குழப்பவாதிகள்!!உலகம். தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் மிகவும் சுருங்கிவிட்ட்தாக  பலரும்  பேசிக்கொள்கிறார்கள். உண்மைதான். ஆனால் மனித மனங்களும் அப்படி சுருங்கிவிட்டதா  என எண்ணத் தோன்றுகிறது. 
மிருகங்கள் ஒவ்வொன்றும்  ஒரு சில கூடாத குணங்களை கொண்டிருந்தாலும் அவற்றினை தம்மினங்களில் பெரும்பாலும் சாதித்துக் கொள்வதில்லை. அனால் மனிதனில் மட்டும் அப்பப்பா எத்தனை குணங்கள். எத்தனை மனங்கள். அத்தனையும் ஒருவர் மேல் ஒருவர் காட்டிக்கொள்வதிலேயே திருப்தியடைகிறார்கள். மகிழ்ச்சியடைகிறார்கள். அதுவும் அவற்றினை உறவற்றவர்களிலும்  பார்க்க உறவுகளிடம் அதிகம் பிரயோகித்துக் கொள்கிறார்கள்.
மென்மையாக பேசுவோர் அரிதிலும் அரிதாகவே காணக்கூடியதாக இருக்கிறது. மறுத்துப் பேசுவோர் மலிவாக கிடைக்கிறார்கள். உலகமேடையில் பசுத்தோல் போர்த்த நடிகர்கள் நம்பப்படுகிறார்கள்.மதிக்கப்படுகிறார்கள். உண்மை வாதிகள் உதாசீனம் செய்யப்படுகிறார்கள். இதுதான் புராணங்கள் கூறும் கலியுகத்தின் காடசிகளோ  என கருத வைக்கிறது..

பொழுது போக்கிற்காக திரைப்படம் என்று பார்த்தால் குத்து,வெட்டு,கொலை,கற்பழிப்பு கடத்தல்களால் நிரம்பி வழிகின்றன.அவற்றினை தொடர்ந்து நாடுகள்  முழுக்க அவை புற்று நோய் போன்று பரவி தலைவிரித்தாடுகிறது.அது அரசியல் வாதிகளுக்கோ ,ஆன்மீக வாதிகளுக்கோ அவர்களின் பணப்பை நிரம்புவதால் அது தொடர்பாக கவலை இல்லை.

புரியவில்லை! ஆனால் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றது.
                                                                                                              

0 comments:

Post a Comment