"தமிழர் சமயமும் அதன் வரலாறும்” பகுதி: 25

 [தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு அலசல்]


இந்தியாவின் பெரும்பான்மையான பழங்குடி மக்கள், தமிழர்கள் உள்ளடங்கிய திராவிட  மொழி பேசுபவர்கள் ஆகும்.  இவர்கள் மிக பழைய காலத்தில், ஆப்ரிகாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என நம்பப்படுகிறதுஆகவே, ஆப்ரிகாவில் நிலவிய பண்பாடு போல, பண்டைய இந்தியாவும் பெரும்பாலும் தாய்வழி சமூகமாகவே இருந்தது. எனவே, அப்போதைய இந்த மக்கள் பெண்ணை மையப்படுத்தி வாழ்ந்தார்கள். அதாவது குழுக் குழுவாய் வாழ்ந்த மனித சமூகத்தில் பெண்ணே குழுவின் தலைவியாக இருந்தாள். இவர்கள் பிறப்பின் அதிசயத்தை, கால மாற்றத்தை, நிலவின் தேய்தல் வளர்தலை, மறுபிறப்பை, தெய்விகத்தை அல்லது ஈடற்ற நிலையை [mysteries of birth, the seasons and lunar cycles, rebirth and  transcendence] கொண்டாடினார்கள். கருவளம், ஆண்மை மற்றும் மறுமை [fertility, virility and the after-life] போன்றவற்றுடன் தொடர்புடைய ஆன்மீக சக்திகளை, வரலாற்றின் ஆரம்ப  காலத்தில் இருந்தே வழிபட்டார்கள். அவர்கள் தமது சடங்குகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட மூலிகைகள், மலர்கள், செடிகள் மற்றும் மரங்கள் பாவித்தார்கள். அது மட்டும் அல்ல, மெய் மறந்த இன்ப நிலையை அல்லது பரவச நிலையை [trance states] தூண்ட  தாவர மருந்துகள் அவர்களுக்கு உதவியது. ஆழ்ந்த உட்பொருளுடைய, மறை ஆற்றலுடைய சொற் றொடர்கள், சித்திரங்கள், அபிநயங்கள் [முத்திரைகள்] மற்றும் பாலியல் செயல் முறைகள் [mystic phrases, diagrams and gestures, and by sexual acts] சேர்ந்த ஒன்றாக அவர்களின் வழிபாடு இருந்தது.

மேலும் பெரும்பாலான பழங்குடி மக்கள் போன்று இவர்களுக்கும் விரும்பிய பலாபலன் கொடுக்கும் மந்திரச் சொற்களில், வசீகரத்தில் மற்றும் தாயத்துக்களில்  [efficacy of spells,  charms and amulets] நம்பிக்கை இருந்தது.

இந்தியாவில், இந்த மக்களின் நாகரிகம் முதலாவதாக, சிந்து சம வெளியில் கி மு 3300 க்கும் - கி மு 2600 க்கும் இடைப் பட்ட காலப் பகுதியில் இன்றைய பாகிஸ்தானிலுள்ள  சிந்து நதியை அண்டித்  தழைத் தோங்கி, கி மு  2600-1900 ஆண்டுகளில்  ஹரப்பாவில்  உச்ச நிலையில் இருந்து, பின் சடுதியாக அழிந்து போய்விட்டது. புறநானுறு 202 இல்,

"கோடி பல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய நீடுநிலை அரை யத்துக் கேடும் கேளினி"

என்ற வரியில் கோடிக் கணக்கில் பொருள் கொடுத்து உன் முன்னோர்களுக்கு உதவி, உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம் ஏன் அழிந்தது என்று கூறுகிறேன் என்கிறார். அரையம் என்றால், பெரும் நகரம் என்று பொருள். அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக் கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார். அது மட்டும் அல்ல, சிந்து வெளிப் பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும்

இருந்தததாகக் கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின் அடியிலுள்ள படைகள் என்பன இக்கூற்றுக்கான சான்றுகளாகும். இங்கே சிறிதும்  பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ஊர்களும், 6 மிகப் பெரிய நகரங்களும் இருந்தன. இவைகளில் குறிப்பிடத் தக்கவை; ஹரப்பா, மொஹெஞ்ச தாரோ, லோத்தல், தோலாவிரா,

