"அம்மா"

"என் மனக் கோயிலின் வாசலிலே

நான் வணங்கும் தெய்வம் தாயம்மா

என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா!"

"என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா

நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா

என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடி நீயம்மா!"

 

 

"என் உழைப்பும் உயர்வும் உன் கனவேயம்மா

உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பேயம்மா

நான் மீண்டும் வேண்டுவது உன் கருவறையேயம்மா!"

"வேரோடி முளைத்தலும் விளாத்தி விளாத்தியினமே

பாரோடி பறந்தாலும் உன்சிறகே அம்மா

என் வாழ்விற்கு ஓளிவிளக்கும் நீயேயம்மா!"

 

"தாயின் காலடியும் ஒரு ஆலயமே

தாலாட்டு தரும் ஒரு சொர்க்கமே 

அன்பு சந்நிதியாய் அதெனெக்கு  நிம்மதியே!"

"மண்ணும் பெண்ணும்  வாழ்வின் அத்திவாரம்

தாய்மை பண்பினை போற்றிடும் கற்புடைமை

தலைமுறை தொடரும் சங்கிலி கோர்வையேயம்மா!"

"அம்மாவென்று அழைப்பதும் உன் வரமே

என்றும் நான் உன் மழலையேயம்மா

இயற்கை உனக்கு தந்த குழந்தையேயம்மா!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment