"தமிழர் சமயமும் அதன் வரலாறும் -பகுதி: 28

 [ஒரு அலசல்- தமிழிலும் ஆங்கிலத்திலும்]



எந்த வொரு நாகரிகத்திலும், அடக்கம் செய்யும் முறையும் அதனுடன் தொடர்புடைய சடங்குகளும், அவர்கள் பின்பற்றும் சமயத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். எனினும் ஹரப்பான் மக்கள், எகிப்தியரின் பிரமிடுகள் போன்ற எந்த வொரு  நினைவுச் சின்னத்தையோ அல்லது  மெசொப்பொத்தேமியாவின் ஊர் நகர் அரசகல்லறை சமாதி போல ஒன்றையோ

கட்டவில்லை. இது ஒரு குறை பாடாக இருக்கிறது. என்றாலும் அவர்களின் புதை குழியை ஆய்வு செய்யும் பொழுது பல முக்கிய தகவல்கள்கிடைக்கின்றன. உதாரணமாக,  இறந்தவரின் உடல் மல்லார்ந்த படுக்கை நிலையில், வடக்கு தெற்காக வெட்டப் பட்ட  சவக் குழிக்குள், தலைகளை வடக்குப் பக்கமாகவும் கால்களை தெற்குப் பக்கமாகவும் கிடத்தி புதைத்தார்கள். வட மொழியில் எழுதிய வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் கட்டாயம் என்றுமே தலை வைத்து உறங்கக் கூடாது,  இறந்த  உடலின் தலை மட்டுமே வட திசையில் வைக்க வேண்டும் என்கிறது. ஆனால் சிந்து வெளி வேத காலத்திற்கு முற்பட்டது. வாஸ்து சாஸ்திரம் வாய் வழியாக இருந்து  பின்னர் வட மொழியில் எழுதப் பட்டது. ஆகவே சிந்து வெளியை வென்ற ஆரியர், அவர்களின் இறந்தவரின் அடக்கம் முறையை கட்டாயம் பார்த்திருப்பார்கள். ஆகவே, சிந்து  வெளியில் இருந்து இந்த யோசனையை கடன் வாங்கி இருப்பார்கள் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். கடைச்சங்க காலத்தை சேர்ந்த பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை உறங்கும் முறையை

 

"கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது

வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள் உடற்கொடுத்துச் சேர்தல் வழி."

 

என்று பாடுகிறது. அதாவது படுக்கும் பொழுது கடவுளை வணங்கி, வட திசையில் தலை வைக்காமல், மேலே போர்த்துக் கொள்ளப் போர்வையை போர்த்திப் படுத்தல் ஒழுக்கமாகும் என்கிறது. ஹரப்பா, கலிபங்கன், ராகிகர்ஹி, லோதல்,ரோஜ்டி, ரோபர் [Harappa, Kalibangan, Rakhigarhi, Lothal, Rojdi, and Ropar] போன்ற இடங்களில் செய்த அகழ்வு ஆராச்சியின் போது, சிந்து வெளி  மக்கள் இறந்தவரை, அவர் பாவித்த, அவருக்கு சொந்தமான பொருட்களுடனும் மற்றும் அணிகலன்களுடனும் அடக்கம் செய்தார்கள் என்பது தெரிய வந்தது. பொதுவாக 0 தொடக்கம் 40 வரையான மட்பாண்டப் பொருட்கள் [pottery vessels] அங்கு காணப் பட்டன. இது, சிந்து வெளி மக்கள் மறு பிறவியில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதை காட்டுவதாக உள்ளது. மேலும் நகரங்கள் செங்கற்களால் கட்டப் பட்டு, அங்கு சகலரும் பாவிக்கக் கூடிய பொது குளியல் இடங்களை கொண்டிருந்தன. நேர்த்தியாக,  நுட்பமாகச் செய்யப்  பட்ட இந்த குளியல் ஏற்பாடு, குளிப்பது மூலம் சுத்தஞ்செய்தல், அவர்களின் பண்பாட்டில், ஆகவே மதத்தில், ஒரு அங்கமாக இருந்ததை காட்டுகிறது.  இந்த சிந்து வெளி மக்களின் சுத்தரித்தல் முறை பின்னர் சைவ சமயத்திலும் இந்து சமயத்திலும் உள்வாங்கப் பட்டன. ஆகவே ஆலயத்துடன் அமைந்த செயற்கை தாமரை  குளங்கள் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும்.  அந்தக் காலத்தில், தாமரை, அல்லி போன்ற மலர்களை கோயில் குளத்தில் வளர்த்து, கோயிலில் பூசை செய்தார்கள். அந்தக்  குளத்தில் குளித்து, பின்னர் சுத்தமான குளத்து நீரை எடுத்து வந்து ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்தார்கள். "சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்".  இது அவர்களின் பண்பாடாக இருந்தது. பெண் தெய்வத்துடன் சம்பந்தப் பட்ட  தேவதாசிகளுடன் சடங்கு முறை மூலம் ஒன்று சேரும் முன்பு, ஒரு வித சடங்கு குளியல்,  மொஹெஞ்சதாரோவில் நடை பெற்றிருக்கலாம் என சிலர் முன்மொழிகின்றனர். [The cult at Mohenjo-Daro may have involved some form of ceremonial bathing as a prelude to ritual cohabitation  with prostitutes associated with the goddess, carried out in the small ante - chambers adjoining the bath] போதுமான நூல்கள், இலக்கியங்கள் அங்கு இல்லாததால், ஹரப்பான் சமய  நம்பிக்கைகளை திட்டமாக கூற முடியாமல் இருக்கிறது.

 

சிந்து வெளி நாகரிகம் கி மு 1700 அளவில் முற்றாக அழிந்தாலும் சில ஹரப்பான் தெய்வங்கள் அங்கிருந்து தப்பி பிழைத்து பின் சைவ சமயத்திலும் / இந்து சமயத்திலும் இடம்பிடித்துள்ளார்கள். சிந்து சம வெளி இடுபாடுகளுக் கிடையில் கண்டு எடுக்கப்பட்ட சிவ லிங்கத்தின் முந்தை வடிவம் ஆகியவற்றுடன் இன்னும் ஒரு முக்கியமான தெய்வம் பொறிக்கப்பட்ட  முத்திரையும் கண்டு எடுத்தார்கள். சொற்குறியிடு '','மு','வான்' இந்த பழமையான தெய்வத்தை வரையறுகிறது. ஆகவே இந்த தெய்வத்தை ஆமுவான் என பரிந்துரைத்தார்கள். சிந்து சம வெளி வில்லையில் இந்த இறைவனுக்கு  நீண்ட மனிதவுரு கொடுக்கப் பட்டுள்ளது. அதன் தலையில் மூன்று கொம்பு உள்ளது. மேலும் இந்த கடவுள்  "ஆமுவான் / Ahmuvan" முருகனை ஒத்த வடிவத்தை கொண்டுள்ளார். சில சிவ வழிபாட்டுக்குரிய சின்னங்கள் சிந்துவெளி நாகரிகத்திலே காணப் பட்டாலும், சிந்துவெளி நாகரிகத்திலே முதலிடம் பெற்று விளங்கியது பெண் தெய்வ (அன்னை) வழிபாடே என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. சிந்துவெளி மக்கள் வழிபட்ட தெய்வங்களை அதன் முக்கியத்துவத்தின்படி  முறைப் படுத்திய  மார்ஷல், முதலில் அன்னைத் தெய்வத்தையும், அதற்கடுத்த படியாக மும்முகமுடைய கடவுளையும், மூன்றாவதாக இலிங்கம் அல்லது ஆண் குறியையும் எடுத்துக் கூறியுள்ளார். பெண் தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் அது தோன்றிய சமுதாயத்திலே தாய்வழிமுறை [matriarchal] நிலவியதே என்பது ஆராய்ச்சியாளர்கள்  காட்டும் உண்மையாகும். அங்கு அன்னைத் தெய்வமே முழு முதற்றெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம். சிந்து வெளியில் வாழ்ந்தவர்கள் யார்? எந்த மொழி பேசினார்கள் என்பதில் ஒருமித்த கருத்து இன்னும் இல்லை. அது மட்டும் அல்ல எல்லோரும் ஏற்றுக் கொள்ளுமாறு இன்னும் சிந்துவெளி எழுத்துக்களின் வரி வடிவங்கள் இன்று வரை  வாசிக்கப் பட வில்லை.  எனினும் பிற்பட்ட தொல்லியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகள், எமக்கு இப்பொழுது தெளிவான விபரங்களை தருகின்றன.

