ஆன்மா என்றால் என்ன? [சற்குரு ]

உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப்பற்றி மனதில் ,யாரோ சொல்வதை வைத்து கற்பனைகளை வளர்த்துக்கொள்வதால், என்ன சாதிக்கப் போகி ன் றீ ர்கள். ஆன்மா என்பது பற்றி மொத்த சமூகமே கூடி நின்று எதோ சொன்னாலும் அது உங்கள் அனுபவத்தில் வராதவரை [தெரியமுடியாத,அறியமுடியாத]  அதை பற்றிப் பேச என்ன முக்கியத்துவம் இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கக் கூடிய அனுபவங்களைப்பற்றி முற் கூட்டியே வேறு ஒருவர் சொல்வதை வைத்து மனதை தயார் செய்து வைப்பது, மனதை ஒரு சிறையில் அடைத்தது போலாகிவிடும் அல்லவா? ஆன்மா இருக்கிறதா இல்லையா என நான் விவாதிக்கவில்லை. ஆனால் உங்கள் நேரடி அனுபவத்தில் இல்லாத ஒன்றைப்பற்றிப் பேசுவது என்பது பொய்களை விதைப்பது போலாகும். அவற்றை  நீங்கள் நம்புவது பொய்யான ஒரு வாழ்க்கைக்கு உங்களை நீங்களே தள்ளுவது போலாகும் என்று கூறுகிறார் சற்குரு.
ஒருவர் இறந்துவிடடால் அதுவும் அவர் இந்துவாக இருந்துவிடடால் மட்டும் இந்து ஆன்மாவினை  முத்தியடைய செய்ய ஒரு தரகர் தேவைப்படுகிறார். அதுவும்  இந்த இந்து இறந்து ஒருமாதத்தில் செய்யப்படும் அந்தியேட்டிக் கிரிகையில் ஓதும் தரகர் அன்று தான் மோட்ஷத்திற்கு அனுப்புவதாகவே ஓதுகிறார்.அது முடிந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர் இறந்த திதியில் மோட்ஷத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறும் அவர் அத்துடன் விட்டபாடில்லை. ஒவ்வொரு வருடமும் அவ் இந்து இறந்த திதியில் மோட்ஷ பூசை செய்யவேணும் என்கிறார். அப்படியெனில் இந்து எப்போது தான் மோட்ஷத்தை எட்டி அடையப்போகின்றானோ புரியவில்லை.
ஒரு ஆன்மாவை எத்தனை தரம் தான் மோட்ஷத்துக்கு அனுப்புகிறார்கள். இதற்கெல்லாம் சற்குருவின் விளக்கம் ஒரு முடிவாகவே புரிகிறது.
                                                                                                                          

1 comments:

  1. சந்திரகாசன்Saturday, April 08, 2017

    ஒவ்வொரு வருசமும் மோட்ஷ அருட்சனை, அந்த அருட்சனை, இந்த அருட்சனை, பஜனைகள் என்று செய்து கொண்டு இருக்கின்றார்களே! எப்போதுதான் இறந்தவர்கள் சொர்க்கலோகத்துக்கு செல்ல அனுபதிப்பார்களோ தெரியாது! இவர்கள் இதுவெல்லாம் செய்து முடிக்குமட்டுமா கடவுள் பார்ததுக்கொண்டிருக்கின்றார் இறந்தவர்களை சொர்க்கம் அனுப்புவதற்கு?

    ReplyDelete