புதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்

 


இவ்வாரம் வெளியான படங்களும் ,

ஒரு திரைப்படத்தின் கதையும்

இவ்வாரம் வெளியான படங்கள்

 

படம்: 'கால்ஸ்'

நடிகர்கள்:  : வி.ஜே. சித்ரா, நிழல்கள் ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஆர். சுந்தர்ராஜன், வி.ஜே. சித்ரா, ஜீவா ரவி,  ஸ்ரீரஞ்சினி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ்

இயக்கம்:ஜே சபரிஷ்

விமர்சனம் சுருக்கம்:கால் சென்டர் ஒன்றில் வேலை செய்யும் நாயகி,  அப்பா, அம்மா இணைத்த குடும்ப படம்.மனதில் நிற்காத வலுவில்லாத கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமில்லாத கதை படத்தை கெடுத்துவிட்டது.

வெளியான நாள்: பெப். 26

மதிப்பு:2.5/5

 

படம்:'வேட்டை நாய்'

நடிகர்கள்: ஆர் கே சுரேஷ், ராம்கி, சுபிக்சா, நமோ நாராயணா, விஜய் கார்த்திக்

இயக்கம்:எஸ். ஜெய் ஷங்கர்

விமர்சனம் சுருக்கம்: ஒரு தாதா , அடியாள்.அடியாளின் காதல், கல்யாணத்தில் முடிந்து ,தாதாவைவிட்டு  அடியாள் விலகிய கோபம் அடியாளுடம் தாதாவுக்கு ஏற்படும் மோதல் என்ற வழமையான திரைப்பட கதை, மொத்தத்தில் அழுத்தமில்லாத காட்சிகள்,பரபரப்பில்லாத காட்சிகள் எனப் படம் தடுமாறுகிறது.

வெளியான நாள்:பெப்.26

மதிப்பு:2/5

 

படம்:'சங்கத்தலைவன்'

நடிகர்கள்:சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா சுப்பிரமணியம்,

சுனு லட்சுமி, சீனு மோகன், மாரிமுத்து.

விமர்சனம் சுருக்கம்:தொழிற்சங்க தலைவர் கருணாஸுக்கும் , தொழிற்சாலை உரிமையாளருக்கும் இடையில் ஏற்படும் மோதலுடன் , எதிர்ப்பான காதலும் இணைந்த இப்படத்தில் புதிதாக எதுவும் இல்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு ஒரே அட்வைஸ் தான். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை எளிதில் கணிக்க முடிகிறது. இரண்டாம் பாதியில் படம் மேலும் மோசமடைகிறது. சித்தாந்தங்களை சொல்வதில் காட்டிய அக்கறையை திரைக்கதையில் காட்டவில்லை.

வெளியான நாள்:பெப்.26

மதிப்பு:2/5

 

படம்:'தீனி' 

நடிகர்கள்:அசோக் செல்வன், ரித்து வர்மா, நித்யா மேனன், நாசர்.

விமர்சனம் சுருக்கம்: ‘நகைச்சுவை- காதல்’ கலந்த ஒரு திரைக்கதை.உணவு மீதான அக்கறையினால் பிணைக்கப்பட்ட நான்கு பேரின் வாழ்க்கையைப் பற்றி ப்பேசும் படம்.புதிய கதையுடன் வித்தியாசமான நகர்வும் படத்தின் வெற்றிக்கு தீனிபோடுகிறது.

வெளியான நாள்:பெப்.26

 மதிப்பு:3/5

 

(இன்றய திரையில் அரைத்த மாவினையே திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அத்தி பூத்தது போல் ஒரு சில படங்கள்  வித்தியாசமாக வந்து ரசிகர்களின் பாராட்டினைப் பெற்று விடுகின்றன. அந்த வகையினில் இன்று தமிழகத்தினை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சமுதாய சீர்கேடுகளில் ஒன்றினை மையமாக வைத்து ,வழமையான  சினிமா கலாச்சாரங்களையும் தூக்கியெறிந்து ஒரு வித்தியாசமான படைப்பில் வெளிவந்த திரைக் கதையினை இன்று வழங்குகிறோம்.)

 

-[2018]திரைப்படம் -'ஒரு குப்பைக் கதை'

ஒரு உண்மைக் கதை

சென்னையின் குப்பத்தில் தாயுடன் வசிக்கும் துப்பரவுத் தொழிலாளராக இருக்கும் தினேஷுக்குப் பெண் பார்க்கிறார்கள். அவரது பணியைக் காரணம் காட்டியே பெண் அமையாமல் போக, வெளியூரில் மனீஷா யாதவைப் பார்த்துப் பேசி முடிக்கிறார்கள்.

 

 ஆனால், தினேஷ் ஒரு துப்ரவுத் தொழிலாளி என்பதை மறைத்துவிடுகிறார்கள். போதாக்குறைக்கு குப்பை என்றாலே குமட்டிக்கொண்டு வரும்  மனீஷாவுக்கு சென்னையில் மாமியார் வீடு குடிவந்து வாழும் நாட்களில்  தன் கணவன் ஒரு குப்பைகளைக் கூட்டி துப்பரவு செய்வதை  குப்பை லொறியுடன்  கண்டுகொண்ட கொண்ட மனீஷா தன்னை ஏமாறிவிட்டதாக, கணவனுடன் சண்டையிடுகிறாள்.  .தினேஷ் அவளின் தகப்பனுடன் கைபேசியில் தொடர்புகொண்டு, நிலைமையினை விளக்குகிறார்.தகப்பன் மகளுக்கு கூறிய புத்திமதியினை கேட்டு அவளும் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கிறாள்.

 

மனைவியின் நிலையினை புரிந்துகொண்ட தினேஷ் மனைவிக்காக நகரத்தில்  ஒரு வசதியான வீட்டிற்கு மனைவியுடன் குடியேறுகிறார்.பின்னர் தனது வேலையினை துறந்து மனைவிக்காக புதிய வேலையினை பொறுப்பெடுத்தது வீட்டுக்கு வந்தபோது , தன் மனைவி பக்கத்தில் குடியிருந்த ஒரு இளைஞனுடன் ஓடியதை புரிந்து வேதனையடைந்து ஊர் திரும்புகிறான்.அறிந்த தினேஷின்  தாயும் உயிர் இழக்கிறாள்.

 

நண்பனின் வீட்டில் குடியேறி ,நகர் முழுவதும் கணவன் ,மனைவிபோல் சுற்றித்திரியும் இவர்களை அறிந்த இளைஞனின் பெற்றோர் அவனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்துவைக்க அவனை வீட்டுக்கு அழைக்கின்றனர். எனவே அவ்விளைஞன் மனீஷாவை   தன் நண்பனிடம் கைவிட்டுச்  சென்றுவிடுகிறான்.

 

மனீஷா இருக்கும் முகவரி அறிந்த  தினேஷ் அவளைத் தேடி வருகிறான். அந்நேரத்தில் அவளை நெருங்க முயன்ற இளைஞனின் நண்பனை அவள் கத்தியால் குத்திக் கொலை செய்துவிடுகிறாள். நிலைமையினை உணர்ந்த தினேஷ் கொலையினைத் தானே செய்ததாக போலீசில் சரணடைகின்றான்.

தன்னை க்கணவன் மன்னித்ததையும்,   தன் கணவன் தனக்குப் பதிலாக சிறை சென்றதையும் கணவன் தனக்குக் கொடுத்த பெரிய தண்டனையாக வருந்திய மனீஷா அவன் சிறையிலிருந்து மீழும்வரை அவன் செய்த துப்பரவுத் தொழிலை விசுவாசத்துடன் செய்யப் புறப்படுகிறாள்.


குறிப்பு :ஒரு இயல்பான நடிப்பின் மூலம் இத்திரைகதை, இனிதே வாழும் குடும்பங்களை அநியாயமாகச் சிதைக்கும் இளைஞர்களைக் கண்டித்தும், கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்களுக்கு, ஏனைய ஆண்கள்  துரோகம்  இழைப்பது கடினமில்லை என்பதையும் சுட்டிக்காடி ஒரு சமுதாய சீர் திருத்தப் படமாக இனம் காணப்பட்டுள்ளது.-


[…..செ.மனுவேந்தன் ]

0 comments:

Post a Comment