கணவன் ,மனைவி - குறும் படம்

📽→ செய்திகள் 15-12-2019

 இந்திய கடற்படை ரோந்து கொள்ளும் இந்திய கடற்பரப்பினுள், தமிழக மீனவர்களை இலங்கைப் படை தாக்கி விரட்டியடிப்பது என்பது சாத்தியமற்ற  பொய்யான செய்தி என கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்ததாகவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதபடுத்தியதாகவும் தமிழக ஊடகங்களில் வெளியாகும் செய்தியை இலங்கை கடற்படை முற்றாக மறுத்துள்ளது. இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட எந்தவித உரிமையும் இல்லை என இலங்கை கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரியபண்டார கூறியுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கை மீனவர்கள் தம்மை பாதுகாக்குமாறு கோரியே அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதாகவும் அதற்கமைய நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களை பாதுகாப்பது கடற்படையின் கடமை என இலங்கை கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
மீன்பிடித் துறையை விருத்தி செய்வதற்கான அதிகளவான முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் நோர்வே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழ்நாடு  மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-18, 2018-19 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வழமைபோல் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு மற்றும் ரொக்கம் 1000 ரூபாய் ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வழங்க தமிழ்நாடு  அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சென்னை மெரினா கடற்கரையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது அங்கு வந்த போலீசார் இளைஞர்களின் போராட்டத்தைத் தடுத்துள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்தியப்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. இணையதள சேவை நாளை வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவுடனான வர்த்தக போரை நிறுத்தி வைத்து, இன்று (ஞாயிற்றுக் கிழமை) அமலாக இருந்த 15 சதவீத வரிவிதிப்பை ரத்து செய்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பிலிப்பைன்ஸ் தீவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மின்டானாவில் இன்று மக்கள் தொகை அதிகம் கொண்ட தவாவ் நகருக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவில் ஒரே நேரத்தில் 3 சூரியன் தெரிந்ததால் அங்குள்ள மக்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது வானில் இருக்கும் பனித்துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கனோ நகரில் ஒரு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 வாகனங்களிலும் தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் 28 பேர் உடல் கருகி பலியாகினர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் தயாராக இருப்பதாகவும், ஆனால் சீனா அதனை ஏற்க தயக்கம் காட்டி வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஜெர்மனியின் பிளாங்கன்பெர்க் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து நேரிட்டதில் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பெரியகுளம்: பெரியகுளத்தைச் சேர்ந்த அரசு டாக்டர், கடந்தாண்டு நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மீண்டும் மாயமானார். அவர், மீண்டும் ஆசிரமத்திற்கு சென்றுவிட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
செவ்வாய் கிரகத்தில் பனி நீர் இருப்பதாக ஆதாரங்களுடன் நாசா அதிகாரபூர்வமான தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் பூமிக்கு 2.5 சென்டிமீட்டர் ஆழத்தில் பனி இருப்பதாகவும், இது பிற்காலத்தில் வெளியே தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் மின் சக்திக்கான தேவையை பூர்த்தி செய்வது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வித் தகைமை கொண்டவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியை நிறைவு செய்யும் ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி பெற்ற துறைக்கு ஏற்ப அரச வேலைவாய்ப்புகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க சார்பில் பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த அருண்33 வயதான  மனைவியும்,  (5), (3),  (1) என மூன்று பெண் குழந்தைகளும்  3 நம்பர் கொண்ட லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்துக்கு அடிமையான அருண், அதன் மீது ஏற்பட்ட மோகத்தால் வேலை செய்யும் இடத்திலும், உறவினர்களிடமும் பெருமளவு கடன் வாங்கி ,கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இருந்த அருண் குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளார்கள்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பள்ளி மாணவர்கள் வருகைப்பதிவை குறுஞ்செய்தி வாயிலாக பெற்றோருக்கு தெரிவிக்கும் வசதி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் அமல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழகத்தை சேர்ந்த  நித்யானந்தாவின் முன்னாள் சீடர் ஜனார்த்தன் சர்மா என்பவரின் 2 பெண் குழந்தைகளை கடத்திவைத்து, கொடுமைப்படுத்துவதாக புகார் செய்யப்பட்ட வழக்கில்  2 பெண் சீடர்களை கடந்த மாதம் 20-ந் தேதி கைது செய்தனர்.அவர்களது இடைக்கால ஜாமீன் மனு ஏற்கனவே 27-ந் தேதி உள்ளூர் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2 பேரும் மிக தீவிரமான குற்றத்தில் ஈடுபட்டு இருப்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎

திருப்பதி கோவில் மாடவீதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் அபிசேகத்திற்காக திருப்பதியில் இருந்து காலி பால்கேன்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி முன்   திடீரென  பாய்ந்து பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் இன்று (12) இரவு இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்கள் மீது கார் ஒன்று மோதியுள்ளதாக தெரியவருகிறது
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையில் தகுதி வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்க திரைசேறி அனுமதி வழங்கியுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்தை சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் ஆயுதம் கையாள்வது உள்ளிட்ட நவீன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சி கன்னிகாபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு கடந்த 5-ந் தேதி உதவி ஆசிரியர் மோகன் வகுப்பறையில் தரையில் படுத்து தூங்கினார். பாடம் நடத்தாமல் ஆசிரியர் தூங்குவதை பார்த்தசிலர் வீடியோ எடுத்து அதனை வாட்ஸ்-அப்பில் பரப்பினர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் எனுமிடத்தில் ஸ்டீல் பாத்திரத்தை வைத்து 3 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக குழந்தையின் தலை பாத்திரத்தில் சிக்கி கொண்டது. பின்னர், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பதற்றமடைந்த பெற்றோர் நீண்ட நேரம் போரடியும் குழந்தையின் தலையை பாத்திரத்தில் இருந்து விடுவிக்க முடியவில்லை. பின்னர், கூரிய ஆயுதம் கொண்டு பாத்திரத்தை வெட்டி குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள வசதி குறைந்த 3 பாடசாலைகள் வீதம் அபிவிருத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு எதிராக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இ​டையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்திய-ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும். இதில் முதல் 7 நாட்களில் விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்படும். ஆந்திர பிரதேச திஷா சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சட்டம் இன்று ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கை-வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கருங்காலிச்சோலை பாசிக்குடா சுனாமி மீள்குடியேற்ற கிராமத்திலுள்ள ஆஞ்சனேயர்; தீர்த்தகேணிக்குள் நுழைந்த முதலையினை ஊர் மக்கள் பிடித்து பிரதேச வனஜீவராசிகளிடம் வியாழக்கிழமை கையளித்துள்ளதாக கல்குடா கிராம சேவகர் க.கிருஷ்ணகாந் தெரிவித்தார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎

என்னால் தமிழ் மொழியில் உரையாற்ற முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன். குறுகிய காலத்தில் தமிழ் மொழியைக் கற்று உரையாற்றுவேன் -இவ்வாறு இலங்கை-கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இன்று (12) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட போது தெரிவித்தார்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் 17-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தலைமறைவாக உள்ள நித்யானந்தா எங்கு உள்ளார் என்பது குறித்து, இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் இன்று அறிக்கை தாக்கல் செய்யாததால் வரும் டிசம்பர் 18-ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய கர்நாடக அரசு மற்றும் மாநில போலீசாருக்கு நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஆப்பிரிக்கா கண்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நைஜர் நாட்டில் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 73 நைஜர் ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சென்னை: ''வீடுகளில், குப்பையை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்,'' என, தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி எச்சரித்தார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
திருச்சி: சாலை விபத்தில், மூர்ச்சையாகி கிடந்த முதியவருக்கு, தன் வாய் வழியே, செயற்கை சுவாசம் அளித்து காப்பாற்றிய திருச்சி, [ராம்ஜிநகர் காவல் நிலையத்தில், இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் பிரபு, 32] போலீஸ்காரருக்கு, பாராட்டு குவிகிறது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
