மனிதக் கண்களுக்கு ஏன் கடவுள் புலப்படுபவராய் இல்லை? இதை விளக்குவதற்கு பரிமாணங்கள் (Dimensions) பற்றிய ஒரு சிறிய அலசல் முதலில் அவசியமாகும்.
மனிதனாகப் பிறந்தவனுக்கு இயற்கையில் 3 பரிமாணங்களை உணரக்கூடிய சக்தியே இருக்கின்றது. (4 வது பரிமாணம் பற்றி இப்போது வேண்டாம்)
1D, 2D, 3D பரிமாணங்கள்:
1D என்றால், நீளம் மட்டும் உள்ள ஒரு நேர்கோடு. இதற்கு அகலமோ, உயரமோ கிடையாது.
2D என்றால், 1D நேர்கோடுகள் பல சேர்ந்து உருவாக்கப் படும் நீளமும், அகலமும் கொண்ட ஒரு மட்ட, தட்டை உருவம். இதற்கு உயரம் கிடையாது.
3D என்றால், 2D தட்டுகள் பல சேர்ந்து உருவாகப் படும் நீளம், அகலம், உயரம் கொண்ட உருவம்.
இப்படியான பரிமாணங்களில்,
ஓர் 1D பரிமாணத்தை மட்டுமே தன் கண்களால் காணக்கூடிய ஒருவர் கண்களுக்கு, அதற்கு மேற்பட்ட 2D, 3D அகல, உயரங்கள் புலப்பட மாட்டா.
அதேபோல, 2D மட்டுமே காணக்கூடிய ஒருவருக்குத் தெரிவதெல்லாம் தட்டையாகவே இருக்கும்; எந்த உயரமாக இருந்தாலும் அந்த 3D உயரம் தோற்றாது; அது வெறும் நிழலாகத்தான் தெரியும்.
இதே காரணத்திற்காக, 3D மட்டும் தெரியும் ஒருவருக்கு (மனிதனுக்கு) 4D யிலுள்ள உருவம் கண்ணுக்குப் புலப் படமாட்டா. வேண்டுமாயின், 4D உருவத்தை 3D நிழலில் கற்பனை செய்து பார்க்கலாம்.(3D யை 2D நிழலாய் பார்ப்பது போல - உ+ம் : ஒரு 3D பந்து, 2D யில் ஒரு வட்ட நிழல் மட்டுமே தெரியும்)
இதற்கிடையில், 2D மட்டுமே உணரும் ஒருவருக்கு 3D என்று ஒன்று இருந்தாலும், அது எப்படி அவர்கள் உணர்வுகளுக்கு மறைக்கப்படுகின்றது என்று ஒரு சிறிய உதாரணம் மூலம் விளங்கப் படுத்தலாம்.
திரு தட்டையர் + திருமதி தட்டையர் இருவரும் 2D திறன் மட்டுமே உள்ளவர்கள் என்று வைத்துக்கொண்டால், அவர்கள் உயரம் என்று ஒன்று இருப்பதையே அறிந்திருக்க மாட்டார்கள். இவர்கள் நிலத்தில் இருக்கும் ஒரு காகிதத்தில் கீறப்பட்டிருக்கும் ஆண் + பெண் படங்கள் வடிவத்தில் இருப்பர். எந்தவித சிறிய தடிப்பும் இல்லாதவர். இருவரும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது, அடுத்தவர் ஒரு கோடு போலவே தென்படுவர். அத்தட்டிலே உலாவி ஆராய்ந்தனரேயானால், தட்டையான ஆண், பெண் நிழலுருவத்தையே காணுவர்.
சரி, நான் இப்போது எனது (3D யான) 5 கை விரல்களின் நுனியை, அக்காகிதத்தின் அருகே சரி அல்லது ஒரு மி.மீ. தூரம் வரை கொண்டு சென்று திரும்பி எடுத்துக் கொண்டால், இந்த திரு + திருமதி தட்டையர்களுக்கு, இப்படிச் சில விரல்கள், தங்களுக்கு மிகவும் சமீபமாக வந்துபோனது என்ற சங்கதியே அறிந்திருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்களின் பார்வை அந்த 2D தட்டினுள் வந்தால்தான் தெரியும்; 3வது D யில் நடைபெற்ற சம்பவங்கள் ஒன்றையும் அவர்கள் மனம் உணரவே செய்யாது.
இப்போது நான், எனது 5 விரல்களாலும் ஐந்து பொட்டுகளை காகிதத்தில் அவர்களுக்கு இடையில் வைக்கின்றேன். அவர்களுக்குத் தெரிவது அந்த 5 வட்ட வடிவங்களே ஒழிய, எனது 3D யிலான கைவிரல்கள் அல்ல. நான் எனது விரல்களை விலத்தியதும் அத்தட்டையர்கள் என்ன செய்வர்? வலுவான, ஆழ்ந்த விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் கண்டு பிடிப்பார்கள், வட்ட வடிவமுள்ள 5 வெளி உலக (தட்டை) மனிதர்கள் குடும்பமாக தமது நிலத்திற்கு வந்து போயுள்ளனர் என்று!
மனிதனால், ஒரு 3D உணர்வுத் தன்மையுடன், சாதாரணமான 4வது D யையே உணரமுடியாமல் இருக்கும்போது, பல D யுடைய ஆண்டவனின் இருக்கை, எப்படித்தான் ஐயா மனிதனின் கணகளுக்குப் புலப்படும்?
ஆதலால், கடவுள் அவ்வப்போது பூமியில் வந்து 3D சுவடுகளை விட்டுச் சென்றால்தான், மனிதனின் தேடலின்போது அவரின் வருகையை உணரமுடியும். மேலும் சிலர், அவ்வப்போது மனித வடிவிலும் அவர் வந்து பிறந்து காட்டுகிறார் என்று நம்பியும் அவரின் இருக்கையை உணர்கின்றார்கள். எப்படித்தான் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும், மனிதக் கண்களுக்கு கடவுள் அப்படியே உண்மையான தன் உருவில் காட்சி அளிப்பார் என்பது முடியவே இயலாத ஒரு விடயம்.
கடவுள் ஏன்தான் நமது கண்களுக்கு புலப்படமாட்டார் என்பதற்கான காரணம் இப்போது நன்றாகப் புரிகின்றதல்லவா?
இந்த கட்டுரையை வாசிப்பது மூலம் நாம் அறிவது:
ReplyDelete[1] மகா, மகா சக்திவாய்ந்த,எல்லாம் வல்ல ஒருவர் தான் கடவுள் .
[2]அவர் 4-D[dimensional]அல்லது அதற்கு மேற்பட்ட பரிமாணங்கள் கொண்டவராக இருக்கலாம்?
ஆகவே 3-D பரிமாணங்கள் கொண்ட நம் கண்ணுக்குப் புலப்படமாட்டார்.
[3]எனினும் கடவுள் அவ்வப்போது பூமியில் வந்து 3D சுவடுகளை விட்டுச் சென்றால்தான், மனிதனின் தேடலின்போது அவரின் வருகையை உணரமுடியும்.அதனால் தான் என்னவோ
"அருவமான இறைவன் மனிதனை ஆட்கொள்ள உருவமானான் உருவமாக அருவுருவமானான்." என்று கூறுகிறார்களோ?
இது-இந்த கட்டுரையின் சாரம்-எனக்கு சில கேள்விகளை தூண்டியுள்ளது.