கலிபங்கன், ராக்கிகார்கி, ரூப்பார் [Harappa, Mohenjo-daro, Lothal, Dholavira, Kalibangan, Rakhigarhi, Rupar] போன்றவை ஆகும். எனினும் பொதுவாக சிந்து வெளி நாகரிகம்,  ஹரப்பா நாகரிகம் என்றே கூறுவது வழக்கம். இங்கே, "ஹரப்பா" என்ற சொல்லை ஹர+அப்பா என பிரிக்கலாம். இங்கு ஹர என்பது சிவா என்பதையும் ['ஹர ஹரோ ஹரா' என்பதே எளிய மக்களின் வழிபாட்டில் திரிந்து இணைந்து அரோகரா ஆனது. இங்கு ஹர என்பது பொதுவாக சிவனை குறிக்கிறது] அப்பா என்பது தந்தையையும் குறிக்கிறது. எனவே, ஹரப்பா நகரம் சிவாவிற்காக அர்ப்பணிக்கப் பட்ட  ஒரு இடமாக நாம் கருதலாம். இந்த சிவாவை நாம் மேலும் இந்திய பண்பாட்டின் தந்தை என குறிப்பிடலாம்.  இப்படி புகழ் வாய்ந்த இந்த நாகரிகம் இந்தியாவிற்குள் புகுந்த ஆரியரின் தாக்குதலாலும் மேலும் வறட்சியாலும் கி மு 1700 ஆண்டு அளவில் முற்றாக அழிவுற்றது.

எப்படியாயினும், சிவாவை மையப்படுத்திய சிந்து வெளி வழிபாடு, திராவிட இந்தியாவில், குறிப்பாக தமிழர் மத்தியில் இன்றும், இன்னும் போற்றிப் பேணப் படுகிறது. சிவ வழிபாடு திராவிட மக்களுடையது என்பதை ஆரியர்களின் மனப் போக்கில் இருந்து நாம் தெளிவாக அறியலாம். வடவேதங்களில் 'லிங்கம்' என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில் தான்

குறிப்பிடப் படுகிறது. இந்த அடிப்படையில் சிவ லிங்கத்தை  சிசின தேவன்என்று மிக இழிவாக வட மொழியான, கி மு 1500-1100 ஆண்டு அளவில் தொகுக்கப் பட்ட ரிக் வேதம்  [இருக்கு வேதம்] கூறுகிறது. இதில், 7.21.5 பாடலில்

"Let our true God subdue the hostile rabble: let not the lewd [Shishan Deva] approach our holy worship." என்று கூறுகிறது. அதாவது "எங்கள் உண்மையான கடவுள், இந்திரன், எமது எதிரியான ஒழுங்கீனமான கும்பலை அடக்கட்டும்: ஓழுக்கங் கெட்ட  ஆண் குறியை வணங்கும் கும்பல், எமது புனித இடத்தை ஊடுருவதை தடுக்கட்டும்"

ன்கிறது. எது எப்படியாயினும் பிந்திய வடவேதங்களில், சிவா அதிகரித்த முக்கியத்துவம் பெறுகிறார். இது அவர்கள் காலப் போக்கில் சைவத்தையும் உள்வாங்கியதை எடுத்துக்காட்டுகிறது.

சிந்து வெளியில் எந்த ஒரு கோயிலின் இடிபாடுகளோ, வழிபாட்டு படையல் மேடைகளோ, கடவுளின் பெரிய உருவச் சிலைகளோ அல்லது  நீண்ட ஆவணங்களோ இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே அங்கு கண்டு எடுக்கப் படட, மத முக்கியத்துவம் வாய்ந்த  சிறு உருவச் சிலைகள் மற்றும் முத்திரைகளில் [figurines and seals] மட்டுமே, அவர்களின் மத நடை  முறைகளை அல்லது மத சடங்கு முறைகளை அறிய நாம் தங்கி இருக்க வேண்டியுள்ளது. எனினும் அங்கு ஒரு இலக்கியமும் இது வரை தோண்டி எடுக்கப் படாத நிலையிலும், மேலும் முத்திரைகளில் காணப் பட்ட சிறிய குறியீடுகளும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக பொருள் விளக்கம் செய்யப் படாத நிலையிலும், அவர்களின் மதத்தின் பொது

கருத்துக்களின் தன்மைகளையோ அல்லது தத்துவத்தின் தன்மைகளையோ சரியாக புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. அவர்கள் அதிகமாக, அழுக்கிச் சிதைந்து போக்க கூடிய அல்லது உக்கிப் போக்க கூடிய மரப் பட்டை, தென்னை - பனை போன்ற ஒற்றைத்தடி மரவகை ஒன்றின் ஓலைகள், போன்றவற்றில் ஒருவேளை அவர்கள் எழுதி இருக்கலாம்? ஆகவே அங்கு இது வரை தோண்டி எடுக்கப் பட்ட

 

1] பசுபதி முத்திரை,

2] நான்கு அங்குல உயரம் உள்ள வெண்கல நர்த்தகி,

3]குந்தி இருக்கும் பெண் மரச் சிற்பம்,

4] பெருவாரியான அரை நிர்வாண பெண் சிறு உருவச் சிலைகள்,

5] தலையில் கொம்புடனும் இரு கையில் வளையளுடனும் ஒரு அரச மரத்தின் கீழ் நின்று, முழங் காலில் நின்று வழிபடுபவரை உற்றுப் பார்க்கும் தெய்வம் சித்தரிக்கப் பட்ட  முத்திரை,

6]மனிதவுரு கொடுக்கப் பட்ட, தலையில் மூன்று புடைப்பு அல்லது கொம்பு போன்ற ஒன்றை கொண்ட  நீண்ட உருவம் உள்ள, சிந்து வெளி முத்திரையில் வடிக்கப் படட ஒரு தெய்வம்,

7] ஒரு வகைச் சுண்ணாம்புக்கல்லால் செய்யப்படட, ஒரு மதக் குருவாக கருதப்படும், மார்பளவு சிறு மனிதச் சிலை,

 

8]முத்திரையிலும் மற்றும் மட் கலத்திலும் பொறிக்கப்பட்ட  பெருவாரியான மிருக உருவங்கள் போன்றவை அவர்களின் மத சடங்கு மற்றும் மத கொண்டாட்டங்கள் பற்றிய தெளிவான உள் பார்வையை எமக்கு  தரலாம்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி 26 தொடரும்...

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning

 *அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

[இணைத்த படங்கள்: பசுபதி முத்திரை, நான்கு அங்குல உயரம் உள்ள வெண்கல நர்த்தகி, குந்தி இருக்கும் பெண் மரச் சிற்பம், லிங்க வழிபாடு]


An analysis of history of Tamil religion – PART:25

[ In English and Tamil]

 

The majority of India's indigenous tribal people are Dravidian, a linguistic group that includes Tamil. Originally, in the distant archaic past, these people must have migrated out of Africa. Hence, as in Africa, the culture of ancient India was largely matriarchal. Its people celebrated the spiritual mysteries of birth, the seasons and lunar cycles, renewal, rebirth and transcendence. They worshipped spiritual powers associated with fertility, virility and the after-life. They have done so since the dawn of history. They used selected herbs, flowers and trees in their rituals and plant drugs to help induce trance states. Worship was accompanied by mystic phrases, diagrams and gestures, and by sexual acts. Like most tribal people world-wide, they believed in the efficacy of spells, charms and amulets.

 

The first civilisation of such people in India began and evolved in the valley of the Indus (Sindhu) river in the period 3300-2600 BC. These settlements evolved into the Mature Harappan civilisation in the period 2600 - 1900 BC. It was located in the northwestern region of the Indian subcontinent, consisting of what is now mainly present -day Pakistan and northwest India. The major urban centers of the Indus valley civilisation were  Harappa, Mohenjo-Daro, Lothal, Dholavira, Kalibangan, Rakhigarhi, Rupar, etc. In fact, the word “hara” refers to Shiva, and “appa” means father in the local language. The city of Harappa in the Indus Valley  can thus be considered a place dedicated to Shiva, who by many today is considered the father of Indian civilisation. These Indus Valley Civilisation was brought to an end [& were destroyed] by a combination of attacks by Aryan and a decline caused by an overextension of resources by 1700 BC. However, the Indus Valley religious ideas which centered round the worship of Siva continue to be cherished in Dravidian India, and

particularly in the Tamil countries, to this day. The clearest evidence of the Dravidian origin of Siva worship is found in the Aryan attitude towards Linga and the God whom it symbolises. In Rig Veda 7.21.5 we have the

significant statement:

"Let our true God subdue the hostile rabble: let not the lewd [Shishan Deva] approach our holy worship."

The Sanskrit word here is Shishan + Deva which means male sexual organ [Penis] Worshipers ['Let those whose deity is the Phallus not penetrate our Sanctuary"] Siva assumes increased importance only in the  later Vedas. In the absence of ruins of any temple, alter or statue of gods as well as any long documents in Harappan writing, We have to relay only on figurines and seals of religious significance to have an idea of  practical or ritualistic aspects of their religious belief only, as the conceptual or philosophical aspects of their religious belief seems to be difficult to know as even the scripts on the seals have not yet been deciphered

fully by the scholars as well as lack of long written descriptions. The complete absence of any long documents in Harappan writing suggests that these people generally used perishable materials such as bark, palm -

leaves, cotton or leather to write on. Excavated terracotta figurines from Indus valley civilisation  such as,


1] Pashupati or "Lord of Beasts",

2] four inch high  bronze figure of a dancing girl,

3] wood-sculpture of a squatting female ,

4] A large number of semi - nude woman figurines,

5] A seal depicts a deity with a horned headdress and bangles on both arms, standing in a pipal tree and looking down on a kneeling worshiper,

6] A deity is pictured on Indus Valley tablets as an elongated anthropomorphic figure with three protuberances in the head.

7] a steatite bust of a man thought to be a priest, and

8] high usage of animals and animal forms in the seals, and pottery

may provide a possible insight into the ritual and ceremony as well as religious belief of these people.

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

Part 26 Will follow

[ictures attached: Pashupati, dancing girl, a squatting female, Linga worship]

0 comments:

Post a Comment