"தமிழர் சமயமும் அதன் வரலாறும்” பகுதி: 27

[ஒரு அலசல் தமிழிலும் ஆங்கிலத்திலும்]

 


இன்று இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் மனித வடிவ கடுமட் சிறு உருவச் சிலை [terracotta figurines] காணப் படுகிறது. அவை அந்தந்த பகுதி பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கின்றன. உதாரணமாக, இப்படியான உருவச் சிலைகள் தெய்வத்திற்கு படைக்கப் படுகின்றன. சிந்து வெளியில் கண்டு பிடிக்கப்  பட்ட  பெருவாரியான, பலதரப்பட்ட   கைவினைப் பொருட்கள், ஒன்றில் யோகாவின் இயல்பை அல்லது தாந்த்ரீக இயல்பை கொண்டுள்ளன. இவை சிந்து வெளி மக்கள் ஒரு வித உருவ வழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதை எமக்கு எடுத்து உரைக்கிறது. தாந்த்ரீகம் பொதுவாக பெண்களுக்கு உயர் மதிப்பு, மரியாதை கொடுப்பதுடன், அவர்களின் இனவிருத்தி அல்லது குழந்தை பெரும் ஆற்றலால், சமூகத்தில் அவர்களுக்கு ஒரு தனி இடத்தை கொடுக்கிறது. இதனால், சிந்து வெளியில் தோண்டி எடுக்கப் பட்ட சிறு உருவச் சிலைகளில் பெண்களின் சிலைகளே கூடுதலாக காணப்படுகிறது. மேலும் பெண் மக்களில் காணப்பட்ட  மரபணு உறவில் இருந்து, புதிதாக திருமணம் செய்த தம்பதிகள் பொதுவாக பெண்ணின் குடும்பத்தாருடன் வாழ்ந்தார்கள் என தொல் பொருள் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஹரப்பா, மொஹெஞ்சதாரோ பகுதிகளில் உள்ள மனித புதை குழிகளை [கல்லறைகளை] ஆய்வு செய்த பொழுது, கல்யாணமான ஆண், தனது மனைவியின் குடும்பத்தாருடன் புதைக்கப் பட்டது தெரிய வந்தது. அங்கு கண்டு பிடிக்கப் பட்ட அதிகமான பெண் சிலைகளின் உடை

அரைகுறையாகச் சித்ததரிக்கப் பட்டிருந்த போதிலும், எல்லாப் படைப்புகளுக்கும் ஆதார சுருதியான பெண் சக்தியாக மக்கள் வணங்கிய தெய்வம், ஒட்டியாணம் போன்ற அகன்ற இடுப்புக் கச்சையையும் பல கழுத்து மாலைகளையும் அணிந்துள்ளன. அத்துடன்,விசிறி போன்ற தலை அலங்காரமும் அம்மனை அணி செய்கின்றன. ஏராளமான சிலைகளின் மேல் புகை படிந்து இருக்கிறது. சாம்பிராணி போன்ற பூசைப்பொருட்களால் வழிபாடு செய்திருக்கலாம் என்று இந்தப் புகைப் படலம் சொல்கிறது.  

 