[1]கடவுள் பல பரிமாணங்கள் கொண்டவராக கருதும் போது,அவர் விட்டு செல்லும் சுவடுகளும் வேறுபடலாம்.ஏன் என்றால்,அவர் தனது பல-D பரிமாணங்களில்,எந்த 3-D பரிமாண நிழலை விட்டு போகிறார் என்பதை பொறுத்து,அந்த சுவடு/தடயம் வேறுபடலாம்.உதாரணமாக எமது 2-D
நிழல்,நாம் நிற்கும் நிலையை பொறுத்து வேறுபடுவது போல.
அப்படி என்றால் பல உருவ வழிபாடு சரி என்பதாகலாம்?அவர் அவர்கள்,வேறு வேறு காலங்களில்,வேறு வேறு இடங்களில் கண்ட 3-D பரிமாண நிழலை பொறுத்தது.
"அன்றும் திரு உருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திரு உருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட்கு என் உரைக்கேன்
எவ்வுருவோ நின் உருவம் ஏது."
இப்படி காரைக்கால் அம்மையார் இறைவனை பார்த்துக் கேட்கின்றார்.அதாவது உன் உருவம் எப்படிப்பட்டது என்று தெரியாமலேயே உனக்கு அன்றே ஆட்பட்டு விட்டேன்.இப்பொழுது கூட உனது உருவம் எத்தகையது என்று காண மாட்டாமலே உனக்கு ஆட் செய்கின்றேன்.ஆனால்,மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன்?காரைக்கால் அம்மையார் மேலும் பாடுகிறார்:
"இருளின் வடிவு என் கோ ; மாமேகம் என் கோ;
மருளின் மணி நீலம் என் கோ.."என்று சொல்கிறார்
[2]அதே நேரத்தில் "பல D யுடைய ஆண்டவனின் இருக்கை,எப்படித்தான் ஐயா மனிதனின் கணகளுக்குப் புலப்படும்?" என்பதில் இருந்து அருவமான இறைவன் என்பதும் உண்மையே என்றாகிறது.
[3]மேலும் இது வரை மூட நம்பிக்கையாக,பொதுவாக கருதப்பட்ட பேய் ,பிசாசு ,ஆவி,ஜின்[jinn or genies] போன்ற இவைகள் பல-D பரிமாணமுடைய ஏதாவது ஒன்றின் நிழலாக ஏன் இருக்கக்கூடாது என்ற ஒரு கேள்வி ஏன் மனதில் எழக்கூடாது?என்பதும்.
"சுட்ட மண் பாண்டங்களைப் போல (தட்டினால்) சப்தம் உண்டாகும், களி மண்ணில் இருந்து (அல்லாஹ்வாகிய) அவன் மனிதனைப் படைத்தான். அதற்கு முன்னரே (சூடான) நெருப்புக் கொழுந்தில் இருந்து[smokeless flame of fire] ஜின்களைப் படைத்தான்."(அல்குர்ஆன் 55:14-15, 15:26,27)
மனிதன் 3-D பரிமாணங்கள் கொண்ட களி மண்ணில் இருந்தும்,ஆனால் "ஜின்" அப்படி அல்ல என்பதை கவனிக்க.இது எனது கேள்வியை மேலும் உறுதிபடுத்துவது போல் இல்லையா?
அது மட்டும் அல்ல எமது முன்னையோர் சுடுகாட்டில் எமது 3-D பரிமாண கண்ணுக்குத் தெரியாத பேய்கள் உலவியதாக நம்பினர் என சங்க பாடல்களும் கூறுகின்றன.
"வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு (புறம்.238)"
குறிப்பு :"3D என்றால், 2D தட்டுகள் பல சேர்ந்து உருவாகப் படும் நீளம், அகலம், உயரம் கொண்ட உருவம்." இதை 2D பொருளை,அப்படியே மேலே இழுத்தால், உயரம் உண்டாகிவிடும் அல்லாவா! அது 3D.என எழுதி இருக்கலாம் என தோன்றுகிறது.ஏன் என்றால் 2D தட்டுகளுக்கு தடிப்பு பூச்சியம் .ஆகவே எத்தனை 2D தட்டுகள் சேர்த்தாலும் அது 3D.ஆக மாறாது.ஏன் என்றால் தடிப்பு திரும்பவும் பூச்சியமே?அது போலவே மற்றவையும்
இந்த கட்டுரையை வாசிப்பது மூலம் நாம் அறிவது:
ReplyDelete[1] மகா, மகா சக்திவாய்ந்த,எல்லாம் வல்ல ஒருவர் தான் கடவுள் .
