வினோதமான உலகில் ....ஒரு தொகுப்பு

முதல் தமிழ் இணையத்தளம்

சிங்கப்பூர் அரசு, தமது நாட்டைப் பற்றிய தகவல்களை உலகமுழுவதும் கொண்டு சேர்க்க எண்ணி, தமிழிலும் இதனைச் செய்துதரும் பணியை அன்றைய சிங்கப்பூரின் கணினி அறிஞர் நா.கோவிந்த சாமியிடம் ஒப்படைத்தது.

 

இவரது “சிங்கப்பூர் தமிழ் வெப்” என்பது தான்,  உலகளாவிய அளவில்  வெளிவந்த முதலாவது தமிழ் இணையப் பக்கம் ஆகும். 1995-இல் “கணியன்” எனும் பெயரில் நடத்தியதுதான் முதல் தமிழ் இணையத்தளமாகும்.

 

அதிகரிக்கும் இடைவெளி

பிரிட்டன் - அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான துாரம் ஆண்டுதோறும் 4 செ.மீ., அதிகரிக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. பிரிட்டன் விஞ்ஞானிகள் அட்லாண்டிக் கடலில் \600 கி.மீ., ஆழம் வரை, நில அதிர்வு செயல்பாடு குறித்து 'செசிமோமீட்டர்' கருவி மூலம் ஆய்வு நடத்தினர். இதில் அமெரிக்கா - ஐரோப்பா கண்டங்களுக்கு இடையே ஆண்டுதோறும் 4 செ.மீ. இடைவெளி அதிகரிக்கிறது என கண்டுபிடித்தனர். டெக்டானிக் தகடுகள் என்பது பூமியின் மேற்பரப்பு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இத்தகடுகள் நகர்ந்த தன் விளைவாக தான் பல கண்டங்களாக பிரிந்தன.

 

உலகத்தின் கூரை

மத்திய ஆசியாவில் அமைந்துள்ள திபெத் பீடபூமி, ஏறத்தாழ 4900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதனால் திபெத் உலகத்தின் கூரை என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. மத்திய ஆசியாவில் சீனா, நேபால், பர்மா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லையில் மேட்டுச் சமவெளி நிலமாக பரந்து விரிந்துள்ளது திபெத்.


உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம்

கரும்பு கியூபாவின் முதன்மை வணிகப்பயிராக உள்ளது. இதிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்பட்டு முதன்மை ஏற்றுமதிப் பொருளாக விளங்குகின்றது. இதன் காரணமாக கியூபாவை உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் என்று அழைக்கிறார்கள்.

 

‘இளஞ்சிவப்பு நகரம்’

இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான பாலைவனப்பிரதேசத்தில் எழுந்துள்ளது. மஹாராஜா இரண்டாம் ஜெய்சிங் என்றழைக்கப்பட்ட ஆம்பேர் வம்ச மன்னர், வங்காள தேசத்தைச்சேர்ந்த வித்யாதர் பட்டாச்சார்யா எனும் தலைசிறந்த கட்டிடக்கலைச்சிற்பியின் உதவியுடன் இந்த நகரத்தை நிர்மாணித்துள்ளார். ‘வாஸ்து ஷாஸ்த்ரா’ எனும் இந்திய கட்டிடக்கலை விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட முதல் நகரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்து கட்டிடக்கலை மரபின் உதாரண வடிவமாக ஜொலிக்கும் இந்த மாநகரம் ‘பீடபாதா’ எனும் நவமண்டல (ஒன்பது கட்டங்கள்) வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வானசாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றிருந்த மஹாராஜா இரண்டாம் ஜெய்சிங் நவக்கிரகங்களின் எண்ணிக்கையான ஒன்பது மற்றும் அதன் அடுக்குகள் (9X) வரும்படியாக இந்த நகரத்தின் மணடலங்களை வடிவமைத்துள்ளார். ஜெய்ப்பூர் நகரம் தனது கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் ஹவேலி மாளிகைகள் ஆகிய சிறப்பம்சங்கள் மூலம் உலகெங்கிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது.


தொகுப்பு : செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment