தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி/ :22


 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]     
சுமேரியாவில் ஒரு வித வர்ணாசிரம தர்மம் நிலவியது போலதோன்றினாலும்

அதாவது அதி உயர் மேல் வகுப்பினராக அரசனும்அவன் குடும்பமும் அதே போல அதி கீழ்வகுப்பினராக அடிமைகள் அமைந்தாலும்சுமேருதமிழ் இலக்கியத்தில் எந்த ஒரு வருணாசிரம தருமமும்[மனுவாதம் ] எடுத்துக்கூறப்படவில்லை . அதுமட்டும்அல்ல அப்படி ஒன்றை ஆதரிக்கவும்
இல்லை.என்றாலும் தனிப்பட்டவர்களின் வித்தியாசம்அங்கீகரிக்கப்பட்டுள்ளது.எவரும் ur-sag அதாவதுசான்றோன்/தலைவன் ஆகவோ அல்லது ulu-gulaஅதாவது குரவனாகவோ[அரசன் உபாத்தியாயன்அல்லது குருவாகவோ ]  வரலாம்.பண்டைய தமிழரின் சமுக அமைப்பும்வருணாசிரம தருமம்  அற்றதாகவே இருந்தது.அவர்கள் குலத்தை அதாவதுசெய்யும் தொழிலை அடிப்படையாக கொண்டே தமது சமுக அமைப்பைஅமைத்திருந்தார்கள்.தொல்காப்பியம் மரபியலில் அந்தணர்வைசிகர்...எனமக்களை வகை படுத்தினாலும்(தொல்மரபு. 71,72,78,81) [மக்களில் இந்தநான்கு வகைப் பாகுபாட்டைப்  பொருத்தமில்லா இடத்தில் பிற்காலஇடைச்செருகல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர் ] ,அது முனைவனை  [அறிவு விளக்கம் பெற்றவன் முனைவன்] "வினையின் நீங்கி விளங்கியஅறிவு"(தொல்மரபு. 95)  என குறிப்பாக உணர்த்துவதில் இருந்து யாரும்முனைவனாருவாக வரலாம் என்பது தெரிகிறதுஇது பிறப்பில் அல்லாமல்அறிவாற்றலில் உள்ளது என்கிறது.


முனைவர் கிலோகநாதன் அவர்களால்சுடிக்காட்டப்பட்ட வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த குமரி,சங்கம் ஆகிய வற்றின் குறிப்புகள் கொண்ட  சுமேரு இலக்கிய வரிகள்,அவரின்பொருள் விளக்கத்துடன் கிழே தரப்பட்டுள்ளது

215. ga-e gudu sag-gam-mah ju me-en ( I am the anointing (gudu)-priest , the knowledgeable sangamah)


இங்கு வரி 215-இல் மிகத் தெளிவாக ‘சங்கம் மா” (sag-gam-mah) என்றசொல் பயில்கின்றதுஇங்கு ஒரு மொழி பெயர்ப்பும் இல்லை.அப்படி ஒருகருத்து தேட வேண்டிய அவசியமும் இல்லை.ஆயினும் அதே வரியில்கோடு’(gu-du) என்ற சொல் பயிலஅது ‘கூடத்து’ என்ற பொருளில் வரும்கோடியர்’ ஆக இருக்கலாம் என்பதால்,சங்கம் கலைஞர்களின் ஒரு பேரவையாக இருக்கலாம் என்றே தெரிகின்றதுசுமேரியாவில் இப்படிசபை’ ‘அவை’ என்றெல்லாம் பல உண்டு என்றும் அறிகின்றோம் அதனால்சங்கம்’ போன்ற ஓர் அமைப்பு இருப்பதில் வியப்பொன்றும்இல்லை,மேலும் வாசிக்கப்படாத [A-HA](ki) என்ற கோல் எழுத்தை[வண்ணமையில் தோய்த்த எழுதுகோல்தூரிகை போன்றவற்கைக் கொண்டுகோலால் எழுதிய எழுத்தை ] ‘குமரி’ என்றும் ‘கௌரி’ என்றும் அக்காடியமொழியில் வாசித்துள்ளனர்இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்க,சுமேரியர்கள் சங்கம் வைத்து  கலை வளர்த்தனர் என்றும் தங்கள் நாட்டைகுமரி’ என்றும் ‘கௌரி’ என்றும் அழைத்துள்ளனர் என்றும் தெரிகின்றது.இவையே சுமேருத் தமிழ் முதற் சங்கத் தமிழ் என்பதற்குரிய சான்றுகளாகஎடுத்துக்கொள்ளலாம் என்றும் நினைகின்றேன் என்கிறார் முனைவர் கி.லோகநாதன்.

ஆகவே:- 215:ங்ஆயே கோடு சங்கம் மா சூமான்[தமிழ்: Gaayee koodu cangkam maa: cuu maan] என விளக்கம் கூறி அதன் பொருளைஇப்படி கூறுகிறார்."பேரவையால்[சங்கம்நிலைநாட்டப்பட்ட ஒழுங்குகளை,சட்டங்களைஅறிந்த ஒரு சமய சடங்கு நடனமாடுபவர் தான்நான்.[I am ritual dancer ( koodu) who knows the rules established by the Great Sandam]" என்றும் , மேலும் மதகுரு ['priest"]  என கருத்து கொடுக்கப்பட்ட  சுமேரியா சொல்:" gudu ",உண்மையில் அது ஒரு சமய சடங்கு நடனமாடுபவர் என வாதிட்டு தமிழ்சொல் "கோடு /koodu ", கோடியர் = கூத்தர்[Sumerian word"gudu"  which is given the meaning 'priest" may  actually be  a ritual dancer, and hence the Tamil: "koodu", meaning Tamil: "koodiyar", the dancer]எனவிளக்கம் கொடுத்துள்ளார்.


அது போலவே 217. ga-e ka-pirig [A-HA](ki) he-sikil-la he-ga-dadag-ga me-en இற்கு "நான் உண்மையாகவே மாசில்லாத,பாவம் நீக்கிபுனிதப்படுத்தப்பட்ட Ku'ar சேர்ந்த ஒரு மந்திரிப்பு மதகுரு"  ( I am the incantation priest of Ku'ar , who indeed cleansed , and also purified)என்பதை, 217.ங்ஆயே காபிரி குமரி எய் சுகில்ல எய்க தங்குதங்குமான்[தமிழ்:Gaayee kaapiri Kumari  (Kauri)  ey sukilla, eyka taGtaGku maan]என விளக்கம் கூறி அதன் பொருளை இப்படிகூறுகிறார்:"தூய்மையும் நீண்ட வாழ்வும்  நிறைவும் பெற்ற ஒருகுமரி[‘கௌரி'] மந்திரிப்பு மதகுரு[I am the incantation priest of Kumari (Kauri), attained purity and also attained living long ]"  என விளக்கம்கொடுத்துள்ளார்.

sag-gam-mah என்பதை ஒரு பேரவை[the Great Assembly?] என்றும்அதுபோல  Ku'ar , Kumari.போன்றவற்றுக்கும் மேலும் பல விளக்கங்கள்ஆதாரங்கள் கொடுத்துள்ளார்.

இன்னும் ஒரு சுமேரியன் தமிழ் ஒற்றுமையைபார்ப்போம்.தமிழில் "கல்என்பதுஇடத்தைபொருத்து விளக்கம் பெரும்.உதாரணமாக"இளமையில் கல்என்ற வாக்கியத்தில் கல் என்பதுபடிப்பை குறிக்கும்மேலும் "ஆற்றோர கல்என்றவாக்கியத்தில் கல் என்பது கற்களை குறிக்கும்.அதுபோலவே சுமேரிய மொழியும் அமைந்துள்ளதைகிழே பார்ப்போம்கி.மு 3000 வருடம் பழமையான"சுருபக் நெறிஎன்னும் பதிப்பில் இருந்து ஒருவரியை[பக்கம் :246:] பார்ப்போம்

சுமேரியன் :nig.nam kal-kal-en nig.e me-kal-kal
விளக்கம் :You appreciate something, it appreciates you.

[இங்கு மொழி பெயர்ப்பு தவறானது என்பதுத் தெளிவு. ‘me”  என்ற சொல்நமது ‘மெய்’ தான்இச்சொல் ‘மெய்கீர்த்தி’ எனும் சொல்லில் வரும்(மொய்ம்புஆற்றல் சக்திஎன்ற கருத்திலும்’ உண்மை’ என்ற கருத்திலும்பயில்கின்றது.]
தமிழ் :நிகழ்.நம் கல்கல்லின் மிகவே மெய் கல்கல்/நிகழ்நம் கல்கல்.யென்நிகவே மெய் கல்கல் /nikaznam kal.kal-in mikvee mey kal.kal
விளக்கம்: If you learn about the happenings around you learn the truths/ If you study all happenings, you also study great truths
இந்த ‘மெய்’ என்ற சொல் அன்றுமுதல் இன்று வரை அதேப்பொருண்மைகளோடும் ஒலிக்குறிப்போடும் விளங்குகின்றதைக்காண்க.மேலும் அதே வரியில் ‘kal’  என்றவாறு கற்றலை வற்புறுத்துவதோடு‘me-kal-kal’ > “மெய் கல் கல்” என்றவாறு  வாழும் சூழலில் நடப்பவற்றைகற்று மெய்யறிவு தேற்றி வாழ்வேண்டும் என்று அறவுரை பகரப்படுவதைக்காண்க.