[2]அவர் 4-D[dimensional]அல்லது அதற்கு மேற்பட்ட பரிமாணங்கள் கொண்டவராக இருக்கலாம்?
ஆகவே 3-D பரிமாணங்கள் கொண்ட நம் கண்ணுக்குப் புலப்படமாட்டார்.
[3]எனினும் கடவுள் அவ்வப்போது பூமியில் வந்து 3D சுவடுகளை விட்டுச் சென்றால்தான், மனிதனின் தேடலின்போது அவரின் வருகையை உணரமுடியும்.அதனால் தான் என்னவோ
"அருவமான இறைவன் மனிதனை ஆட்கொள்ள உருவமானான் உருவமாக அருவுருவமானான்." என்று கூறுகிறார்களோ?
இது-இந்த கட்டுரையின் சாரம்-எனக்கு சில கேள்விகளை தூண்டியுள்ளது.
[1]கடவுள் பல பரிமாணங்கள் கொண்டவராக கருதும் போது,அவர் விட்டு செல்லும் சுவடுகளும் வேறுபடலாம்.ஏன் என்றால்,அவர் தனது பல-D பரிமாணங்களில்,எந்த 3-D பரிமாண நிழலை விட்டு போகிறார் என்பதை பொறுத்து,அந்த சுவடு/தடயம் வேறுபடலாம்.உதாரணமாக எமது 2-D
நிழல்,நாம் நிற்கும் நிலையை பொறுத்து வேறுபடுவது போல.
அப்படி என்றால் பல உருவ வழிபாடு சரி என்பதாகலாம்?அவர் அவர்கள்,வேறு வேறு காலங்களில்,வேறு வேறு இடங்களில் கண்ட 3-D பரிமாண நிழலை பொறுத்தது.
"அன்றும் திரு உருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திரு உருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட்கு என் உரைக்கேன்
எவ்வுருவோ நின் உருவம் ஏது."
இப்படி காரைக்கால் அம்மையார் இறைவனை பார்த்துக் கேட்கின்றார்.அதாவது உன் உருவம் எப்படிப்பட்டது என்று தெரியாமலேயே உனக்கு அன்றே ஆட்பட்டு விட்டேன்.இப்பொழுது கூட உனது உருவம் எத்தகையது என்று காண மாட்டாமலே உனக்கு ஆட் செய்கின்றேன்.ஆனால்,மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன்?காரைக்கால் அம்மையார் மேலும் பாடுகிறார்:
"இருளின் வடிவு என் கோ ; மாமேகம் என் கோ;
மருளின் மணி நீலம் என் கோ.."என்று சொல்கிறார்
[2]அதே நேரத்தில் "பல D யுடைய ஆண்டவனின் இருக்கை,எப்படித்தான் ஐயா மனிதனின் கணகளுக்குப் புலப்படும்?" என்பதில் இருந்து அருவமான இறைவன் என்பதும் உண்மையே என்றாகிறது.
[3]மேலும் இது வரை மூட நம்பிக்கையாக,பொதுவாக கருதப்பட்ட பேய் ,பிசாசு ,ஆவி,ஜின்[jinn or genies] போன்ற இவைகள் பல-D பரிமாணமுடைய ஏதாவது ஒன்றின் நிழலாக ஏன் இருக்கக்கூடாது என்ற ஒரு கேள்வி ஏன் மனதில் எழக்கூடாது?என்பதும்.