குடியுரிமை மசோதா குறித்து பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ” குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்த்துவிட்டால், அதற்கு பிறகு இலங்கை அரசு அவர்களை விரட்டியடிக்க தொடங்கிவிடும் என்பதாலேயே அவர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்படவில்லை” என கூறியுள்ளார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அசாமில் கடும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் பெருமளவில் வீதிகளில் இறங்கி போராடிவருகின்றனர். போராட்டக்காரர்கள் தாக்கியதில் போலீசார் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை காங்கேயனோடையைச் சேர்ந்த ஜப்ரா எனும் 14 வயது மாணவி, மருந்து வழங்குவதில் ஏற்பட்ட தவறு காரணமாக பாதிக்கப்பட்டு, கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 9ஆம் தேதி) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இவர் உயிரிழந்தார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கை-தென்மராட்சி – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் அடிதடியில் முடிந்துள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎

வட-இலங்கை,பருத்தித்துறை – இம்பருட்டிப் பகுதியில்  ஜெகன் ஆனந்த (17-வயது) இம்முறை ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவன்  இன்று (12) மாலை பட்டம் ஏற்றப் போன போது கிணற்றில் தவறி வீழ்ந்து  பலியாகியுள்ளான்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
நித்தியானந்தா ஹைதி நாட்டில் பதுங்கியிருப்பதாக பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன்கூடிய போக்குவரத்து மையமாக உருவாக்கப்பட இருக்கிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழகத்திலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த, தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களான 6 லட்சம் ரூபா பெறுமதியான 79 கிலோ கடல் பல்லி , 3 கிலோ கடல் குதிரைகள் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்கடத்தல்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
சமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள் தொடர்பான வழக்கு விசாரணை டுபாய் நீதிமன்றத்தில் இன்று (11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த மூன்று இளைஞர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன் மாறாக தமது நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மாத்திரம் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறியுள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சர்ச்சைக்குள்ளாகி இலங்கையில் கடந்த மூன்று நாட்களாக விசாரணைகளை எதிர்கொள்ளும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை தற்காலிகமாக பணியிலிருந்து விலகுமாறு தூதரகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அவர் சில தகவல்களை வழங்குவதற்கு முன்வந்திருப்பதுடன், வருத்தம் தெரிவித்திருந்ததாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள் தொடர்பான வழக்கு விசாரணை டுபாய் நீதிமன்றத்தில் இன்று (11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த மூன்று இளைஞர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன், மாறாக தமது நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மாத்திரம் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறியுள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பாரதியாரின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கனடாவில் இருந்து வந்திருந்த போது, சாவகச்சேரி- மீசாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 83 வயதான சின்னத்தம்பி சுந்தரலிங்கம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
மதுரங்குளி விருதோடை பிரதேசத்தில் சட்டவிரோமாக வளர்க்கப்பட்டு வந்த இந்திய நட்சத்திர வகையைச் சேர்ந்த 51 ஆமைகளுடன், சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை (10) இரவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
 இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கற்பிட்டி குடாவ கடற்கரையில் நேற்று (10) 10 கிலோ கிராம் நிறையுடைய தங்கத்துடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வாசிக்கும் பழக்கத்தை கொண்ட மக்களை அதிகமாகக் கொண்ட நாடுகளே இன்றைய உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாகவும் திகழ்கின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சின்னராசா பிரகாஷ் தெரிவித்தார்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு உப்பாற்றில் படகு கவிழ்ந்து காணாமல் போன மஜீத் கான் சஹீப் வயது 28, அண்ணல் நகர்முகமது ஹனீபா காமில் வயது 36, மஹ்ரூப் நகர், [ஒரு பிள்ளையின் தகப்பன்] ஆகியோர்  சடலங்கள் உப்பாறு கடற்படை முகாமிற்கு அண்மித்த கடற்பிரதேசத்தில்இன்று காலை கரை ஒதுங்கியுள்ளன.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது தங்களுக்கு சொந்தமான சொத்துகள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பெங்களூரு: கலாபுராகி மாவட்டத்தில் நரியன்பூர் கிராமத்தில் போலீசார் இன்று சோதனை நடத்திய போது சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் 100-க்கும் அதிகமான இடங்களில், 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தீயில் கருகி நாசமாகின. சுமார் 500 வீடுகள் காட்டுத்தீயினால் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த காட்டுத்தீயில் சிக்கி 4 பேர் பலியானதுடன் , சுமார் 2 ஆயிரம் கோலா கரடிகள் செத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளைத் தயாரிப்பவா்கள், மற்றும் வைத்திருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், ஆயுத சட்டத்திருத்த மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின்படி, தற்போது ஒருவர் 3 துப்பாக்கிகள் வரை வைத்துக்கொள்ளலாம் என்று இருப்பது 2 துப்பாக்கிகளாக குறைக்கப்படுகிறது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்றிரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு கடல்பகுதிக்கு இயந்திரக் கோளாறு காரணமாக தவறி வந்த கப்பலா அல்லது ஆய்வு கப்பலா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபயவிடம் ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்து உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் நல்லவர்களும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களும் உள்ளனர். அவர்கள் அங்கேயே மரணித்துப் போகின்றனர். விடுதலை பெற வேண்டிய குழு வினர் அவர்களில் இராணுவத்தினரும் அடங்கும். அதேபோல் தமிழ் அரசியல் கைதிகளும் உள்ளனர். அவர்களுக்கு தற்போது புனர் வாழ்வளிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு எதிராக வழக்குகள் கூட தாக்கல் செய்யப்படவில்லை. அதுவும் குற்றமாகும். சமூகத்தில் வேலை செய்து வாழக்கூடியவர்கள் பலர் உள்ளனர் என்றார்.    
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
 சென்னையில் இருந்து சுமார் 70 கி.மி தொலைவில் காஞ்சிபுரம் அருகே புதிய சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎

திருகோணமலையில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலாவௌி வீதி, மூன்றாம் கட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயதான வி.கிஷோபிதா எனும் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இரவில் தனியாக செல்லும் பெண்கள் உதவி கோரினால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். சமூக ஊடகத்தில் முகம் தெரியாத நபர்களோடு பழகுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் கூறி உள்ளார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின்  தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு அந்நாட்டின் ராணுவத்தைச் சேர்ந்த விமானம் மொத்தம் 38  பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றபோது மாயமாக மறைந்து விட்டது. தேடுதல் தொடர்கிறது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தண்ணீரைப் பயன்படுத்தப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆஸ்திரேலியா அரசு. கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது, இரு பக்கெட் தண்ணீர் கொண்டுதான் வாகனங்களைக் கழுவ வேண்டும், நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பச் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

இதனை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும், வணிக நிறுவனங்களுக்கு 550 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்கிறது ஆஸ்திரேலிய அரசு.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியான கானியா வெனிஸ்டர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா என ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
   ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் சாதாரண பயணிகள் வாயில் சென்று வர வேண்டும். சிறப்பு விருந்தினர் வாயிலாக செல்ல விரும்புவோர் 1000 டொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜதந்திரிகள் மற்றும் பிரபலங்கள் கட்டணம் இன்றி சிறப்பு விருந்தினர் வாயில் ஊடாக வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
   ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கடந்த ஆண்டு பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடையை அகற்றிய சவுதி அரேபிய அரசு, ஆண் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணிப்பதற்கு இருந்த தடையை இந்த ஆண்டு தொடக்கத்தில் ரத்து செய்தது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள ஓட்டல்கள் இனி ஆண்கள்-பெண்களுக்கு என்று தனித் தனியாக நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
   ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
மறைந்த முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறை நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதாவாக நடித்த,   இயக்குனர் கௌதம் மேனன் இணைய தொடராக உருவாக்கி வருகிறார்.இந்நிலையில், இந்த தொடருக்கு தடைவிதிக்குமாறு கோரி ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.  குறித்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளபட்டுள்ள நிலையில், இது குறித்து இயக்குனர் விளக்கமளிக்க வேண்டும் என நீ திமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
   ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் ‘தலைவர் 168’ படத்தில் இணைந்துள்ளதை உறுதி செய்துள்ளது.
