அலை பாயும் மனமே.....!


காரணம் இன்றி  என் மனதோரம் ஏதோ
 சோகம் வந்து மோதுதே 
 மெல்ல மெல்ல என்னில்
  விழுந்த காயங்கள் மனதில்
 நிறைந்து போனாதால்
மண்ணில் புதையுண்டு 
இருக்கும் விதை போல 
என் ஏக்கங்களும் 
சோகங்களாக வெளிபடுகின்றனவோ!
எதுவும் உண்மை
 இல்லை என்று தெரிந்தும்  
நிலை இல்லமால் 
அலையும் மனதையும் 
கட்டுபடுத்த தெரியாத உள்ளம்  
நிகழ்  காலத்தையும்  விழுங்கி
 சோகம் தன்னை நோக்கி 
அலை பாய்கிறதே 

காரணம் இன்றி இருக்கும் 
சோகம் தன்னை வென்று  
என் மனசை வெல்ல 
  ஒரு வழி கூறி  போவாயா  
 அலை பாயும்  மனமே! 
                                                                                            ....ஆக்கம்:அகிலன்,தமிழன்.

0 comments:

Post a Comment