எந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் ''திருப்பூர்''போலாகுமா ?

share Tirupur Country
திருப்பூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சி. இது புதிதாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் தலை நகரமாக அமைந்துள்ளது. இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.

வேலம்பாளையம், எஸ்.நல்லூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, செட்டிபாளையம், மண்ணரை, முருகன்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தனம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும் திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஆடைத் தொழில் 

திருப்பூரின் முக்கியச் சாலைகளாகக் குமரன் சாலை, அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை உள்ளிட்ட சாலைகள் விளங்குகின்றன. இவற்றுள் குமரன் சாலை மிக முக்கியச் சாலையாக விளங்குகிறது.

பெயர் வரக் காரணம்
கொங்குச் சோழர் ஆட்சிக்காலத்தில், வட நாட்டினர் சிவன் கோயிலுக்குப் பூஜை செய்ய இங்கு வந்தார்கள். அவர்கள் திருப்பூரைப் பற்றிய ஸ்தல புராணம் ஒன்று எழுதி இருக்கிறார்கள். இன்று தாராபுரம் என்று அழைக்கப்படும் விடாபுரத்தில் பாண்டவர்கள் தங்கி இருந்தார்களாம். அங்கு வந்த கௌரவர்கள், பாண்டவர்களின் மாடுகளைத் திருடிச்சென்றுவிடுகிறார்கள்.
அந்த மாடுகளை மீண்டும் பாண்டவர்கள் வெற்றிகரமாக மீட்டுத் திரும்பிய ஊர் என்பதால், திருப்பூர் என்று பெயர் வந்தது என்கிறது அந்த ஸ்தல புராணம்' என்று தன் ஊரின் பெருமையைச் சொல்கிறார் பாரதிவாசன்

குமரன்
திருப்பூரின் சிறப்பு
திருப்பூருக்கு மேலும் சிறப்பு - விடுதலைப்போரில் கொடி காத்த குமரன் பிறந்த மண் என்பதே ஆகும்.

திருப்பூரின் தொழில் வளம்
தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர் .[சான்று தேவை] லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் . தென்மாவட்டம் மற்றும் பிற மா
நிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது. இங்கு உற்பத்திசெய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை. பருத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் 35 இருக்கின்றன. ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகள் உற்பத்தியாகின்றன. பனியன் தொழில் வளர்ச்சிக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் அயராது பாடுபட்டு வருகிறது. இதில் 5000 உறுப்பினர்கள் உள்ளனர்.

அகில இந்திய காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனம், கையால் செய்யப்படும் காகிதம் மற்றும் சுத்தமான எண்ணெய் தயாரிக்கும் தொழிலும் திருப்பூரில் நடைபெறுகிறது. திருப்பூர் காதி வஸ்திராலயத்தின் தலைமையிடமாக திருப்பூர் இருக்கிறது.  

திருப்பூருக்கு மேலும் சிறப்பு செய்யும் தொழிலாக வெளிநாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி தொழில் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளில் கால் சதவீதம் இங்கிருந்தே நடக்கிறது என்பது பெருஞ்சிறப்பாகும்.

திருப்பூரின் சுற்றுலாத் தளங்கள்
அமராவதி
திருப்பூர் பூங்கா,
திருப்பூர் குமரன் நினைவிடம்
சுக்ரீஸ்வரா் கோவில்(2000 ஆண்டுகள் பழமையானது), சர்க்கார் பெரியபாளையம்.
அமராவதி அணை

திருப்பூர் இறை வழிபாடு தலங்கள்
திருப்பூர் திருப்பதி,
கைலாசநாதர் திருக்கோயில்,
அருள்மிகு சுக்ரீஸ்வரர் திருக்கோயில்,
திருமுருகன் பூண்டி திருக்கோயில்
பெருமாள் கோயில் ,அழகு மலை,
ஜோசப் சர்ச்
அருள்மிகு கொண்டத்துகாளியம்மன் திருக்கோவில்
                                                                                                             

0 comments:

Post a Comment