ஆன்மீகம் எங்கே போகிறது?

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள், கடல் தாய்க்கு பால் ஊற்றி வழிபாடு 
டவுள்-அவன் இருக்கிறானா?அவன் இல்லையா?அப்படியெல்லாம் ஆராய்ந்து என் காலத்தை வீணடித்துக்கொள்ளவோ  அல்லது அடுத்தவரை க்குழப்பிக்கொள்ளவோ நான் விரும்பவில்லை. அப்படி ஒரு அறிவு எனக்கு இருக்குமெனில் நான் அவனைக் கடந்தவனாக இருக்கவேண்டும்.
 ஆமாம்! அவன்எம்மைமட்டுமல்ல,அனைத்தையும் கடந்தவன். எல்லாவற்றையும் அறிந்தவன். அவன்தான் கடவுள்.
யார்கடவுள்? ஒவ்வொருமதத்தினரும்தாம் வணங்கும் தெய்வங்களை பெரிதுபடுத்திப் பேசுவது உலகில் வழக்கமாகிவிட்டது. அது போதாதென்று அவற்றின் வழியில் ஒழுகுவோர், போட்டிகளையும் சச்சரவுகளையும் வளர்த்து அவர்கள் கூறும் மதங்களையே சீரழித்து வருகின்றனர்.
அவர்கள் கூறுவது போல/போன்று  கடவுள் இருப்பது என்றால், உலகில் கடவுள் பலவா? கடவுளையும் சாதாரணமாக பன்மையாக எண்ண முடியுமா? அப்படி நினைப்பதுக்கு, முதலில் கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? உருவம் இல்லாத கடவுளை எப்படி நினைந்து வழிபடமுடியும்? மனிதர்கள் தம் வழிபாட்டு முறையினை இலவுவாக்க  ஒன்றை நினைத்து வழிபட வேண்டி இருந்தது. அதற்காக தம்மைப்போல் மனித உருவங்களை கடவுளாக வைத்து வழிபட்டனர். மனிதர்களுக்கு நல்ல செய்தியினை எடுத்துக் கூறியவர்கள் அல்லது மக்களை ஆண்டவர்கள்  அவர்கள் மறைந்ததும் கடவுளுக்குரிய உருவமாக்கப் பட்டனர். இவற்றை எல்லாம் செய்தது மனிதர்களே. மக்களின் உள்ளத்தை பண்படுத்தியும், உடலைக் காத்திடவும் அவற்றினை அடிப்படையாகக் கொண்டு இறை வழிபாட்டு முறைகளை உருவாக்கியவர்கள் மனிதர்களே. மிருகங்களுக்கும் மனித அறிவு இருந்திருந்தால் தம் உருவத்தில் கடவுளை வைத்து அவை வணங்கியிருக்கும். அவற்றை உருவாக்கிய மனிதனே அவன் வகுத்த நெறிமுறைகளுக்கு இடையிலேயே கலவரங்கள் என்பது நகைப்புக் கிடமானதே.
மனிதர்களில் பலரைப் பார்க்கிறேன்.பிள்ளையாருக்குக் கொடுக்கிறேன், முருகனுக்குக் கொடுக்கிறேன் என்று கூறுகிறார்கள். உலகத்தை படைத்தவனுக்கு கொடுப்பதற்கு மனிதனால் எதனைப் படைக்க முடிந்தது. அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை என அனைத்து ஆன்மிக வாதிகளும் கூ ருக்கின்றனரே! அப்படியெனின் .இறைவன் படைத்தவைகளையே மனிதன்  இறைவனுக்கு கொடுப்பது/படைப்பது , என்று நீங்கள் கூறுவது எப்படி நியாயம் ஆகும்? ஆராய்ந்து பார்ப்பின் .அப்படிக் கொடுக்கப்படுபவை சுற்றி மனிதனையே சென்றடைகிறது. செய்பவை மனித குலத்திற்கு நன்மை விளைவிக்கக கூடியதாக இருக்க வேண்டும். அதை விடுத்து பட்டினியால் பலர் மடிந்துகொண்டிருக்கும்போது, அதே ஊரில் சுவாமிக்கு படைப்பதாகக் கூறிக்கொண்டு, ஒரு சிலரின் வயிற்றையும்,பணப்பையை நிரப்புவதும் இறைவனுக்கே பொறுக்குமா? அல்லது பல் இலட்ச்சம் குழந்தைகள் போஷாக்கின்மையால் உலகில் இறந்து கொண்டிருக்க பாலாபிஷேகம் என்ற பெயரில் ஆயிரம் ஆயிரம் குடம்  பால் நிலத்தில் ஊற்றி வீணடிக்கப்படலாமா? இது இறைவனுக்கே பொறுக்குமா?
தாமே உருவாக்கிய நேர்த்திகளை மிருகப்பலி ,நரபலி என மோசமான நிலைக்கு மனிதன் மாற்றி மிருகங்களை விட கேவலமாகி விட் டான்.
நேர்த்திகளை நிறைவேற்றா விடில் இறைவன் தண்டித்துவிடுவான் என கூறி இறைவனையும் கேவலப்படுத்துகிறான்.
விரதங்களை உருவாக்கிய மனிதன் நோயாளிகள்,வயோதிபர்கள் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. மனிதனால் ஏற்படுத்தப்படட [இறைபக்தியல்ல]பயபக்தி மேற்படி இயலாதவரை இயமனுக்கு இரையாக்கிய செய்திகளை அவ்வப்போது பத்திரிகைகளில் படிக்கிறோம்.
உண்மையான ஒரு ஆன்மிக வாதிக்கு இந்தியாவில்  இடமில்லை. வளர்ந்த நாடுகளில் மந்திரம் தெரிந்தவர்கள் அதனை ஒரு தொழிலாக செய்து பிழைக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் மந்திரம் சிறிது தெரிந்துவிடடால் அவர்களை கடவுளாக்கிவிடும் இந்தியா இன்று.
இந்தியா ஒரு  காலத்தில் ஆன்மிக நாடாகவே பெருமை கொண்டது. இன்று மந்திரமும், தந்திரமுமே மக்களை அடிமைஆக்கி யுள்ளது. 

-சித்தானந்தஜீ  


0 comments:

Post a Comment