எந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [ திருவண்ணாமலை]போலாகுமா!

திருவண்ணாமலை (Tiruvannamalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளதிருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.
இரமண மகரிசி, ஆசிரமம்
  • திருவண்ணாமலையில் மக்கள் கி.மு 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே நகரமைத்து வாழ்ந்து வருகின்றனர். இது "மதுரை" நகரினைவிட பழமையானது என்று சிலரால் கூறப்படுகிறது.
  • திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். திருவண்ணாமலை நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது.
  • சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது.
  • கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.
  • பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக விளங்கியது.
  • திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை நகராட்சி"யாக உருவாக்கபெற்றது.
  • 1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு, 1971 இல் முதல் நிலை நகரட்சியாக உருவானது.
  • 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக, 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"யாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
  • திருவண்ணாமலை மலை ஒரு இறந்த எரிமலையாகும். பல நூற்றாண்டுக்கு முன் இது வெடித்து இதன் தீ குழம்பு நீரில் தோய்ந்து உருவானதுதான் தக்காணம் என்றும் சிலர் கூறுவார்.
  • இரமண மகரிசி ஆசிரமம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இதை சுற்றி பார்க்க கட்டணம் இல்லை. இங்கு தங்கும் வசதி உண்டு. இங்கு பல வெளிநாட்டவர் வந்து தங்குகின்றனர்.

                                                                                                                                  

0 comments:

Post a Comment