மனிதன் இருக்கின்றனா?இறைவன் கேட்கிறான்.அடைத்த பை உடலை கொண்டதெல்லாம் மனிதனா?
படைத்தவனுக்கே படையலிடும்  அவன் மனிதனா?
பகுத்தறிவை பயன்படுத்த முடியாத அவன் மனிதனா?
சிறுமைத்தனமாய் சினம் வளர்க்கும் அவன் மனிதன?
பொறுமையிழந்து பொல்லாமை புரிபவனும் மனிதனா?
அயலார் வீழ்ச்சியில் ஆனந்தமடையும் அவன் மனிதனா?
தயவே தங்காத நெஞ்சுடையானும் ஒரு மனிதனா?
கருணையே இல்லாத கொடும் கயவன் அவன் மனிதனா?
குருவையே பழித்துக்  கூசாது  பறைபவனும் மனிதனா?
செய்த நன்றிகள் மறந்து செல்பவன் மனிதனா?
பொய் மொழிகள் பொழியப் பேசும் அவன் மனிதனா?
கண்ட வழியில் காசைக் கொள்பவன் மனிதனா?
கொண்டகடனை அடையாக் கொள்ளையனும் மனிதனா?
சொன்ன சொல்மாற்றிச்   சொல்பவனும்  மனிதனா?
அன்னை மொழி மறந்து அலைபவன் அவன் மனிதனா?
பிறந்த நாட்டினை பிறரோடு இகழ்பவன் அவன் மனிதனா?
துறந்தே தன் இனத்திலிருந்து  தூர  வாழ்பவன் மனிதனா?
கதிரைக்காக இனத்தைக் காட்டிக் கொடுப்பவன்   மனிதனா?
சதி கொண்டு சண்டைக்கு இழுக்கும் அவனும் மனிதனா?
இனத்தை ஒரு இனமழிக்க  ஏவுபவன் மனிதனா?
மனத்தை மனித வழிப்படுத்த மறந்த அவனும் மனிதனா?
இறைவனை மனிதனாய் மரணித்த அவன் மனிதனா?
மதங்களை மோத விட்ட அவனும் மனிதனா?
மனிதத்தை தொலைத்த விதத்தில்
விலங்கினத்தின் வரிசைக்கே இவன் மீண்டானா?
✍---- செ.மனுவேந்தன்

[🐘→இந்திய ,🦁→இலங்கை ] செய்திகள் 16-septemper-2019

 India & Srilanka tamil news

🔻🔻🔻🔻🔻16/09/2019🔻🔻🔻🔻🔻
🐘 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது, 20 பெண்களை பாலியல் பலாத்காரம்
சென்னையில் 7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். மேலும் 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இவரை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை எழும்பூரை சேர்ந்தவர் கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது-வயது 24). பட்டதாரியான இவர் சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தார். கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி அன்று கவிதா வழக்கம்போல சந்தோஷமாக வேலைக்கு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பி வரவில்லை.
அவரது பெற்றோர் கவிதா வேலை பார்த்த கம்பெனிக்கு சென்று பார்த்தார்கள். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தேடினார்கள். கவிதா என்ன ஆனார் என்று தெரியவில்லை. பின்னர் கவிதாவின் பெற்றோர், எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள்.
எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்குப்பதிவு செய்து கவிதாவை தேடிவந்தார். இந்தநிலையில், இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் கவிதாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடத்தி கவிதாவை துரிதமாக கண்டுப்பிடிக்க வேண்டும் என்று, ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன், இந்த வழக்கில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் சுகுநாத் சிங் ஆகியோர் மேற்பார்வையில், எழும்பூர் உதவி கமிஷனர் சுப்பிரமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் சேட்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், ருத்ரசுதா ஆகியோர் அடங்கிய தனி போலீஸ் படை அமைத்து உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. கவிதா வேலை பார்த்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ராஜேஷ் பிரித்வி(29) என்பவர் கவிதாவை கடத்திச் சென்று திருமணம் செய்திருப்பது தெரியவந்தது.
ராஜேஷ் பிரித்வியின் சொந்த ஊரான திருப்பூர் அருகே உள்ள நொச்சிபாளையத்தில் கவிதாவை ஒரு வீட்டில் சிறைவைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் திருப்பூர் விரைந்தனர். கவிதா சிறைவைக்கப்பட்ட வீட்டை போலீசார் சுற்றிவளைத்தனர்.
கவிதாவை போலீசார் பத்திரமாக மீட்டனர். கவிதாவோடு தங்கியிருந்த ராஜேஷ் பிரித்வி போலீஸ் கையில் சிக்காமல், தப்பி ஓடிவிட்டார். மீட்கப்பட்ட கவிதா ஐகோர்ட்டு மூலம், அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அடுத்தகட்டமாக ராஜேஷ் பிரித்வியை கைது செய்ய தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.
ராஜேஷ் பிரித்வியின் செல்போனில் கவிதாவை பேசவைத்து, கவிதாவின் வீட்டிற்கு ராஜேஷ் பிரித்வியை நேற்று வரவழைத்தனர். ராஜேஷ் பிரித்வி நேற்று கவிதாவின் வீட்டிற்கு வந்து, அவரை தன்னோடு வரும்படி அழைத்தார். தன்னோடு வராவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டலில் ஈடுபட்டார்.
அப்போது தனிப்படை போலீசார் கவிதாவின் வீட்டிற்கு சென்று, ராஜேஷ் பிரித்வியை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரைப் பற்றி அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ராஜேஷ் பிரித்வி 7-வது வகுப்பு வரை தான் படித்துள்ளார். ஆனால் பல்வேறு பெயர்களில், பல்வேறு படிப்புகளை படித்துள்ளதாக கூறி ஏராளமான பெண்களை தனது காதல் வலையில் விழவைத்து, அவர்களது கற்பை சூறையாடியுள்ளார். அவர் ஒவ்வொரு ஊரிலும், பல பெயர்களில் தினேஷ், ஸ்ரீராமகுரு, தீனதயாளன், ராஜேஷ் பிரித்வி என்று வலம்வந்துள்ளார். சில ஊர்களில் தன்னை எம்.பி.ஏ. பட்டதாரி என்றும், என்ஜினீயர் என்றும், டாக்டர் என்றும் பந்தாவாக கூறியுள்ளார்.
ஏற்கனவே 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக திருச்சி, கோவை, திருப்பூர், ஆந்திராவில் திருப்பதி, காளஹஸ்தி ஆகிய போலீஸ் நிலையங்களில் இவர் மீது வழக்கு உள்ளது. திருப்பதி போலீஸ் நிலைய வழக்கில் இவர் கோர்ட்டில் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
காளஹஸ்தி போலீசார் இவரை கோவையில் கைது செய்தபோது போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடியிருக்கிறார். இதற்காக காளஹஸ்தி போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
7-வது திருமணம் செய்ய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் சென்னைக்கு வந்துள்ளார். சென்னை குற்றப்பிரிவு போலீசில் வேலை செய்வதாக போலீஸ் சீருடையில் பந்தாவாக வலம்வந்துள்ளார். தான் 2 குற்றவாளிகளை என்கவுண்டர் முறையில் சுட்டு தள்ளியிருப்பதாகவும் இவர் கதைவிட்டுள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் வேலையை ராஜினாமா செய்யப்போவதாக சொல்லி, அமைந்தகரையில் கால்சென்டர் நிறுவனம் தொடங்கியுள்ளார். அதுவும் போலியான நிறுவனம் தான். 20-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடைசியாக இவர் விரித்த வலையில் கவிதா மாட்டியிருக்கிறார்.
இவரிடம் 100-க்கும் மேற்பட்ட செல்போன் சிம்கார்டுகள் உள்ளன. போலி ஆதார் அட்டை, போலி சப்-இன்ஸ்பெக்டர் அடையாள அட்டை, போலி வாக்காளர் அட்டை மற்றும் கைதிகளுக்கு போடும் கைவிலங்கு, போலீஸ் சீருடை ஆகியவற்றை இவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளோம்.
மருத்துவ கல்லூரிகளில் சீட்டு வாங்கித்தருவதாக ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதுதொடர்பாக இவர் மீது அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் 15 பேர் புகார் கொடுத்துள்ளனர். இவரை தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துவிட்டு, மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும்.
இவரது காதல் லீலைகள், மோசடி லீலைகள் பற்றி முழுமையாக விசாரணை நடத்துவோம். இனிமேல், இவர் இதுபோன்ற குற்றங்களை செய்யாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

🐘 கப்பல் என்ஜினீயர் - நண்பர் வெட்டிக்கொலை மர்மகும்பல் வெறிச்செயல்
தூத்துக்குடியில் கப்பல் என்ஜினீயர், அவருடைய நண்பரை மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது.
தூத்துக்குடி சிவந்தாகுளம் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40), கப்பல் என்ஜினீயர். இவருடைய மனைவி இந்திரகுமாரி. இவர் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவுக்காக அவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
முருகேசன் கடந்த சில மாதங்களாக பணிக்கு செல்லாமல் இருந்து வந்தார். நேற்று மதியம் இவர் தெருவில் சென்றபோது, ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். இதனை பார்த்த முருகேசன், அந்த நபரை பார்த்து, தெருவுக்குள் மெதுவாக செல்லுமாறு கூறி சத்தம் போட்டார். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார்.
நேற்று மாலையில் முருகேசன் சிவந்தாகுளம் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டு இருந்தார். அவர், அங்கு வந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனது நண்பரான விவேக் (40) என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் வந்தனர்.
அவர்கள் திடீரென முருகேசன், விவேக் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். விவேக் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாளமுத்துநகர் பகுதியில் வாகன தணிக்கையின்போது ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

🐘 சிறுமியை தாக்கியவர் கைது
திருக்கோவிலூர் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த சாமுவேல் மனைவி செல்வி, 32; இவர் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது 17 வயது மகள் வீட்டில் தனியாக இருந்து வருகிறார்.கடந்த 13ம் தேதி காலை வீட்டிற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன், 40; என்பவர், வீட்டில் யார் இருக்கிறார் என கேட்டார். இதற்கு சிறுமி நீ யார் அதை கேட்பதற்கு என கேட்டதால், வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த ஐயப்பன், சிறுமியை தாக்கினார்.இதுகுறித்து சிறுமியின் தாயார் செல்வி கொடுத்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் அய்யப்பனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

🐘 கல்லுாரி மாணவி மாயம்
கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வானுார் தாலுகா, இளையாண்டிபட்டை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி, 51; இவரது 19 வயது மகள், விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 13ம் தேதி கல்லுாரிக்கு சென்ற அவரது மகள், அதன் பிறகு வீடு திரும்பவில்லை.இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

🐘 விபத்தில் முதியவர் பலி
கிளியனுார் அடுத்த உப்புவேலுரை சேர்ந்தவர் ராமலிங்கம், 65; இவர், கடந்த 14ம் தேதி மாலை 3:30 மணியளவில், தனது சைக்கிளில் உப்புபாட்டை பகுதியில் சென்றார்.அப்போது, செட்டிசாவடியை சேர்ந்த சிவநேசன், 30; என்பவர் ஓட்டி வந்த பைக், சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ராமலிங்கம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.இது குறித்த புகாரின்பேரில், சிவநேசன் மீது கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

🐘 விபத்தில் கூலித்தொழிலாளி பலி
உளுந்தூர்பேட்டை தாலுகா, கூரனூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் செல்வம், 40; இவர் சென்னையில் கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருச்சி-சென்னை பைப்பாஸ் சாலையில், ஒலக்கூர் அடுத்த பாதிரி கிராமத்தை செல்வம், கடந்தபோது, அதே திசையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து, ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

🐘 பேனர் கட்டும் போது தவறி விழுந்த வாலிபர் பலி
நடிகர் அஜித் புதுப்படத்திற்கு, பேனர் கட்டியபோது காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வானுார் தாலுகா, பூத்துறையை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி, 37; இவர் கடந்த ஆக., 7ம் தேதி நடிகர் அஜித் புதுப்பட வெளியீட்டிற்கு, பேனர் கட்டும்போது தவறி விழுந்து காயமடைந்தார்.அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை முடிந்து, வீட்டிற்கு வந்த அவருக்கு, திடீரென்று மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.இதையடுத்து, உறவினர்கள் அவரை புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இது குறித்த புகாரின்பேரில், வானுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

🐘 40 அகதிகள் இலங்கை பணயம்
வேலுார் மாவட்டத்தில் உள்ள, இலங்கை தமிழர் முகாம்களில் இருந்து, 40 அகதிகள், தாயகம் சென்றனர்.
வேலுார் மாவட்டத்தில், மேல்மொணவூர், ஆம்பூர், வாலாஜாபேட்டை, நெமிலி, குடியாத்தம் ஆகிய இடங்களில், இலங்கை தமிழர் முகாம்கள் உள்ளன. இங்கு, 3,450 பேர் தங்கியுள்ளனர்.இவர்களில் பலர், தாயகமான இலங்கைக்கு செல்ல, பல ஆண்டுகளாக, அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 40 பேர், சமீபத்தில் தாயகம் சென்றனர்.
முகாம் மறுவாழ்வு அதிகாரிகள் கூறியதாவது: இங்கு தங்கியுள்ள அகதிகள், தாயகம் செல்ல விரும்பினால், அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும். அவர்கள் மீது, குற்ற வழக்குகள் இல்லை என, போலீசார் சான்று வழங்கி, தீவிர விசாரணைக்கு பின், அவர்கள், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். ஜனவரியில், 87 பேர் தாயகம் செல்ல மனு அளித்தனர். இதில், 40 பேர், இலங்கைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

🔻🔻🔻🔻🔻15/09/2019🔻🔻🔻🔻🔻
🦁 ஐபோன் வாங்கித் தரவில்லை!! கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் இளைஞன் ஒருவன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞனின் தந்தை கனடாவில் வசித்து வரும் நிலையில் 10 வருடங்களுக்குப் பின் அண்மையில் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
வரும் போது ஐஃபோன் ஒன்று கொண்டு வருமாறு தந்தையிடம் குறித்த இளைஞன் கூறியிருந்தார்.
எனினும் தந்தை ஐஃபோன் கொண்டு வராத நிலையில் இளைஞன் கோபத்தில் தனது கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.
இதன்போது அருகில் இருந்தவர்கள் காப்பாற்றிய போதும், சிறு காயம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

🦁 மட்டக்களப்பு கல்லடியில் துாக்கில் கராத்தே மாஸ்டர்
கல்லடி மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்துவந்த நவரெட்ன ராஜா என்ற, கராத்தே மாஸ்டர், இன்று (15.08.2019) தூக்கில் தொங்கிய இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

🦁யாழில் மர்மமனிதனை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்
யாழ்.இராசாவின் தோட்டம் வீதியில் உள்ள வீடொன்றின் அருகில் சந்தேகத்திற்கிடமான இளைஞனை பிரதேச மக்கள் பிடித்து கட்டிவைத்ததுடன், பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவ து, இராசாவின் தோட்டம் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழையும் ஒழுங்கைக்குள்
முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞன் அந்த முச்சக்க ர வண்டிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றதுடன்,
வீட்டையும் நோட்டமிட்டுள்ளாா். இதனையடுத்து முச்சக்கர வண்டியின் உாிமையாளா் குறித்த இளைஞனை நெருங்கி விசாாித்துள்ளாா்.
இதன்போது அவா் சிங்களத்தில் சரளமாக பேசியுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த முச்சக்கர வண்டி உாிமையாளா் தனது நண்பா்களை அழைத்துள்ளாா்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முச்சக்கர வண்டி உாிமையாளாின் நண்பா்களும் இளைஞனை விசாாித்துள்ளனா். அப்போதும் அவா் சிங்களத்தில் பேசியுள்ளாா்.
மேலும் முன்னுக்கு பின் முரணான கதைகளையும் கூறியுள்ளாா். இதனால் சந்தேகமடைந்து இளைஞனை பிடித்து மின் கம்பத்துடன் கட்டியுள்ளனா்.
பின்னா் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இரகசிய பொலிஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாாித்தபோது அவா் தமிழில் பேசியுள்ளாா்.
இதன்போது தான் மூதுாா் பகுதியை சோ்ந்த இஸ்லாமியா் எனவும், யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் தமிழ் பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்துள்ளதாககூறியதுடன் சிறுநீா் கழிப்பதற்காகவே ஒழுங்கைக்குள் சென்றதாக கூறினாா். பின்னா் காசு வாங்க போனதாக கூறினாா். இதனையடுத்து இரகசிய பொலிஸாா் இளைஞனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனா்.