சிந்துவெளி நாகரிகத்தை வளர்த்த மக்கள் பெண் தெய்வ வழிபாட்டை யுடையராயிருந்தனர் என்பது விந்தையான தன்று. பண்டை நாகரிகம் நிலவிய எகிப்து, சுமேரியா முதலிய  இடங்களிலும் பெண் தெய்வங்கள் முக்கியமானவையாக விளங்கின என்பது குறிப்படத் தக்கது. எந்த ஒரு சமுதாயத்திலும் தலைமை தெய்வம் பெண்ணாக இருந்தால் அங்கு  பெண்கள்  கட்டாயம் நாளாந்த வாழ்வில் மதிப்பளிக்கப் படுவார்கள். அத்துடன் சர் ஜான் மார்ஷல் சிந்து வெளி சமயத்தில் பெண் இயல்புகள் ஆண் இயல்புகளை விட உயர இல்லா  விட்டாலும்  குறைந்தது சமமாக இருந்து உள்ளது என குறிப்பிட்டு உள்ளார். சில சிலைகள் தாய் தனது முலையிலிருந்து குழந்தைக்கு பாலூட்டுவதை காட்டுகிறது. மற்றும் இன்னும்  ஒரு சிலையில் பெண்ணின் கருப்பையில் இருந்து [வயிற்றிலிருந்து] செடி ஒன்று வளர்ந்திருக்கிறது. இது அதிகமாக பூமா தேவியை குறிக்கலாம். மேலும் எண்ணற்ற சுடுமண்  தாய் தெய்வ சிலைகள் கண்டு பிடிக்கப் பட்டதால், அவை அதிகமாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபட்டு இருக்கலாம். எனவே இந்த சிந்து வெளி சமூகம் ஒரு தாய் வழி சமூகமாக  கட்டாயம் இருந்து இருக்கும். இயற்கையின் உற்பத்தி இனப்பெருக்க ஆற்றலையும் தாய் தெய்வத்தையும்  மையமாக வைத்து இவர்களின் மத வழி பாடு பொதுவாக அமைந்து  இருந்தது. சிந்து வெளி முத்திரையிலும் மற்றும்  மடபண்டங்களிலும் மிருகங்களின் உருவங்கள் அதிகமாக காணப்படுவதில் இருந்து, ஹரப்பா நாகரிகம் மும்மரமாக நகரமய மாக்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் இயற்கைக்கும் சுற்றாடலிற்கும், தமது பண்பாட்டில், நாகரிகத்தில் முக்கிய இடம் கொடுத்தார்கள் என்பது அறிய முடிகிறது.  அத்துடன்  அங்கு மிருக வழிபாடும் இருந்திருக்கலாம்? எனவே அவர்களின் மத நம்பிக்கையும் வழிபாடும் அதை ஓத்தே இருக்கும் என நாம் ஊகிக்கலாம். சிந்துவெளியிற் கண்டெடுக்கப்  பட்ட ஓர் இலச்சினையில் இரு அரச மரக்கிளைகளுக் கிடையிலே, தலையில் கொம்புகளுடன் [நிற்கும் மூல - சிவாக இருக்கலாம் ?] ஆடைகளின்றி, நிர்வாணமாக  தெய்வமொன்று  காணப் படுகின்றது. நீண்ட கூந்தலும்  இரு கைகளில் காப்புகளும் [அல்லது பெண் தெய்வமாக இருக்கலாம்?] காணப்படுகின்றன. அத் தெய்வம் தனக்கு முன் முழங்காளில் நிற்கும் [அல்லது  அமர்ந்து இருக்கும்] அடியாரை [அல்லது மத குருவை] உற்றுப் பார்க்கிறது. மேலும் பல மக்கள் உருவங்களும் விலங்குருவங்களும் அத் தெய்வத்திற்கு அடிபணிந்து  அஞ்சலி செய்து நிற்கின்றன. இது [அரச] மர வழிபாடை [அல்லது சிவ / சக்தி வழிபாடை] குறிக்கலாம்.

 

பெண் சிலைகளுடன் ஒப்பிடும் போது ஆண் சிலைகள் மிக மிக குறைவாகவே அங்கு காணப்படுகிறது. கூடுதலான ஆண் சிலைகள் அம்மணமாக இருக்கின்றபடியால், அவர்களின் அணிகலன்களைப் பற்றி சிறிதளவே கூறக் கூடியதாக உள்ளது. ஆண் சிலைகள் சம்பந்தப் பட்ட  சடங்குகள் பொதுவாக  அவர்களின் வலிமை மற்றும் வீரியத்துடன்  [ஆண்மையுடன்] தொடர்புடையதாக இருப்பதால், அப்படி நிர்வாணமாக வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். எனவே, பண்டைய ஹரப்பா, மொஹெஞ்சதாரோ நகரங்களை உள்ளடக்கிய சிந்து வெளி நாகரிகத்தின் ஆன்மீக அணுகுமுறை பொதுவாக தாந்த்ரீக [தாந்திர /தந்த்ரா] முறையாக இருந்தன. இது ஆரியர்களின் வேத வழக்கத்தில்  இருந்து வேறுபட்டது. இது ஒருவர் தனது எண்ணங்களையும்  உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறை ஆகும்.  ஆகவே ஆரியர்களின்  அகநிலை  உணர்வுக்குப் புறம்பான, வெளிப்புற சடங்கில் இருந்து மாறுபட்டது. தாந்த்ரீகம், காமத்தின் வழியாக கடவுளை அடைய முன்னோர்கள் பின் பற்றிய வழிமுறை எனவும் கூறலாம்.  தாந்த்ரீக முறையில் உடம்பு, மனது, உணர்வு மூன்றையும் கட்டுப் படுத்தி அதன் மூலம் கிடைக்கும் சக்தியை ஆன்மீக பரவச நிலையை அடைய பயன் படுத்துவ தாகும். காணாத  கடவுளை நினைத்து தவமிருப்பதற்கு பதிலாக நம் கண் முன்னே இருக்கும் பிடித்தமான உறுப்புகளை பார்க்கும் பொழுது நமது கவனச் சிதறல் குறைக்கப் படுகிறது. அந்தக்  கணங்களில் நம் உள்ளுணர்வு விழிப்பாகவும், கவனம் ஒரு புள்ளியில் குவிக்கப் படுகிறது. இதுதான் தாந்த்ரீக முறையின் தொடக்கம். அதாவது மனதும் உடலும் ஒன்று பட்டு  இயங்குவதே தாந்த்ரீக முறையின் முக்கிய கூறு. உடலையும் மனதையும் தனித் தனியே பிரிக்க முற்படுவது தான் மற்ற வழி பாட்டு முறைகள் ஆகும். தாந்த்ரீக முறை,  தியானம், யோகா இவைகளின் ஒன்று சேர்த்தலை விட மேல் அதிகமானது. யோகா உடலையும் மனதையும் தனித்தனியே பிரிக்க முற்படுவது. தாந்த்ரீக முறையின் படி, போட்டி,  போராட்டம் வாழ்வின் சாரம். எல்லா விதமான தடைகளுக்கும் எதிராக போராடி குறைபாடான, நிறைவுறாததில் இருந்து  பூரணமாக்க, முழுநிறை வாக்க முயலும் முயற்சி.  பிரயத்தனமே தாந்த்ரீக முறையின் உண்மையான மெய்பொருள் ஆகும். தாந்த்ரீகம் என்ற வார்த்தைக்கு, காமம் என்ற அர்த்தம் தங்கிவிட்டது.  ஆனால் தாந்த்ரீகத்திற்கும் காமத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

 

தாந்த்ரீகம் என்பது ஒரு வழிமுறைநமக்கு வேண்டியதை உருவாக்கு வதற்காக, வடிவமைக்கப் பட்ட தொழில் நுட்பம். ஒரு சமூகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும்

அறிய இரண்டு வழி முறைகள் வரலாற்று அறிஞர்களால் கையாளப்படுகிறது. ஒன்று தொல் பொருட்கள் (கல்வெட்டுகள், மனித மிச்சங்கள்) மற்றொன்று இலக்கியம். சிந்து

வெளியில் எந்த வொரு இலக்கியமும் இதுவரை கண்டு பிடிக்காதலால், கல் வெட்டுகள், சிறு உருவச் சிலைகளை தவிர இடுகாடையும் நாம் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி 28 தொடரும்...

