர்களின் தாய் தெய்வம் நின்-ஹர்சக் [Ninhursag] உடன் அடையாளம் கண்டு இரண்டும் ஒன்றே எனக் கருதுகிறார். தனது சகோதரி - காதலி "கி" இடம் இருந்து, அன் / அனு பிரிந்ததால், அவன் துக்கம் தாளாது சிந்திய கண்ணீர்கள் ஆதி கடல் தேவதை நம்முவின் உப்பு நீருடன் கலக்கையில் என்கி [Enki / Ea] தனது சகோதரி எரேஸ் கி கல் [Ereshkigal] உடன் பிறந்தார். ஆகவே என்கி அனுவினதும் நம்முவினதும் மகன் என சாமுவேல் நோவா கிரமர் [Samuel Noah Kramer] தனது புத்தாகத்தில் கூறுகிறார். வானும் பூமியும் பிரிந்த பின் தோன்றிய அவர்களுக்கிடையான வெளியை காற்று / வளிமண்டலம் நிரப்பியது. மேலும் உலகை நன்றாக்க என்லில் சந்திர கடவுள் - நன்னா [Nanna] வை ஈன்றெடுத்தார்.  உண்மையில், பெண் தேவதை நின்லில் [Ninlil] உடனான என்லில் லின் பாலியல் வல்லுறவு மூலம் தான் சந்திரக் கடவுள் அவதரித்தார். மேலும் நின்லில்லை, என்லில் பாதாள உலகத்திற்கு துரத்தி விட்டார். ஆகவே சந்திரக் கடவுள் இருட்டில் தான் பிறந்தார். எனினும் என்லில் மூன்று பாதாள உலகத்தவர் போல ஆள்மாறாட்டம் செய்து, ஒவ்வொரு முறையும் நின்லில்லை கர்ப்பம் தரிக்கச் செய்தார். இவ்வாறு நின்லில் பாதாள உலகத்தில், மூன்று பேரை பெற்றெடுத்தாள். அதன் பின் அவள் நன்னாவை தன்னிடம் இருந்து விட்டு விட்டாள். ஆகவே நன்னா வானிற்கு, பாதாள உலகத்தில் இருந்து எழுந்து சென்றது, நன்னா பின் நின்கல் [Ningal] என்ற பெண் தேவதையை மணந்து அதன் மூலம், சூரிய கடவுள் - உடு / ஷமாஷ் [Utu / Shamash] வை ஈன்றெடுத்தார். இவை உலகிற்கு நல்ல வெளிச்சம் கொடுக்க என எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது காற்றின் விரிவடைதலால் வான் மிக உயரத்திற்கு போய் விட்டது. பூமி அதன் கீழ்  திட தரையாக, அங்கு சூரியனும் சந்திரனும் வெளிச்சத்தை கொடுத்தன. இவ்வாறாக சுமேரியர் வாழ்வில், கடல், காற்று, பூமி, ஆகாயம் இவையனைத்தும் கடவுளின் அம்சங்களே. மற்றும் என்லில் எல்லா உயிர் இனங்களையும் தோற்றுவித்ததுடன் அவரே மனிதர்கள் பாவிக்கும் எல்லா கருவிகளையும் கண்டு பிடித்து, அவ்வற்றை எப்படி கையாளுவது என்பதையும் மனிதர்களுக்கு போதித்தவரும் ஆவார். எனினும் என்லில் மனிதனை உருவாக்க வில்லை. அதை, என்கியே செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

 

என்றாலும் பிற்காலத்தில், சுமேரியாவை வென்ற அக்கடியர்களால் (Akkadians) எழுதப் பட்டஎனும எலிஷ்’ (Enuma Elish / ஈனும் -மா - எல் - இசு'] என்னும் நூலில், டியாமத் [Tiamat], நம்முவின் பங்கை அல்லது இடத்தை எடுத்து கொண்டார். இந்த பிற்கால நம்பிக்கையில் உலகின் முதல் மூதாதையாக வருபவர்கள் தேவ ஜோடிகளானஅஸ்பு’ (Aspu / அப்சு) என்ற ஆணும் டியாமத் (Tiamat) என்ற பெண்ணும் ஆகும். இங்கு, அப்சு, ஒருவேளை, நிலத்தடி பள்ளம் மற்றும் நிலத்தடி நீரின் / நன்னீரின் ஆண் உருவமாக இருக்கலாம். அதேபோல, டியாமத் [தியாமட்] என்பது அதே பள்ளம் அல்லது பழமையான கடல், உப்பு நீர் ஆகும். இவை இரண்டின் கலப்பிலேயே, அல்லது புனித திருமணத்திலேயே படைத்தல் ஆரம்பிக்கிறது எனறு அக்கடியர்களின் புராணக் கதை ஆரம்பிக்கிறது. இந்த எனும எலிஷ் [எனுமா எலிஷ்] என்ற காவியம் பின் வருமாறு தொடங்குகிறது:

 

"உயர உள்ள வானம் ஒரு பெயரையும் பெறாத பொழுது [இல்லாத பொழுது]

கீழே உள்ள பூமி ஒரு பெயரையும் பெறாத பொழுது [இல்லாத பொழுது]

முதல் ஊழிசார்ந்த அப்சு அவர்களைப் பெற்றெடுத்தார்

 அது பெருங்குழப்பம், டியாமத், இருவரின் தாய் ......................................... "

 

 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

இணைத்த படங்கள்:

Nammu,the Goddess of the Primordial Sea /The Sumerian cosmology /Enki & Ninlil /NANNA AND NINGAL]

பகுதி 16 தொடரும்

  ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning

*அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

An analysis of history of Tamil religion – PART:15

[ In English and Tamil]

 

 

The Sumerian cosmogony begins with the primordial sea called, Nammu, the mother of all things and describes the order in which celestial bodies in the universe came into being. She [Nammu] created the heavens and earth from her own body / giving birth to "An", the Sky God, and "Ki", the Earth Goddess. No husband or male god is attested in connection with Namma / Nammu, thus leading to the belief that "the first cosmic production is asexual".

 

The reading and spelling of Namma's name has been subject to some research. "An", the sky, is a hard metallic shell lies on the earth, "ki". According to the ancient Sumerian texts, the Sumerian god, "An / Anu", the “supreme Lord of the Sky”, the currently reigning titular head of the Sumerian Family Tree, had two sons. They were "Enki / Ea", Lord of the Earth and Waters (whose mother was Antu / Antum  / Nammu], and "Enlil / Ilu", Lord of the Air and Lord of the Command (whose mother was Ki).

 

Further, According to legends,  heaven and earth were once inseparable until Enlil was born; Enlil lifts "An" away from "ki", filling the space in which humans live. The space is filled with lil (atmosphere).The brighter parts of the lil form the sun, moon, and stars. For example, The moon was created when Enlil raped the goddess Ninlil and was banished to the underworld.  As this would have meant the moon god, Nanna, would have been born in darkness instead of lighting the sky, Enlil impersonated three underworld figures and impregnated Ninlil each time. This way, Ninlil gave birth to three substitutes in the underworld for Nanna, leaving the moon free to ascend to heaven. Nanna eventually married Ningal, a moon goddess, who gave birth to the sun god Utu, presumably to make the light brighter. By this time the world had come into being, for the sky (An) by expansion of air (Enlil) had reached a great height, and the earth (Ki) had made a solid floor below, with sun and moon to bring light. Enki was born, along with his sister Ereshkigal, when Anu's tears — shed for for his separated sister-lover Ki (earth) — met the salt waters of the primeval sea goddess Nammu. Hence Enki was the son of the god An & of the goddess Nammu (Kramer 1979: 28-29, 43) [ Antu / Antum / Nammu], a concubine or another consort of Anu's was his mother?]  Enki was the keeper of the holy powers called 'Me', the gifts of civilized living. Also Samuel Noah Kramer identifies "Ki" with the Sumerian mother goddess Ninhursag and claims that they were originally the same figure. Enlil also creates all living things. He also invents all the tools used by man and teaches him to use them. But it is not Enlil that creates man; it is Enki !

 

In later tradition, namely in The Enuma Elish (also known as The Seven Tablets of Creation), the Babylonian creation myth whose title is derived from the opening lines of the piece, "When on High", begins like this:

 

"When in the height heaven was not named,

And the earth beneath did not yet bear a name,

And the primeval Apsu, who begat them,

And chaos, Tiamut, the mother of them both

Their waters were mingled together,

And no field was formed, no marsh was to be seen;

When of the gods none had been called into being,

And none bore a name, and no destinies were ordained;

Then were created the gods in the midst of heaven,

Lahmu and Lahamu were called into being... "

 

Here, "Tiamat" takes over the role of "Namma" as primeval ocean.  It has about a thousand lines and is recorded in Akkadian on seven clay tablets, each holding between 115 and 170 lines of Sumero-Akkadian cuneiform script. The story, concerns the birth of the gods and the creation of the universe and human beings. It Says, In the beginning, there was only undifferentiated water swirling in chaos. Out of this swirl, the waters divided into sweet, fresh water, known as the god Apsu, and salty bitter water, the goddess Tiamat. Once differentiated, the union of these two entities gave birth to the younger gods & so on.

 

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

Part 16 Will follow

 

[Pictures attached:

 

Nammu, the Goddess of the Primordial Sea, She personifies the sweet fertile waters, and describe Her as "The Mother who gave birth to Heaven and Earth",

The Sumerian cosmology,

Enki & Ninlil,

Nanna (Nannar) and Ninga]

0 comments:

Post a Comment