🦁கிளிநொச்சியில் புதிதாக சட்டவிரோதமான ஒரு உப்பளம்
  கிளிநொச்சியின் உருத்திரபுரம் பகுதியில் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தினரால் சட்டவிரோதமான முறையில் உப்பளம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆனையிறவு,குறிஞ்சாதீவு சர்வதேச தரமிக்க உப்பளங்கள் இருந்தும் ,குறித்த உப்பளம் அமைக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும் நிலையிலும் செருக்கன்,பெரிய பரந்தன், சாலமன், நீவில் பொறிக்கடவை உருத்திரபுரம் சிவநகர் இன்னும் பல கிராமங்களில்  உவர்நீர் ஆகும் நிலையிலும் சுமார் 3000  மக்களின் வாழ்வு பாதிக்கப்படும் நிலையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

🦁மட்டக்களப்பில் மாணவர்கள் மீது தாக்குதல்
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய விளையாட்டு மைதானத்தில் திருகோணமலை இந்துக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் கிரிக்கட் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியின்போது, மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை பாடசாலை மாணவர்கள் வெற்றிபெற்ற நிலையில், அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், திருகோணமலை மாணவர்கள் சிலர் நேற்று கல்லடி பகுதியில் வைத்து தாக்கப்பட்டதாகவும், கிரிக்கட் போட்டியின்போதும் திருகோணமலை மாணவர்கள் சிலருக்கும் சிவானந்தா மாணவர்களுக்கு சிலருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, மைதானத்திற்குள் நுழைந்த பொலிஸார் மைதான கதவுகளை அடைத்துவிட்டு மாணவர்களைத் தாக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
இதனால், நேற்று இரவுவரை குறித்த பிரதேசத்தில் பதற்றமான நிலைமை நீடித்ததுடன், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் தலையீட்டினால் பதற்றம் தணிந்ததாகவும் கூறப்படுகின்றது.

🦁யாழில் இருந்து புறப்பட்ட ரயில் தடம்புரண்டது
யாழ்ப்பாணத்திலிருந்து பெலியத்த நோக்கி நோக்கி பயணித்த 94 ஆம் இலக்க ரயில் மாகோ  ரயில் நிலையத்துக்கு அருகே  இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால், வடக்கு கிழக்கு பகுதிக்கான  ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

🦁மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!
இன்று(15) வயலுக்கு சென்ற ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்றுவெளி பகுதியில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் ஆற்றோர பற்றைக் காட்டுக்குள் சடலம் காணப்படுவதால் ஆணா பெண்ணா என இனங்காண முடியாத அளவுக்கு உருக் குலைந்துள்ளதாகவும்,காட்டு உயிரினங்கள் உடல் பாகங்களை சாப்பிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு
இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

🦁கள்ள காதல் காரணமாக நபர் ஒருவர் கொலை
கள்ள காதல் தொடர்பினால் தலாதுஒய, மைலபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதத் தாக்கப்பட்டு 38 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

🦁சிறுமியின் பெயரை விற்று பணம் பறித்த 2 இளைஞர்கள்
சிறுமியொருவர் நோய் வாய்ப்பட்டுள்ளதாக பொய் கூறி ஏமாற்றி, போலி டிக்கெட்டுகளை விற்று பொதுமக்களி டம் பணம் பறித்த 2 இளைஞர்களை பலாங்கொடை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
சிறுமியின் பெயரை பெயரிட்டும்  டிக் கட்டுகளை பல பெறுமதிகளில் அச்சி ட்டும் வங்கிக்கணக்கொன்றின் இலக்கத்தைக் குறிப்பிட்டும் அக்கணக்கி ல் விரும்பியோர் பணத்தை வைப்புச்  செய்யுமாறு இந்த டிக்கெட்டுகள் மூல ம் கேட்கப்பட்டுள்ளன.
பலாங்கொடை நகரில் நடமாடும் மேற்படி போலி ஆசாமிகள் பொ து மக்களிடம் பலாத்காரமாகவும் அழுத்தம் கொடுத்தும் சிறுமியின் பெயரி ல் பணம் பறிக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செ ய்யப்பட்டனர்.

🐘கீர்த்தி சுரேஷ் களமிரங்கும் 'படைப்பு எண்: 3'
சில மாதங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்று பிரமிக்கவைத்தார். இவர் தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார்.
அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் 'படைப்பு எண் : 3', என்ற திரைப்படத்திலே தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்குகிறார்.

🐘பா.ஜனதா தலைவர் கழுத்தை அறுத்துக் கொலை
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் சத்கார்வா கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் கோடா (வயது 40). பா.ஜனதாவின் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவராக இருந்து வந்தார்.
இவரை சத்கார்வா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அந்த இடத்தில் சில துண்டு பிரசுரங்களையும் விட்டுச் சென்றனர்.
அவற்றில், தினேஷ் கோடா பொலிஸ் உளவாளியாக செயல்பட்டதாகவும், தங்கள் பெயரில் மக்களிடம் வரி வசூலித்து வந்ததாகவும் மாவோயிஸ்டுகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

🦁இளைஞன் ஒருவர் மதுபோதையில் சடலமாக மீட்பு..!!
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 4 தடவைகள் தற்கொலைக்கு முயன்ற இளைஞன் ஒருவர் மதுபோதையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 24 வயதுடைய த.சசீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,
குறித்த இளைஞன் தினமும் மது போதையில் வந்து வீட்டில் தகராறில் ஈடுபவார் என்றும், ஏற்கனவே அவர் 4 தடவைகள் தற்கொலைக்கும் முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் கையில் கயிற்றுடன் வந்தவர் வீட்டில் இருந்த தாய் , தந்தை மற்றும் சகோதரரை விரட்டியடித்ததோடு, தற்கொலை செய்யப்போவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாகஅவர்கள் அயலில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பிய சமயம் குறித்த இளைஞர் படுத்திருந்த நிலையில் அவர் உறக்கத்தில் இருப்பதாக எண்ணியுள்ளனர்.
எனினும் இரவு 9.30 மணியளவில் தாயார் சென்று உணவு வழங்குவதற்காக எழுப்பியபோது அவரிடம் எந்தவிதமான அசைவும் இன்றிக் காணப்பட்டதனால். வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இளைஞன் உயிரிழந்திருந்தமை உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை உயிரிழந்த இளைஞனின் கழுத்தில் கயிறு இறுக்கிய அடையாளம் மட்டும் காணப்பட்டது.
இதேநேரம் குறித்த இளைஞனின் மரண விசாரணை நேற்றைய தினம் இடம்பெற்ற சமயம் தாய் மற்றும் மூத்த சகோதரன் ஆகியோர் கழுத்தில் அடையாளம் காணப்பட்டாலும் கயிறு பிறிதொரு இடத்திலேயே இருந்துள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

🦁யாழ் அரியாலையில் பரபரப்பு..!!
யாழ்ப்பாணம் அரியாலை நெடுங்குளம் பகுதியில் அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அரியாலை நெடுங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

🐘விஷ ரொட்டியை சாப்பிட்ட மாணவி பலி
தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அருகே, காமாட்சிபுரம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர், துளசி, 19; தனியார் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்தார்.இவரது வீட்டில், எலி தொல்லை அதிகமாக இருந்ததால், பன் ரொட்டியில், எலி மருந்து தடவி வைத்துஉள்ளனர். கல்லுாரி முடித்து, கடந்த, 6ம் தேதி மாலை, 5:00 மணிக்கு வீடு திரும்பிய துளசி, எலி மருந்து தடவியது என தெரியாமல், அந்த ரொட்டியை சாப்பிட்டார். மறுநாள் காலை, கல்லுாரிக்கு சென்று, வாந்தி எடுத்து மயங்கினார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், நேற்று இறந்தார்.ஓடைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

🐘குட்டையில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி
: விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பள்ளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த, வீரமணி, அம்பிகா தம்பதிக்கு, விஜயலட்சுமி, 12, என்ற மகளும்; வீரக்கண்ணு, 10, விஜயகுமார், 9, ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.நேற்று காலை, 8:30 மணியளவில், வீரக்கண்ணு, விஜயகுமார் மற்றும் அவர்களது நண்பர், விஷ்ணு, 9, ஆகியோர், அதே பகுதியில் உள்ள, மழைநீர் தேங்கிய, 9 அடி ஆழ குட்டையில் குளித்தனர்.அப்போது வீரக்கண்ணு, விஜயகுமாரும் நீரில் மூழ்கி இறந்தனர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, இருவரின் உடல்களையும் மீட்டனர்.எடைக்கல் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

🐘விபத்தில் தந்தை மகன் பலி
திருமங்கலம் அருகே, மறவன்குளத்தைச் சேர்ந்தவர், பெருமாள், 60. இவரது மகன், ஹரிகிருஷ்ணன், 30. இருவரும், விருதுநகர் மாவட்டம், அக்னாகுளத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, இரு சக்கர வாகனத்தில், ஊர் திரும்பினர். டி.கல்லுபட்டி, சோளபட்டி விலக்கு அருகே, இரவு 10:30 மணிக்கு, மதுரையிலிருந்து பேரையூர் நோக்கி சென்ற கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருவரும் பலியாகினர். போலீசார், கார் ஓட்டுனர், ராஜாவை கைது செய்தனர்.

🐘போதையில் உளறிய மாமா; சிக்கிக்கொண்ட போலி டாக்டர் மாப்பிள்ளை
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 32). இவருக்கும், வேலை விஷயமாக கோவை சென்ற சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி புனித அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த தாய்அன்பன் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது கார்த்திக், தான் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருவதாக தெரிவித்தார். அதன்பிறகு இருவரும் செல்போன் மூலம் நட்பை வளர்த்தனர்.
இதற்கிடையில் தாய்அன்பன் மூலம் வில்லிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் சாஸ்திரி தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கார்த்திக் தங்கினார். தினமும் சொகுசு காரில் ஆஸ்பத்திரிக்கு செல்வதும், மாலை வீடு திரும்புவதும் என இருந்தார். தாய்அன்பன் வீட்டில் உள்ளவர்களுடனும் நெருங்கி பழகினார். அப்போது, தான் கோடீஸ்வரன் எனவும், ஆனால் தாய்-தந்தை இல்லாத அனாதை என்றும் உருக்கமாக கூறினார். இதனால் அவருடன் தாய்அன்பனின் பெற்றோர் பாசமாக பழகினர்.
தாய்அன்பனின் பெற்றோரே, அதே பகுதியை சேர்ந்த அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் ஒருவரின் மகளை கார்த்திக்கிற்கு பெண் பார்த்து பேசி முடித்தனர். கடந்த புதன்கிழமை சென்னை கொளத்தூர் குமரன்நகரில் உள்ள ஒரு கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு கார்த்திக், பெண் வீட்டாரிடம் இருந்து ரூ.10 லட்சம் பெற்றதாக தெரிகிறது.
சென்னை, புழல் ரெட்டேரி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது கார்த்திக்கின் மாமா என்று கூறிக்கொண்ட ஜெயக்குமார் என்பவர்பெண் வீட்டாரிடம் வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள், ஏற்கனவே வரதட்சணையாக 11 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளோம். பெண்ணுக்கு 75 சவரன் நகை போட்டுள்ளோம். மேலும், திருமணப் பேச்சுவார்த்தையின்போது வரவேற்பு நிகழ்ச்சியை நீங்கள்தானே நடத்துவதாக ஒப்புக்கொண்டீர்கள். இதனால் பணம் தர முடியாது என்று பெண் வீட்டினர் கூறினர். இதனால் கார்த்திக்கின் மாமா ஜெயக்குமாருக்கும், பெண் வீட்டினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தச் சமயத்தில் போதையில் இருந்த ஜெயக்குமார், "நீங்கள் நினைப்பது போல கார்த்திக் அரசு மருத்துவர் இல்லை" என்று உளறியுள்ளார். அதைக் கேட்டு பெண் வீட்டினரும், மணமகளும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக புதுமாப்பிள்ளை கார்த்திக்கிடம் பெண் வீட்டினர் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் கார்த்திக் அரசு டாக்டர் இல்லை என்ற தகவல் தெரிந்ததும் பெண் வீட்டினர் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். நிலைமை விஸ்வரூபமானதைப் பார்த்தவர்கள் திருமண மண்டபத்திலிருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீசார் வந்து  கார்த்திக்கை கைது செய்தனர். மேலும், அவரின் மாமா என்று கூறிய ஜெயக்குமார், அவரின் மனைவி வசந்தி ஆகியோரையும் பிடித்தனர்.
மாமாவாக நடித்த ஜெயக்குமார் ஓவராக நடித்து போலி டாக்டரை காட்டி கொடுத்து விட்டார்.
"கார்த்திக்கிற்கு மாமாவாக ஜெயக்குமாரும், அத்தையாக வசந்தியும் நடித்தது தெரிய வந்தது. இதனால் அவர்களையும் கைது செய்துள்ளோம். கார்த்திக்கிடமிருந்து விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றையும், அரசு டாக்டர் என்று அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து கார்த்திக் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

🐘அழியுமா சினிமா?
புதுப்படத்தின், முதல் நாள், முதல் காட்சியை, வீட்டிலேயே பார்க்கும் வசதியை, 'ஜியோ' நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதனால், தியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற, கருத்து நிலவுகிறது.

🐘பட்டாசு வேன் கவிழ்ந்து நால்வர் பலி; 8 பேர் காயம்
சாத்துார் அருகே, பட்டாசு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்ததில், நான்கு பேர் பலியாகினர்.
விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே, சல்வார்பட்டி சக்தி பட்டாசு ஆலை வேலைக்காக, சிவகாசி, சூரநாயக்கன்பட்டி, மாரனேரி பகுதி தொழிலாளர்கள், 12 பேர், நேற்று காலை, வேனில் சென்றனர்.சாத்துார், சுப்ரமணிய புரம் அருகே, காலை, 9:00 மணிக்கு, தனியார் கல்லுாரி பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் கவிழ்ந்தது.இதில், 16 - 31 வயதுடைய, நான்கு பேர் இறந்தனர். இரு சிறுமியர் உள்பட, எட்டு பேர் காயடைந்தனர்; அவர்கள், சாத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

🐘சிறப்பு பூஜை செய்வதாக கூறி பெண்களிடம் 100 பவுன் நகை மோசடி
அமைந்தகரை பொன்னு வேல் பிள்ளை தோட்டம் 5 வது தெவைச் சேர்ந்தவர் ஆனந்தன்(24).
இவர் அதே பகுதியில் சாமியார் போல் நடித்து வந்துள்ளார். திருமணமாகாத பெண்களுக்கு சிறப்பு பூஜை செய்வதாக கூறி வீட்டில் பூஜை செய்யும் போது தங்க நகைகளை கொண்டுவந்து பூஜையில் வைக்க சொல்லி கூறியுள்ளார்.
இந்த நகையை 21 நாள் கலசத்தில் இருந்து வெளியே எடுக்க கூடாது எனக்கூறிவிட்டு லாவகமாக திருடி சென்று 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அவர் 100 பவுன் நகை வரை நூதன முறையில் திருடி அதே பகுதியில் உள்ள நகை அடகு கடையில் வைத்து தான் வாங்கிய கடனை அடைக்க இந்த பணத்தை அவர் செலவழித்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து போலி சாமியார் ஆனந்தனை அமைந்தகரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது

🐘மாணவிகளிடம் சில்மி‌ஷம் - ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
பவானி அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் விதைப்பண்ணை அருகே வசித்து வரும் செல்லமுத்து மகன் சக்திவேல் (47). இவர் பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
ஆசிரியர் சக்திவேல் 11-ம் வகுப்பு மாணவிகளிடம் தவறான முறையில் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 11-ம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததுள்ளது.
இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் தங்களது உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டு தவறான முறையில் நடக்கும் ஆசிரியரை பணி நீக்கம் செய்திட வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பவானி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் ஆசிரியர் சக்திவேல் தலைமறைவானார்.
புகாரின் பேரில் ஆசிரியரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சக்திவேலை தேடி வந்தனர்.
இந்நிலையில் லட்சிநகர் பஸ் ஸ்டாப்பில் சங்ககிரி செல்வதற்காக சக்திவேல் நின்று கொண்டிருந்தார். பவானி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வினோதினி அவரை கைது செய்தார். பின்னர் சக்திவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

🐘கும்பகோணம் அருகே ஓய்வு பெற்ற பெண் சார்பதிவாளர் மர்ம மரணம்
கும்பகோணம் அருகே திருமங்கலகுடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணி. இவரது மனைவி ஜானகி (வயது81). ஓய்வு பெற்ற சார் பதிவாளர். ஜானகி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 10.45 மணியாகியும் ஜானகியின் வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் அருகில் உள்ள வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது அங்கு வாயில் ரத்தம் கசிந்த நிலையில் ஜானகி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடன் இதுபற்றி அவரது மகள் கெஜலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் தனது தாய் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கெஜலட்சுமி திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

🐘ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை விவசாயிகள் விரட்டி அடித்ததால் பரபரப்பு
நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எண்ணெய் கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின்போது விளைநிலங்களில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல்வேறு இடங்களில் விளைநிலங்களில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமலும், குழாய்கள் பதிக்கப்படாமலும் உள்ளது.
இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில் விவசாயிகள், சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக விளைநிலங்களில் தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூடும்படி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினரிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால், விளைநிலங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமலேயே உள்ளன.
இந்த நிலையில் நேற்று ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள், விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள், சம்பா சாகுபடி செய்ய இருப்பதால் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூடும்படி கேட்டனர். இது தொடர்பாக ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த விவசாயிகள், ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை விரட்டி, விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

🐘 ஒரே மொழியாக இருக்க முடியாது - ஜக்கி வாசுதேவ் பேட்டி
ஒரே நாடாக இருக்க வேண்டுமே தவிர ஒரே மொழியாக இருக்க முடியாது என திருவாரூரில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார்.

🐘பேனர் வழக்கில்: அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க தனிப்படை
பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில், தலைமறைவான அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

🐘பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை
தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது.

🐘சென்னையில் 3 ஆயிரத்து 964 பேனர்கள் அகற்றம்
சென்னையில் இதுவரை 3 ஆயிரத்து 964 பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

🐘இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்”
இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்” என்ற உள்துறை மந்திரி அமித்ஷாவின் கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரது கருத்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.


🔻🔻🔻🔻🔻14/09/2019🔻🔻🔻🔻🔻
🦁 கொன்ற தாயின் சடலத்தோடு மாயமான மகனும் பேரனும்
ஹட்டன் வட்டவளை விக்டன்  தோட்டப் பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாயின் சடலத்தை மகனும், பேரனும் முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்றதாகதாக கூறப்பட்ட நிலையில்  நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சடலம் அவர்களது வீட்டின் கிணற்றிலிருந்து  பொலிஸாரால் மீட்கப் பட் டுள்ளது.
 70 வயதுடைய ராதை என்ற தாயை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அறையொன்றில் வைத்து மகன் மருமகள் பேரன் ஆகிய மூவரும் இணைந்து தடியால் தாக்கி வாய் மட்டும் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணறு ஒன்றில் மறைத்துவிட்டு மகனும் 13 வயது பேரனும் தலைமறைவாகி இருந்தனர்.
 போலீஸ் விசாரணையில் , குறித்த மூதாட்டியின் இரண்டாவது பேரனான 8 வயதுடைய கோபாலகிருஷ்ணன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், தனது பாட்டியை தனது தந்தை மற்றும் அண்ணன் தடியால் அடித்ததாகவும்அதன்போது பாட்டியின் கண்களில் இருந்து ரத்தம் வந்ததாகவும், பின்னர் தனது பாட்டியை பொதி ஒன்றில் கட்டி எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதலில் பிரதான சந்தேக நபரின் மனைவியை விசாரணை செய்ததில்   மகன்,தாய்,பேரன்  உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு , சம்பவம் தொடர்பாக மகனைத் தாக்க வந்த தோட்டப் பகுதி மக்களை  போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

🦁பலாலி விமான நிலையம் தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்
பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் விமான நிலையமாக பெயரிடப்படும். இங்கிருந்து அடுத்த மாதம் (ஒக்டோபர்) இந்தியாவின் முக்கிய நான்கு நகரங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படவுள்ள நேரடி விமான சேவை மற்றும் இதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

🦁 ஜெனிவாவில் ஒலித்த 'காணாமல் போனவர்கள் '
மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது அமர்வில், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் ஆற்றிய உரையில் ,காணாமல் போனவர்களின் அலுவலகம் தொடர்பில் கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில்  அவர், “காணாமல் போனவர்கள் குறித்த ஒரு சுயாதீன அலுவலகம் 2016இல் நிறுவப்பட்டு, 2018இல் முழுமையாக செயற்படுத்தப்பட்டது.
மேலும், மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தனிநபர் மற்றும் கூட்டு இழப்பீடுகளை வழங்குவதற்காக, இழப்பீட்டுக்கான அலுவலகம் 2018ஒக்டோபரில் நிறுவப்பட்டது.
காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் காணாமல் போனவர்களின் பெயரில் சில வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவும் முகமாக, இறப்புச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, தற்போது உடனில்லாத சான்றிதழ்களை வழங்குவதற்கான செயற்பாடு சட்டத் திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அதன் இடைக்கால அறிக்கையில் மேற்கொண்ட பரிந்துரைக்கிணங்க, தற்போது உடனில்லாத சான்றிதழைக் கொண்டுள்ள காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு, 6ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் வழங்குவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்தோடு, காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களை ஆதரிப்பதற்காக 2019ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்டத்தில், 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படவுள்ளது.
இவ்வாறு பிரதிநிதி தயானி மெண்டிஸ் உரையாற்றியுள்ளார்.

🦁திருடச் சென்ற இளைஞரை மடக்கிப் பிடித்த மக்கள்
யாழ். இராசாவின் தோட்டம் பகுதியில் நேற்று (13) மதியம் வீடொன்றிற்குள் புகுவதற்கு சென்ற இளைஞர், சத்தம் கேட்டதுடம், ஓடி வந்து முச்சக்கரவண்டியில் ஏறி ஓடுவதற்கு முற்பட்டுள்ளார்.
அந்த வேளையில், பிரதேச மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்படுயப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, மேற்படி இளைஞர் திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் என்றும், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஆள் அடையாள அட்டை இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த இளைஞரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

🦁முல்லைத்தீவு,கிளிநொச்சி காணி விடுப்பு; ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் படைத்தரப்பு, பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் கலந்துரையாடல்  நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முதற்கட்டமாக இடம்பெற்றது.

🦁 மன்னாரில்   5ஜி தொலைத் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மன்னார்  பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 5ஜி தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமைக்கப்படவுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தை உடன் நிறுத்தக்கோரி, பள்ளிமுனை கிராம மக்கள்  மகஜர் ஒன்றை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று சனிக்கிழமை கையளித்துள்ளனர்.


🦁 பாடசாலை அதிபர் அலுவலகத்துக்கு தீ வைப்பு; முக்கிய ஆவணங்கள் நாசம்
கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்திற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டு அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
காலை 6.30 க.பொ.த சதாரண தர மாணவர்களுக்கு இடம்பெறும் விசேட வகுப்புக்காக மாணவர்கள் பாடசாலைக்கு சென்ற போது அதிபர் அலுவலகத்திற்குள்லிருந்து புகை வெளியேறுவதனை அவதானித்தனர். மாணவர்கள் உடனடியாக வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றுசேர்ந்து தீயை அணைத்து பாதுகாக்க கூடிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை மீட்டுள்ளனர்.
அதிபர் அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளது. எனவே கதவினை உடைத்து உள்ளே சென்ற விசமிகள் மண்ணெண்ய் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மண்ணெண்ய் மணம் வீசுவதோடு தீப்பெட்டி ஒன்றும் அலுவலகத்திற்குள் காணப்பட்டுள்ளது.

🦁 தாமரைக் கோபுரத் திறப்பு விழாவை முன்னிட்டு முத்திரை வெளியீடு
கொழும்பு, டி. ஆர்.விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் உயரமான கோபுரமாக அமையப்பெற்றுள்ள தாமரை கோபுரம் (Lotus Tower) எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
இக் கோபுரத்தின் நினைவாக அன்றைய நாள் இலங்கை தபால் திணைக்களத்தினால் 45.00 ரூபா பெறுமதியில் முத்திரை மற்றும் தபால் உறை வெளியிடும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

🦁மனைவி மீது அமில தாக்குதல் மேற்கொண்ட கணவர் கைது..!!!
ஹொரணை – அங்குருவாதோட்ட பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி மீது அமில தாக்குதல் மேற்கொண்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த 30 வயதான பெண், ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

🐘 மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில்: பஸ் நிலையத்தில் மாமனாரை குத்திக்கொன்ற டிரைவர்
மதுரை மாவட்டம், மேலூர் அருகே நத்தம் ரோட்டில் உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் நல்லமணி (வயது 45). டிரைவர். அவருடைய மனைவி தனம் (35). இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தென்னரசு (10) என்ற மகனும், மகாலட்சுமி (5) என்ற மகளும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்த நல்லமணி கடந்த ஒரு ஆண்டாக கோவையில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்தார். தனம் தனது 2 குழந்தைகளுடன் அதே ஊரில் உள்ள தனது தந்தை தங்கையாவின் வீட்டில் வசித்து வருகிறார். குடும்ப தகராறில் தங்கையாவின் மீது அவருடைய மருமகன் நல்லமணிக்கு முன்விரோதம் இருந்தது.
இதற்கிடையே மேலூர் கோர்ட்டில் நடைபெற்று வரும் சொத்து வழக்கு தொடர்பாக ஆஜராக தங்கையா நேற்று வந்தார். இதனை எப்படியோ அறிந்த நல்லமணியும் மேலூர் வந்தார். அவர் தங்கையாவை எதிர்பார்த்து மேலூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். முதுகில் ஒரு பேக்கையும் மாட்டி இருந்தார்.
பஸ் நிலையம் அருகில் தங்கையா நடந்து வந்ததை கவனித்தார். அப்போது அவரை நல்லமணி கத்தியுடன் வழிமறித்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தங்கையா அங்கிருந்து தப்பி ஓட முயற்சிப்பதற்குள், அவரை சராமாரியாக நல்லமணி கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் தங்கையா சுருண்டு கீழே விழுந்து சற்று நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொடூர கொலையை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சிதறி ஓடினார்கள். தங்கையா உடல் அருகே யாரும் வந்துவிடாதபடி ரத்தம் சொட்டிய கத்தியுடன் நல்லமணி நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்களில் சிலர் துணிச்சலாக நல்லமணியின் பின்பக்கமாக வந்து, கத்தியை தட்டிவிட்டனர். பின்னர் அவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு மேலூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் நல்லமணி பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும் தங்கையாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், “தன்னுடைய மனைவி பிரிந்திருக்க மாமனார் தங்கையாதான் காரணம் என நல்லமணி நினைத்துள்ளார். மேலும் நல்லமணி மீது போலீசில் ஏற்கனவே புகாரும் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் மாமனாரை நல்லமணி கொலை செய்திருக்கலாம்” என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

🐘 நீண்டநேரம் சாலையில் கிடந்த சுபஸ்ரீ உடல்
பேனர் விழுந்ததில் பலியான சுபஸ்ரீயின் உடலை மீட்டு, இந்த வழக்கை யார் விசாரிப்பது? என பரங்கிமலை போக்குவரத்து போலீசாருக்கும், பள்ளிக்கரணை சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் சுபஸ்ரீயின் உடல் நீண்டநேரமாக சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.
சுமார் 2 மணிநேரத்துக்கு பிறகு பரங்கிமலை போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் உதவியுடன் சுபஸ்ரீயின் உடலை மீட்டு, போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையின் எதிர்புறமாக தூக்கிச்சென்று மினிலோடு வேனில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த பகுதியில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அது இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என தெரிகிறது.
ஆனால் அருகில் உள்ள கார் உதிரிப்பாகங்கள் விற்பனை கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், சாலையின் நடுவில் கட்டி இருந்த ‘பேனர்’ காற்றில் பறந்து சென்று ஸ்கூட்டரில் செல்லும் சுபஸ்ரீ மீது விழுவதும், இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அத்துடன் பலியான சுபஸ்ரீயின் உடல் ஆம்புலன்சில் ஏற்றாமல் சரக்கு வேனில் ஏற்றிச்செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. நேற்று அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
ஆம்புலன்ஸ் இன்றி லோடு வேனில் அவரது உடலை ஏற்றிச்சென்ற கொடூர காட்சியை பார்த்தவர்களின் நெஞ்சத்தை பதைபதைக்க வைத்தது.


🐘 விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை உருக்கமான கடிதம் 
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் உத்திராபதி. அவருடைய மகன் உதயராஜ் (வயது 29). இவர் எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். பின்னர் அவருக்கு மதுரை மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் பிரிவில் பட்ட மேற்படிப்பு படிக்க சீட் கிடைத்தது. அதை தொடர்ந்து அவர் தன்னுடன் படிக்கும் நண்பருடன் சேர்ந்து, மதுரை மதிச்சியம் பகுதியில் வீடு எடுத்து தங்கி மருத்துவக்கல்லூரியில் படிப்புடன், டாக்டர் பணியும் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு உதயராஜ் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அதன்பின்னர் அவரது நண்பர் இரவு பணிக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார்.
காலையில் அவருடைய நண்பர்கள் சிலர் போனில் உதயராஜை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. எனவே வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவரும் சென்று கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் மதிச்சியம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உதயராஜ் பிணமாக கிடந்தார். அவர் அருகில் ஊசி மற்றும் மருந்துகள் சிதறி கிடந்தன. எனவே அவர் தனக்கு தானே விஷ ஊசியை போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில் போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது, உதயராஜ் எழுதியதாக கடிதம் ஒன்று சிக்கியது. அதில் வேலைப்பளு மற்றும் மேற்படிப்பை சரவர படிக்க முடியாத வேதனையில் தற்கொலை முடிவை எடுத்தேன் என்று உருக்கமாக எழுதி இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உதயராஜ் நள்ளிரவு வரை செல்போனில் பேசி உள்ளார். அதன்பின்னர் தான் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உதயராஜூக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனவே அவர் நள்ளிரவு வரை யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

🐘 ரூ.10 லட்சம் கேட்டு நர்சு கடத்தல் போலீசில் அண்ணன் புகார்
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் விக்னேஷ்(வயது 24), மகள் வித்யா(22) இருவரும் சென்னையில் தங்கி உள்ளனர். விக்னேஷ், சிறுசேரியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்திலும், அவருடைய தங்கை வித்யா, தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாகவும் வேலை செய்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநள்ளாறில் உள்ள தனது நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்ள வித்யா சென்றுவிட்டார். திருமணம் முடிந்து நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து அரசு பஸ்சில் ஏறி விட்டதாகவும், காலையில் கோயம்பேடு வந்து விடுவதாகவும் தனது அண்ணனுக்கு செல்போனில் வித்யா தகவல் தெரிவித்தார்.
இந்தநிலையில் நேற்று காலை வித்யாவின் தந்தை ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட மர்மநபர்கள், “உங்கள் மகள் வித்யாவை நாங்கள் கடத்தி விட்டோம். ரூ.10 லட்சம் கொடுத்தால் அவரை உயிருடன் ஒப்படைப்போம். பணத்தை தயார் செய்து வையுங்கள்” என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டனர்.
சிறிது நேரத்தில் விக்னேசையும் தொடர்புகொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மர்மநபர்கள் மிரட்டினர். அப்போது அவர், “எனது தங்கை கடத்தப்பட்டதை நான் எப்படி நம்புவது?” என்றார்.
அதற்கு மர்மநபர்கள், வித்யாவிடம் செல்போனை கொடுத்து பேச வைத்தனர். போனில் பேசிய வித்யா, “மர்மநபர்கள் என்னை கடத்தி விட்டனர். அண்ணா என்னை சீக்கிரம் காப்பாற்று” என்று கதறினார். அதற்குள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், இதுபற்றி கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வித்யா கடத்தப்பட்டது குறித்தும், கடைசியாக வந்த செல்போன் இணைப்பு மற்றும் தற்போது மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் இணைப்பு எங்கு உள்ளது? என்பது குறித்தும் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் வித்யா உண்மையாகவே கடத்தப்பட்டாரா? அல்லது கடத்தல் நாடகம் ஆடுகிறாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

🐘 கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் மரபை மீறி நடந்ததால் - பக்தர்கள் அதிருப்தி
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் மரபை மீறி நடந்த ஆடம்பர திருமணம் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 11-ந் தேதி சிவகாசியை சேர்ந்த பிரபல பட்டாசு அதிபரின் மகளுக்கும், சென்னை பிரபல பாத்திர கடை அதிபரின் மகனுக்கும் திருமணம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இது தான் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.
திருமணத்தையொட்டி ஆயிரங்கால் மண்டபமே நட்சத்திர ஓட்டல் போன்று மின்னொளி மற்றும் வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதாவது கோவில் விழா நேரத்தில் கூட அதுபோன்ற அளவுக்கு அலங்காரம் நடைபெற்று இருக்காது. அந்த அளவுக்கு ஆயிரங்கால் மண்டபம் ஜொலித்தது.
இங்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தில் மணமேடை அமைத்து மணமகன், மணமகள் கழுத்தில் தாலிகட்டி திருமணம் நடந்தது. தொடர்ந்து திருமண சடங்குகளும் அங்கு வைத்தே நடந்துள்ளது. மேலும் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் அங்கேயே விருந்தும் பரிமாறப்பட்டுள்ளது.
ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் நடைபெறும் காலத்தில் நடராஜர் ஆனந்த நடனம் புரியும் ஆயிரங்கால் மண்டபத்தின் புனிதமே பாதிக்கப்பட்டு விட்டதாக பக்தர்கள் குமுறுகிறார்கள்.

🐘 5 வயது மகள் பலாத்காரம் கொடூர தந்தை கைது
வேலுார் மாவட்டம், திருப்பத்துாரைச் சேர்ந்தவர் ஷான்பாசா, 50. கூலித் தொழிலாளியான இவருக்கு, ஆறு மனைவியர்; இவர்களும் கூலித் தொழிலாளிகள். இவருக்கு, நான்கு மகன்கள், ஏழு மகள்கள் உள்ளனர். அனைவரும், ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.இதில், 5 வயது மகள், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வீட்டு முன் விளையாடி கொண்டிருந்தார். அங்கு வந்த ஷான்பாசா, மகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் வந்த சிறுமியின் தாய், இதைப் பார்த்து கூச்சல் போட்டார். அங்கிருந்தவர்கள், சான்பாஷாவை பிடிக்க ஓடி வந்தனர்.அவர்களை தாக்கி, ஷான்பாஷா தப்பியோடினார். காயமடைந்த சிறுமி, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார். சிறுமியின் தாய் புகாரின்படி, திருப்பத்துார் நகர போலீசார், ஷான்பாசாவை நேற்று கைது செய்தனர்.

🐘 ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயற்சி
அரசு பள்ளி ஆசிரியையை, 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அதை மறைக்க போலீசார் முயற்சிப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, துறையூர் அருகே உள்ள பச்சமலையில், கோம்பை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருதை கிராமத்தில், யூனியன் துவக்கப் பள்ளி உள்ளது. 30 குழந்தைகள்இங்கு, ஐந்தாம் வகுப்பு வரை, 30 குழந்தைகள் படித்து வருகின்றனர்.இங்கு, 26 வயதுடைய, திருமணமான ஆசிரியை ஒருவர் பணியாற்றி வருகிறார். துறையூரில் தங்கி, தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருகிறார். பள்ளிக்கு செல்ல, செம்புளிச்சான்பட்டி வரையே பஸ் வசதி உள்ளது. அதன்பின், அடர்ந்த காடு வழியாக, 2 கி.மீ., நடந்து, மருதை கிராமத்துக்கு செல்ல வேண்டும்.கடந்த, 9ம் தேதி மாலை, பள்ளி முடிந்து, பஸ்சை பிடிக்க, செம்புளிச்சான் பட்டிக்கு, ஆசிரியை நடந்து சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து வந்த, மருதை கிராமத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் ஒருவன், ஆசிரியையை கட்டிப் பிடித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளான்.அவனிடம், 10 நிமிட போராட்டத்துக்கு பின் தப்பிய ஆசிரியை, மருதை கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தார். அன்று இரவே, துறையூர் போலீசிலும் புகார் அளித்தார். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.சிறுவன் குடும்பத்தாரிடம் போலீசார் ஆயிரக்கணக்கில் பணம் பெற்று, சிறுவனை பிடிக்க நடவடிக்கை எடுக்காமல், ஆசிரியையை சமாதானப்படுத்தவே முயற்சித்து வருகின்றனர்.
கிராமத்தினர் புகார்
இதற்கிடையில், அந்த சிறுவன், மருதை கிராமத்தைச் சேர்ந்த பெண்களிடமும் இதுபோல் நடந்துஉள்ளான். அந்த கிராமத்தில், 30 ஆண்கள், சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, துறையூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.இந்த சிறுவனின் அண்ணனும், இதேபோல் பாலியல் விவகாரங்களில் சிக்கி, தற்கொலை செய்து கொண்டவர்.

🐘 7 குழந்தை திருமணம் 2 நாட்களில் நிறுத்தம்
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தில், இரண்டு நாட்களில், ஏழு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில், குழந்தை திருமணங்கள் நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த அலுவலர்கள், இரண்டு நாட்களாக, பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தினர்.அப்போது, திருவண்ணாமலை அடுத்த சே.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, 25 - 26 வயதுடைய, மூன்று வாலிபர்களுக்கு, 17 வயது சிறுமியருடன் நடக்கவிருந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.இதேபோல, மேலும் சில கிராமங்களில் நடக்க இருந்த, நான்கு குழந்தை திருமணங்கள் என, மொத்தம், ஏழு திருமணங்களை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

🐘 பகவதி அம்மன் வழிபாடு கட்டணம் உயர்த்த முடிவு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில், வழிபாட்டு கட்டணத்தை, மூன்று மடங்கு வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.இங்கு நடத்தப்படும் வழிபாடுகளின் கட்டணத்தை, மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டு, அதற்கான விபரங்கள், கோவில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.இதில் ஆட்சேபனை இருந்தால், செப்., 20க்குள் கோவில் அலுவலகத்தில், பக்தர்கள் தெரிவிக்கலாம்.

🐘 பாலிவுட்டிற்கு செல்லும் யோகி பாபு
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த தர்ம பிரபு, கூர்கா போன்ற படங்கள் ஏற்கனவே ரிலீசான நிலையில், பன்னி குட்டி, மண்டேலா, பப்பி போன்ற ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில், பாலிவுட் படத்தில் அமீர் கானுடன் யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஆஸ்கர் விருது வென்ற ஆங்கில படமான ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கான் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக தான் யோகி பாபுவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

🐘 இருளப்பசாமி என்பவர் ‘’ஜீவசமாதி நாடகம்’ தோல்வி
சிவகங்கை அருகே பாசாங்கரையில் இருளப்பசாமி என்பவர் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அவரது ‘ஜீவசமாதி நாடகம்’ தோல்வியில் முடிந்ததால், காத்திருந்த கலெக்டர் முதல் பொதுமக்கள் வரை அத்தனை பேரும் கடும் அதிருப்தியுடன் சென்றனர். சிவகங்கை அருகே பாசாங்கரையை சேர்ந்தவர் இருளப்பசாமி (71). இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். இவர் 10 நாட்களுக்கு முன்பு, ‘செப். 13 (நேற்று) நள்ளிரவு 12 மணி முதல் காலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப்போகிறேன்’ என பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். இத்தகவலறிந்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாசாங்கரையில் குவிந்தனர். தினமும் குவிந்த மக்களுக்கு இருளப்பசாமி அருளாசி வழங்கினார். மேலும் அவரிடம் அருளாசி வாங்க சிவகங்கை மாவட்ட உயரதிகாரிகள் பலரும் குவிந்தனர்.
ஜீவசமாதி அடையப்போவதாக அவர் அறிவித்திருந்த நாளான செப். 13 (நேற்றுமுன்தினம்) அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜீவசமாதிக்காக 10 அடி நீளம், 10 அடி அகலத்தில் முன்னதாகவே பெரிய குழி தோண்டப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. அதே இடத்திலேயே சாமியானா பந்தல் அமைத்து தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி அளித்து வந்தார். மாலை முதல் நிமிடத்திற்கு நிமிடம் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர். இரவு 11.30 மணியளவில் இருளப்பசாமியை சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் சந்தித்து ஆசி பெற்றதோடு அங்கேயே அமர்ந்திருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் இருளப்பசாமியை ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அரசு மருத்துவர் குழு பரிசோதனை செய்தது. பக்தர்கள் சிலர் பரவசத்தில் சிவ கோஷங்களையும், தேவார பாடல்களையும் பாடினர். இடையிடையே இருளப்பசாமி பக்தர்களுக்கு எழுந்து அருளாசி வழங்கினார்.
 நேரம் அதிகரிக்க, அதிகரிக்க டென்ஷன் எகிறியது. அவ்வப்போது இருளப்பசாமி எழுந்து நின்று, ‘‘என் ஜீவன் அடங்கும் நேரம் வந்துவிட்டது. சரியாக அந்த நேரம் வந்ததும், நான் தியானத்தில் ஈடுபடுவேன். பெண்கள் விளக்கேற்ற வேண்டும். அந்த விளக்கு ஜோதியில் ஐக்கியமாகி விடுவேன்...’’ என்றெல்லாம் கூறி பரபரப்பை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார். எனினும் மருத்துவப் பரிசோதனையில் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் அவருக்கு சீராகவே இருந்தது. ஜீவசமாதிக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரமான நேற்று அதிகாலை 5 மணியை கடந்தும் இருளப்பசாமி, தெம்பாக அமர்ந்திருந்தார். இதனால் அங்கு குவிந்திருந்த பக்தர்களிடையே பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சிலர் இருளப்பசாமியிடம் கேட்டபோது, ‘‘ஜீவசமாதிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நேரம் முடிந்துவிட்டது.
வேறொரு நாளில் அடங்குவேன்...’’ என்று ‘கூலாக’ கூறினார். இதனால், பக்திப்பரவசத்துடன் அங்கு கூடியிருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர்.  பத்து நாளாக பரபரப்பை ஏற்படுத்திய இருளப்பசாமியின் ‘ஜீவசமாதி நாடகம்’ ஒரு வழியாக அதிகாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து கூட்டத்தை கலைந்து செல்லும்படி போலீசார் வலியுறுத்தினர்.  தொடர்ந்து கலெக்டர் அறிவுறுத்தலின்பேரில் இருளப்பசாமியை போலீசார் அவரது வீட்டிற்கு கூட்டிச் சென்றனர்.

🐘 கருக்கலைப்பில் இறந்த காதலி – பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன் 
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஷிபராணி ஜெயபிரபு என்ற 22 வயது மாணவி பைன் ஆர்ட்ஸ் கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கு ரவிக்குமார் என்ற இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது. இதனால் ஷிபராணி கர்ப்பமாகியுள்ளார். இதனை அடுத்து கருவைக் கலைக்க தனியார் நர்சிங் ஹோம் ஒன்றுக்கு சென்றுள்ளனர்.
அப்போது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் போட்ட அதிக திறன் கொண்ட ஊசியால் ஷிபராணி உயிரிழந்துள்ளார். அதனால் பயந்துபோன அவரது காதலன் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று தெலங்கானாவில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதையடுத்து ஷிபராணியின் பெற்றோர் புகார் படி போலிஸார் நடத்திய விசாரணையில் தெலங்கானாவில் உள்ள காட்டுப்பகுதியில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராணியின் காதலர் ரவிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ரவிக்குமாரின் தந்தை காவல்துறையால் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

🐘 தந்தையின் பெண்கள் சகவாசம் – சொத்துக்காகக் கொலை செய்த மகன்
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை அடுத்த கரையான் பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவருக்கு பல வருடங்களுக்கு திருமனமான நிலையில் தனது மனைவியைப் பிரிந்து வேறொரு திருமனம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்துப்பாண்டி என்ற 25 வயது மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது மனைவியுடனும் தகராறு செய்துவிட்டு தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார் குபேந்திரன். அப்போது அந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பெண்ணோடு அவருக்கு தொடர்பு ஏற்பட்டு அவருடன் வாழ ஆரம்பித்துள்ளார். இது அவரது மகன் முத்துப்பாண்டிக்கு தெரிய வர தந்தையின் மூலம் சொத்தில் அந்த பெண்ணுக்கும் பங்கு சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார்.
இதனால் குடும்ப சொத்துகளைக் காப்பாற்ற தனியாக வீட்டில் இருந்த தனது தந்தையைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.


🌍மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்

சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் இரண்டு ஆலைகள் மீது இன்று அதிகாலை, ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
தேடல் துணைகள்: thamizh, tamil, sampanthar, vadakilakku, vadakku, kizhakku, arasu, maiththiri, ranil, muslim, hindu, jesu, pothai, heroyin, val, jaffna, kilinochchi, maddakkalappu, butticola , ponnampalam, malaiyakam thondamaan, tiger, koddiya, ilankai ,ceylon, sinkalese , unp, slfp, suren  ragavan, vigginesvaran,tricomalai , vavuniya, mullaitivu, mannar , puththalam, kandy,achchuvely araly, ariyalai, allarai, allaippiddi, alvay, alaveddy, anailaithivu
aththiyadi,avarankal, anaikkoddai, edaikadu, enuvil, erupalai, elakkanavaththai,elavalai, echchankadu, echchamoddai, evinai, uduppiddi, udivil urumpirai, urelu, eluthumadduval, elalai, oddakappulam, kachchay, kaddudai, kadduvan, kantharmadam, kantharodai, kamparmalai, karanavay, karanthan, karampon, karaveddi, kalvayal, kalviyankadu, kalapumy, kankesanthurai, kks, karainagar, kirimalai, kuppilan, kurunakar, kurumpasiddi, kerudavil, kerpeli, kerudavil, kerpely, kaithadi, kokkuvil, kodikamam, kommanthurai, kollankaladdi, kolumpuththurai, kondavil, koppai koyirkudiyiruppu, sankaththanai, sankanai, sankuveli, sandilippay,sarasalai, savakachchery,singanagar.siththankeny, sinthupuram, sillalai, siruvilan,siruppiddi,sundikkuly, suthumalai,sunnakam, chulipiram, choliyapuram, thachchanthoppu, thanankilappu, thavady,thirunelvely, thunnalai, thellippalai, thevapuram,thaiyiddi, thondaimanaru, tholpuram, nainadivu, nallur, navakkiry, navaly, nagarkovil, nayanmarkkaddu, naranthanai, navanthurai, nilavarai, nirvely, niraviyady, nunavil, nelliyady, pandaththeruppu, pandaththarippu, pannagam, paththameny, pointpirro, paruththithurai, palaly ,pannalai, panippulm, pasaiyur, palavy, puththur
puloly, puliyankudal, punnalaikkadduvan, periyavilan, ponnalai, madduvil, mandaidivu, mandaithivu, maruthanarmadam, mallakam, maravanpulavu, masiyappiddi, mathakal, mavaliththurai, maviddapuram, manippay,mirusuvil, mesalai, mulai, vaddukkoddai, vadamarachchi, vadaliyadaippu, vannarpannai, vayavilan, varany, vallipuram, valveddiththurai, varuththalaipilan, viyaparimulai,velanai thevu, punkuduthevu,