திரைப்படத் துளிகள்


அஜித்தின் 57வது :‘வேதாளம்’ படத்தை அடுத்து அஜித்குமார் தனது 57–வது படத்தில் -நகைச்சுவை வேடத்தில் கருணாக ர னுடன்-  2 வேடங்களில்  நடிக்கிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடக்கிறது. அடுத்த வருடம் கோடை விருந்தாக திரைக்கு இப்படம் வர இருக்கிறது.

சீனாவில் பாகுபலி:பிரபாஸ், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்து வெற்றிகரமாக ஓடிய பட மான , ‘பாகுபலி.’தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டது.
இப்போது, சீன மொழியிலும் ‘பாகுபலி’ மொழிமாற்றம் செய்யப்பட்டு . அங்கு 6,300 தியேட்டர்களில், இந்த படம் திரையிடப்பட இருக்கிறது. 

கஞ்சா கருப்பு :அமீர் இயக்கிய ‘ராம்’ படத்தின் மூலம் அறிமுகமான கஞ்சா கருப்பு ஒரு திருப்பத்தை ‘சண்டிக்குதிரை’ படம் தனக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார், 

இந்த படத்தில் அவர் நகைச்சுவை கலந்த குணச்சித்ர பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்!

ஜெயம் ரவி நடிப்பில்  :ஜெயம் ரவி, டைரக்டர் விஜய், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் ஆகிய மூன்று பேரும் ஒரு படத்தில் இணை கிறார்கள். இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

படத்தை பற்றி ஜெயம் ரவி கூறும்போது, “இந்த கதையில் பல சுவாரசியங்களையும், மக்களின் ரசனைகளுக்கு ஏற்ற பல விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கிறோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் எல்லா அம்சங்களும் படத்தில் இடம் பெறுகின்றன. ஹாரீஸ் ஜெயராஜ் எங்களுடன் கைகோர்த்திருப்பது, மேலும் பலமாக அமைந்திருக்கிறது” என்றார்.

 ‘மாவீரன் கிட்டு’:விஷ்ணு விஷால்-ஸ்ரீதிவ்யா ஜோடியுடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக வும்  ஸ்ரீதிவ்யா கதாநாயகியாகவும்  நடிக்க இப்படம் உருவாகிறது.

 சுசீந்திரன் அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார்.இதில், முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்க, நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார்.1985 காலகட்டத்தில், தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு இந்திய வீரனை பற்றிய படம்தான் இது


வட சென்னை:வெற்றிமாறன் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தின் படப்பிடிப்பு, நடைபெறுகிறது. இந்த படம், 3 பாகங்களாக தயாராக இருக்கிறது. இதில்,, மூன்று பாகங்களிலும் கதாநாயகியாக நடிக்க அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 

சந்தானம் :‘தில்லுக்கு துட்டு’ படத்துக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு சந்தானத்துக்கு உற்சாகத்தை அளித்திருப்பதுடன், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பது என்று அவரை முடிவெடுக்க வைத்து இருக்கிறது. இனிமேல், அவர் கதாநாயகனாக  மட்டுமே நடிப்பாராம்.
                                                     www.theebam.com    


0 comments:

Post a Comment