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning

 

*அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

{இணைத்த படங்கள்:தாய்த் தெய்வம், பூமித்தாய் , மர வழிபாடு,   விலங்கு முத்திரைகள்,  கோவில்களில் தாந்த்ரீக சிற்பங்கள், சிவா சக்தி [தாந்த்ரீக]}

 

An analysis of history of Tamil religion - PART: 27

[In English and Tamil]

 

In every part of India today, human terracotta figurines are an integral part of the local culture. They play an important part in religious practices, and there are many examples of figurines being offered to deities. Many of such various artefacts found in the Indus valley ruins are yogic or Tantric in nature and suggest that these people indulged in some sort of image -worship. Tantric teachings, have generally held women in high regard & were given a special place culturally in society, due to their ability to produce offspring and may be because of these, figurines of women are perhaps the most plentiful in Indus Valley.

 

Indeed, studies of burial sites at Mohenjo - Daro and Harappa have shown that a man was often buried with his wife’s family. Many of these represent females adorned with a wide girdle, loin cloth and necklaces.

They wear a fan-shaped head dress. The most commonly found figurines from Indus valley civilisation are those of a semi -nude figures which is identified with some female energy or Shakti or Mother Goddess,  who is the source of all creation. Some of the figures are smoke stained, and it is possible that oil or perhaps, incense was burnt before them in order that the goddess might hearken favourably to petitions. Hence, It is concluded from these smoke stained female figures that the people burnt incense before the deity & worshipped her as most of the Tamils still do. In some cases the female is shown with an infant nursing  at their breasts, while there is one that shows a plant growing out of the uterus of a woman. The latter type probably symbolises the goddess of earth. Also, Countless terra-cotta statues of these Mother Goddess  have been discovered suggesting that she was worshipped in nearly every home. So, We can simply assumed that this culture was matriarchal and its religion revolved around the worship of the productive powers  of nature and a mother goddess. The people of India, in fact, have always held a belief in a female energy as the source of all creation.

 

Despite their heavy urbanisation, the Harappan civilisation seems to have had a high regard for nature and the environment. This can be derived from the high usage of animals and animal forms in the seals, and  pottery excavated from the period. This same regard for nature extended into the religious behaviours of the Harappan people. In another instance, A seal depicts a deity with a horned headdress [standing version of the proto -Siva ?]  and flowing hair standing nude between the branches of a Pipal tree with bangles (or maybe female ?) on both arms, and looking down on a kneeling [or seated?] worshiper [or priest / priestess ?].   A giant ram watches. It may represent tree worship [or worshipping Him / Her ?]. Animal worship also appears to be popular among the Harappans. Figurines of men, are slightly harder to find in the Indus Valley  excavations, compared to those of females. Figurines of men tend to be more simplistic, and little can be told of their clothing or accessories they may have wore. This is because most male figurines are shown  in the nude. The reason for this is not known, but because the ceremonial purposes of the male figurine relate to strength and virility, the male figurines may have been shown nude.

 

So, The spiritual approach of this ancient Indus Valley civilization of Harappa and Mohenjo-Daro, was largely a Tantra oriented culture and it differed from the Vedic practices of the Aryans because it was fundamentally an introversive process rather than an external ritual. Tantra is the original spiritual science. Tantra is the practice which elevates human beings in a process in which their minds are expanded. It leads human beings from the imperfect to the perfect, from the crude to the subtle, from bondage to liberation. Tantra is more than just a collection of meditation or yoga techniques. There is a particular world-view associated with it.

According to Tantra, struggle is the essence of life. The effort to struggle against all obstacles and move from the imperfect to the perfect is the true spirit of Tantra.

 

[Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]

 

Part 28 Will follow

 

{Pictures attached: Mother Goddess, Earth Goddess, Tree worship, Animal seals, Tantric Sculptures on Temples, siva & sakthi [Tantra]}

0 comments:

Post a Comment