 

உதாரணமாக, சுமேரியர்களின் வரலாற்றுக் குறிப்புகளில், சிந்து வெளி மக்கள் பற்றிய குறிப்பு ஒன்று வருகின்றது. “மிலேக்காநாட்டு வணிகர், மொழி பெயர்ப்பாளர் பற்றிய சுமேரியர்களின் குறிப்புகள், சிந்துவெளிக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றது. அப்படியானால், சிந்துவெளியில் இருந்த நாட்டிற்கு, மிலேக்கா அல்லது அது மாதிரியான பெயர் இருந்திருக்க வேண்டும். மேலும் ஆரியர்களின் ரிக் வேதம்,“மிலேச்சர்கள்என்று ஒரு இன மக்களை பெயர் சொல்லி அழைக்கின்றது. பிற்காலத்தில் ஒரு சாதியாக மாறி விட்ட மிலேச்சர்கள், வேத காலத்தில் ஆரிய தேசத்திற்கு வெளியே இருந்த அந்நியர்களைக் குறித்தது. இது, கிரேக்கர்கள் தமது தேசத்திற்கு வெளியே இருந்த அந்நிய இனங்களை, “பார்பாரியன்கள்” (Barbarian)  என்று அழைத்ததைப் போன்றது. ஆகவே மேற் குறிப்பிட்ட தரவுகளை வைத்துப் பார்க்கும் பொழுது, சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள், ஆரியரல்லாத திராவிட இன மக்கள் என்பது  தெளிவாகத் தெரிகின்றது. அவர்கள் பேசியமொழி பழைய தமிழாக இருக்கலாம்?

 

மேலும்  கி மு 2000 ஆண்டு அளவில் ஆரியர்களின் இந்தியா வருகைக்கு பின்  அவர்களின்  முன்னேறிய இராணுவ தொழில் நுட்பத்தால் தெற்கிற்கு இவர்கள் தள்ளப் பட்டார்கள் எனவும் அறிய முடிகிறது. எனவே சர் ஜான் மார்ஷலின் அகழ்வு ஆய்வு, சைவ சமயத்தின் வரலாற்றை கிறிஸ்துக்கு முன் 3000 ஆண்டுகளுக்கு கொண்டு செல்கிறது. சர் ஜான் மார்ஷல் ஏழு மண் அடுக்கு வரை தோண்டி ஆய்வு செய்தார். ஒரு மண் அடுக்கு ஏறத்தாள 500 வருடங்களை குறிக்கும். பிரபல தத்துவவாதியும் இந்தியாவின் முதல்குடியரசுத் துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான, டாக்டர் சர்வபள்ளி இராதா கிருஷ்ணன் தான் எழுதிய இந்து சமய வரலாறு [History of Hinduism] என்ற நூலில் சைவ சமயத்தின்

ஆரம்பம், நாம் இது வரை ஏற்றுக் கொண்டதை விட மேலும் சில நூற்றாண்டுகள் கூடுதலாக இருக்கலாம். ஏனென்றால் இன்னும் முதலாவது மண் அடுக்கு அடையாள படுத்தப் படவில்லை. ஆகவே சரியாக தீர்மானிக்க முடியாது என்கிறார். இவை எல்லாம் எமக்கு காட்டுவது, இந்தியாவிற்கு ஆரியர் வருகைக்கு முன்னமே அங்கு சைவ சமயம் தழைத்தோங்கி இருந்தது என்பதாகும். இந்த வரலாற்று உண்மைகள் எல்லாம் இந்தியர் அல்லாதவர்களால் சரிபார்க்கப்பட்டது. இது சைவ சமயத்தை உலகின் மிகப் பழமையான மதமாக்கிறது!

 

:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி 29 தொடரும்...

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning

 

*அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

{இணைத்த படங்கள்: ஆமுவான், யௌதேயர்களின் நாணயம் மற்றும் பழனி முருகன் ஒப்பீடு, சிந்து சமவெளி புதைகுழிகள், ஊர் அரச கல்லறை,

மொஹெஞ்சதாரோவின் பெரிய குளியல்.]

 ⚩⚩⚩⚩⚩⚩⚩⚩⚩⚩⚩

 

An analysis of history of Tamil religion - PART: 28

[In English and Tamil]

 

 

The burial practices and the rituals related with them have been a very important aspect of religion in any culture. However, in this context Harappan sites have not yielded any monument such as the Pyramids of Egypt or the Royal cemetery at Ur in Mesopotamia. Dead bodies were generally rested in north - south direction with their head towards north and the feet towards south. It is interesting to note that as per ancient indian vastu shastra, one must never keep his head in North while sleeping. Only a dead - body’s head is kept towards North direction, But Indus valley civilisation existed in the pre - Vedic period, suggesting that they would have borrowed this idea from Indus valley people. The dead were buried with a varying number of earthen pots. In some graves the dead were buried along with goods such as bangles, beads, copper mirrors.

This may indicate that the Harappans believed in life after death. Also, Most cities were constructed out of brick and featured communal areas such as "Great Baths,"

 

These elaborate bathing arrangement would suggest that purification by bath formed a feature of the religion of the Indus Valley people. Since so many elements of the Indus culture appear to have found their way into Saivism / Hinduism, it is possible that ancient purification rites were also taken over and reinterpreted. If this is so the later practice of constructing artificial lotus ponds may be very ancient indeed. These lotus ponds  were used during historic times for various purification ceremonies and one theory suggests that the bath was probably used by the mother goddess cult. The cult at Mohenjo - Daro may have involved  some form of ceremonial bathing as a prelude to ritual cohabitation with prostitutes associated with the goddess, carried out in the small ante - chambers adjoining the bath. For lack of written descriptions, it is  impossible  to characterise Harappan religious beliefs more specifically. Many scholars believe, however, that some Harappan deities survived the collapse of the larger society and found places later in the, Saivism / Hindu pantheon.

 

Also "Ahmuvan" has been suggested as the name of an Indus Valley Civilization deity, who is pictured on Indus Valley tablets as an elongated anthropomorphic figure with three protuberances in the head. This deity is suggested to be associated with the Tamil god Murugan. Sir John Hubert Marshall listed mother goddess as the most famous deity, followed by the above said three faced male god, Pashupati & prototype of the Shiva  lingam or the male organ. The mother goddess was dominant shows that the society was predominantly matriarchal. There are no single opinion among scholars about the people who lived there or  the language  they spoke. Also, unlike some other ancient civilisations, we are still unable to read the words that they wrote, acceptable to all pandits / scholars and as such this Indus Valley script still remains undeciphered down to  the present day. However, subsequent archaeological and historical research has now furnished us with a more detailed picture of the Indus Valley Civilisation and its inhabitants. The Indus Valley people were most  likely Dravidians, who may have been pushed down into south India when the Aryans, with their more advanced military technology, commenced their migrations to India around 2,000 BC.  Sir John Marshall’s  excavation  has proven that Saivism existed 3000 years ago before Christ, that is 5000 years from today. Sir John Marshall has excavated 7 layer of soil in the spot of Mohenjo -Daro Harappa by an estimation of  500 years per layer. Great India’s philosopher and ex-president of India; Dr Sarvepalli Radhakrishnan who wrote History of Hinduism. (Second President of India (1962 -1967). “The possibilities of the origin  of Saivism is more than the agreed date and period which cannot be determined because the first layer was not identified” This shows that before the Aryans came, Saivism has already florished in India.  These facts were all verified by Non Indians, thus makes Saivism the oldest religion in the world. The date of its origin is yet to be accurately identified today.

 

 

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

Part 29 Will follow

 

[Pictures attached:

comparison of Ahmuvan with Coin of the Yaudheyas and palani murugan , indus valley burials,  Royal Cemetery of Ur, Great Bath of Mohenjo-daro.]

⚩⚩⚩⚩⚩⚩⚩⚩⚩⚩⚩

0 comments:

Post a Comment