பசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்

cows-mouth-2_edited-6
பசுக்களுக்கு மேல் தாடையில் பற்கள் கிடையாது !
Milk11
ஒரு ஆரோக்கியமான பசு மாடு தனது வாழ்நாளில் சுமார் 200,000 குவளைகள் பால் கொடுக்கிறது.!
cow 4 stomachs
பசு மாட்டுக்கு நான்கு வயிறுகள் உள்ளன. ருமென், ரெடிகுலம், ஒமசம்,அபோசம் ( rumen, reticulum, omasum and abomasum)என்பவாகும்.ருமென் எனப்படும் முதல் குடல் அளவில் பெரியதாகவும், அசைபோடும் உணவை நொதிக்கச் செய்யும் ’நொதித்தல்’ அறையாகவும் செயல்படுகிறது. கடைசி வயிறான அபோசம் அமைப்பிலும், செயல்பாட்டிலும் மனித குடல் போல் செயல்படுகிறது.
milking-cows-Holsteins

பசு மாட்டின் சராசரி ஆயுட்காலம் ஏழு ஆண்டுகள். ஆனால் கட்டி வளர்க்காமல் இயற்கையில் சுற்றித்திரிபவை பதினைந்து ஆண்டுகள் வரை வாழும்.
oldest cow
உலகில் அதிக வாழ்நாடகள் வாழ்ந்த பசுவாக Big Bertha பிக் பெர்த்தா என்ற மாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இது தனது 48 வயதை 1993 ல் பூர்த்தி செய்தது.இது 39 கன்றுகளை ஈன்றிருந்தது.
smalest cow
பசுக்களின் சராசரி உயரம் சுமார் 55 அங்குலங்கள் ஆகும் ஆனால் Dexters (டெக்ஸ்டர்ஸ்) எனப்படும் வகை 36 ல் இருந்து 42 அங்குலங்கள் மட்டும் வளரக்கூடிய வகையாகும். அந்த இனத்தை சேர்ந்த Swallow (ஸ்வாலோ) என்றழைக்கப்பட்ட மாடுதான் கின்னஸ் ரிக்கார்டின்படி உலகின் உயரம் குறைந்த மாடாகும். அதண் உயரம் 33 அன்குலங்கள் ஆகும்.
fao-cattle
உலகில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 200 மில்லியன்கள் கால்நடைகள் உள்ளன.

0 comments:

Post a comment