கமல்ஹாசனின் 2 படங்கள் இந்த வருடம் வெளியாகின்றன

கமல்ஹாசன் நடித்தபாபநாசம்,’ ‘தூங்கா வனம்ஆகிய இரண்டு படங்கள் கடந்த வருடம் வெளிவந்தன. மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து வெற்றிகரமாக ஓடியதிரிஷ்யம்படத்தின் தமிழ் பதிப்பாக பாபநாசம் படத்தை தயாரித்து வெளியிட்டனர். குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்த படம் வசூல் குவித்தது.
தற்போதுசபாஷ் நாயுடுஎன்ற படத்தை கமல்ஹாசன் இயக்கி மகள் சுருதிஹாசனுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார். ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக கமல்ஹாசனும், இதர நடிகர்நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

கமல் தோற்றம்

இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் கதாபாத்திரம் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. தற்போது  இதனை நடிகர் மாதவன் வெளியிட்டு இருக்கிறார்.

தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் பல்ராம் நாயுடு என்ற தமிழ் பேசும் தெலுங்கு உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவர் பேசிய வசனங்கள் நகைச்சுவையாக அமைந்தன. பல்ராம் நாயுடு போன்றே இந்த கதாபாத்திரத்தின் தோற்றமும் உருவாக்கப்பட்டு உள்ளது. கதையும் அதன் தொடர்ச்சியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம்2, சபாஷ்நாயுடு ஆகிய இரண்டு படங்களும் இந்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வரூபம் படத்தை 2013–ல் கமல்ஹாசன் இயக்கியபோதே அதன் இரண்டாம் பாகத்துக்கான பணிகளையும் பாதி முடித்து விட்டார்.


விஸ்வரூபம் பட தோற்றத்திலேயே இரண்டாம் பாகத்திலும் நடித்தார். கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு சில பிரச்சினைகளால் தள்ளி வைக்கப்பட்டது. வருகிற தீபாவளிக்கு இதை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
                                                                                          

0 comments:

Post a Comment