"சுட்ட மண் பாண்டங்களைப் போல (தட்டினால்) சப்தம் உண்டாகும், களி மண்ணில் இருந்து (அல்லாஹ்வாகிய) அவன் மனிதனைப் படைத்தான். அதற்கு முன்னரே (சூடான) நெருப்புக் கொழுந்தில் இருந்து[smokeless flame of fire] ஜின்களைப் படைத்தான்."(அல்குர்ஆன் 55:14-15, 15:26,27)
மனிதன் 3-D பரிமாணங்கள் கொண்ட களி மண்ணில் இருந்தும்,ஆனால் "ஜின்" அப்படி அல்ல என்பதை கவனிக்க.இது எனது கேள்வியை மேலும் உறுதிபடுத்துவது போல் இல்லையா?
அது மட்டும் அல்ல எமது முன்னையோர் சுடுகாட்டில் எமது 3-D பரிமாண கண்ணுக்குத் தெரியாத பேய்கள் உலவியதாக நம்பினர் என சங்க பாடல்களும் கூறுகின்றன.
"வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு (புறம்.238)"
குறிப்பு :"3D என்றால், 2D தட்டுகள் பல சேர்ந்து உருவாகப் படும் நீளம், அகலம், உயரம் கொண்ட உருவம்." இதை 2D பொருளை,அப்படியே மேலே இழுத்தால், உயரம் உண்டாகிவிடும் அல்லவா! அது 3D.என எழுதி இருக்கலாம் என தோன்றுகிறது.ஏன் என்றால் 2D தட்டுகளுக்கு தடிப்பு பூச்சியம் .ஆகவே எத்தனை 2D தட்டுகள் சேர்த்தாலும் அது 3D.ஆக மாறாது.ஏன் என்றால் தடிப்பு திரும்பவும் பூச்சியமே?அது போலவே மற்றவையும்
அது உயர் கணிதம்! Sum as 't' tends to zero!
ReplyDeleteஅது உயர் கணிதம்! Sum as 't' tends to zero!
ReplyDeleteஅந்தக் கடைசிக் குறிப்புச் சரிதான்! தடிப்பில்லாததை எவ்வாறு அடுக்கலாம்? இழுக்கத்தான் வேண்டும்!
ReplyDeleteஅது சரி, ஒரு 2D நிழலுக்குத் தடிப்பே இல்லை, t=0 என்றால் அங்கு ஒன்றும் இருக்காதே! நான் நினைக்கிறேன் t ஆனது 0 ஐ நோக்கி அணுகலாமே ஒழிய அது முற்றாகச் சைபர் ஆகிவிட முடியாது. அதேபோலத்தான் 1D யும், அப்புள்ளியின் அளவு 'இல்லை' யை நோக்கிக் அணுக வேண்டும்!
கடவுள் என்பது அவர், அவள், அது என்பதல்ல,கட+உள்:கடவுள் எதையும்உள்கடந்து செல்வதே கடவுள் என்பது உணர்வு ,இதை உணர்தவர்கள் பிறர் உணர சில வழிமுறைகளை கூறினர் வழிபாடு ,தியானம்,இனும் பல ஆனால் எலோராலும் ஒரே நிலையை உணரமுடியவிலை ,அவரவர் உணந்தநிலையை இறுதி நிலை எனகூறினர் இதுவே கடவுள் வேறுபாடு.எதையும் மிக ஆழ்ந்த சிந்தனையோடு அமைதியாக எதுவும்
ReplyDeleteஎதிர்பார்க்காமல்செயலாக்கி னால் கிடைக்கும் தெளிவே கடவுள் அதாவதுகடந்து உள் சென்றதால் கிடைத்தது (கடவுள்) இந்நிலையை உணர எதிலும் நிலைபற்றில்லாமல் தொடர்ந்து சென்றால் தெளிவு(கடவுள்) பெறலாம்.
unmai
Delete