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
                    tags:-Aishwarya Rajesh Sanchita Shetty                    Samantha  Oviya          Kalavani     Amy Jackson                 Chandini Tamilarasan                  
                    Srushti Dange               Taapsee Pannu             Hansika Motwani         Janani Iyer Pranitha    Nithya Menen              Shruti Haasan               
                    Rakul Preet Singh         Radhika Apte                Nandita Swetha                                Gayathrie   Varalaxmi Sarathkumar                    Mahima Nambiar        
                    Nazriya Nazim               Sri Divya     Catherine Tresa            Nikki Galrani                 Keerthy Suresh            
Aari             Atharvaa Murali           Arulnithi    Harish Kalyan                Vidharth     Vijay Sethupathi           Ashwin       Sivakarthikeyan                    Sri              
                    Udhayanidhi Stalin      Dinesh        Attakathi    Vijay Antony                 Vikram Prabhu             Gautham Karthik                    Ashok Selvan               
Bobby Simha                 Kathir         Madha Yaanai Koottam                  Naveen Chandra          Bramman   Koottam Kalaiyarasan
                    G. V. Prakash Kumar surya vijay karththik kamalhasan rajanikanth Srikanth suri vavelu
தேடல் துணைகள்: thamizh, tamil, sampanthar, vadakilakku, vadakku, kizhakku, arasu, maiththiri, ranil, muslim, hindu, jesu, pothai, heroyin, val, jaffna, kilinochchi, maddakkalappu, butticola , ponnampalam, malaiyakam thondamaan, tiger, koddiya, ilankai ,ceylon, sinkalese , unp, slfp, suren  ragavan, vigginesvaran,tricomalai , vavuniya, mullaitivu, mannar , puththalam, kandy,achchuvely araly, ariyalai, allarai, allaippiddi, alvay, alaveddy, anailaithivu
aththiyadi,avarankal, anaikkoddai, edaikadu, enuvil, erupalai, elakkanavaththai,elavalai, echchankadu, echchamoddai, evinai, uduppiddi, udivil urumpirai, urelu, eluthumadduval, elalai, oddakappulam, kachchay, kaddudai, kadduvan, kantharmadam, kantharodai, kamparmalai, karanavay, karanthan, karampon, karaveddi, kalvayal, kalviyankadu, kalapumy, kankesanthurai, kks, karainagar, kirimalai, kuppilan, kurunakar, kurumpasiddi, kerudavil, kerpeli, kerudavil, kerpely, kaithadi, kokkuvil, kodikamam, kommanthurai, kollankaladdi, kolumpuththurai, kondavil, koppai koyirkudiyiruppu, sankaththanai, sankanai, sankuveli, sandilippay,sarasalai, savakachchery,singanagar.siththankeny, sinthupuram, sillalai, siruvilan,siruppiddi,sundikkuly, suthumalai,sunnakam, chulipiram, choliyapuram, thachchanthoppu, thanankilappu, thavady,thirunelvely, thunnalai, thellippalai, thevapuram,thaiyiddi, thondaimanaru, tholpuram, nainadivu, nallur, navakkiry, navaly, nagarkovil, nayanmarkkaddu, naranthanai, navanthurai, nilavarai, nirvely, niraviyady, nunavil, nelliyady, pandaththeruppu, pandaththarippu, pannagam, paththameny, pointpirro, paruththithurai, palaly ,pannalai, panippulm, pasaiyur, palavy, puththur
puloly, puliyankudal, punnalaikkadduvan, periyavilan, ponnalai, madduvil, mandaidivu, mandaithivu, maruthanarmadam, mallakam, maravanpulavu, masiyappiddi, mathakal, mavaliththurai, maviddapuram, manippay,mirusuvil, mesalai, mulai, vaddukkoddai, vadamarachchi, vadaliyadaippu, vannarpannai, vayavilan, varany, vallipuram, valveddiththurai, varuththalaipilan, viyaparimulai,velanai thevu, punkuduthevu,