இனி Temple Hymn 9,பக்கம் : 2(120) பார்ப்போம்

சுமரியன் :us-ku temen-gal-zu nam-kal-kal
விளக்கம் : உன் அடித்தளமும் அத்திவாரமும் வல்லமைமிக்கது.[Your base (and) your great foundation are mighty]

சுமேரியன்:us (உச்சி/the top), மிக உச்சி /the very top,முகடு /peak etc/நம்கல்கல்:nam-kal.kal ( பலமானதும் திடமானதும்./really strong and firm) தமிழ் : கல்/kal :stone, firm. The நம் ‘nam' இங்குபெயரடையாக[ஒரு பெயரைக் குறித்து மேலும் விளக்கம் அல்லது விரிவுதருமாறு அமையும் சொல்தொழில் படுகிறது [serves here as an adjective for the metaphorical use of ‘kal' (stone))

தமிழ் : உச்சி கோ தாமான்கள்ஜு நம்கல்கல்/ucci koo taamankaL-ju namkal.kal
விளக்கம் :உன் புனிதமான சிகரமும் அகலமான அடித்தளமும் மிகவும் பலம்வாய்ந்ததாகவும் உறுதியாகவும் உள்ளது[Your divine top and wide base are really strong and firm]

இவ்வாறு வெவ்வேறு பகுதியில் கற்களையும் , கற்றலையும் குறித்துசுமேரிய மொழியில் ஒரே எழுத்தும் ஒலியும் தமிழை போலவேபயன்படுத்தப்பட்டுள்ளது , எனவே எழுத்திலும் , ஒலியிலும் , அர்த்தத்திலும்ஒரே போல இருக்கும் சுமேரிய மொழி நம் தமிழ் மொழின் முதலாம் தமிழ்சங்க தமிழ் என்று வல்லுனர்கள் தெரிவிகின்றனர் .

இப்படியான நூறுக்கு மேல்பட்ட சுமேரிய-தமிழ் சொற்களை நாம்சுட்டிக்காட்டலாம்.அவை ஒலிப்புமுறையிலும் கருத்திலும்மாற்றமடையாமல் அப்படியே இப்பவும் இருக்கின்றன.உதாரணமாகஇன்னும் ஒரு சுமேரியன் சொல் "மாஎன்பது படகு[கட்டுமரம் >மரம்] ,பெரிது,சிறந்த என்று குறிக்கிறது.தமிழில் கூட அதே சொல் "மா",மாமரத்தையும் மரம்:மரத்தையும் மா,மகா:பெரிது,சிறந்த என்பதையேகுறிக்கிறது.ஆகவே இவைகளை ஒரு தற்செயலான சம்பவம் எனகூறமுடியாது.

சுமேரிய ஆய்வாளர்களின் கருத்துப்படி சுமேரிய மொழி தனித்த மொழி.இக்கால மொழிகளோடு எத்தகையதொரு தொடர்பும் இல்லாத மொழிஅப்படிப்பட்ட ஆணித்தரமான ஆய்வாளர்களின் முடிவுரைக்குப் பின்னர்அது பற்றிய எந்த ஒரு மாற்றுக்கருத்துக்கும் இடம் குறைவுஆயினும்ஒருமாபெரும் நாகரிகத்தை உருவாக்கிய ஒரு மொழி எப்படி தனித்து அழிந்தமொழியாகி இருக்கும் என்ற கருத்தோடுஅம்மொழியை உள்நோக்கம்இல்லாமல் உற்று நோக்கின்,நாம்  ஒரு வேளை இந்த குழப்பத்திற்குமுனைவர் கிலோகநாதன் போன்றோர்களின் ஆய்வுகளின் துணை மூலம்விடை காணலாம்?


சுமேரிய சொல் ur -தமிழிலும் ஊர்-நகரத்தையே குறிக்கிறது.சுமேரிய சொல்Ama -தமிழிலும் அம்மா -தாயையே குறிக்கிறது சுமேரிய இலக்கணத்தைபடிக்கு எவரும் தமிழுடன் உள்ள ஒற்றுமையை இலகுவாக புரிந்துகொள்வார்கள்.உதாரணமாக En[என்], nin[நின்], aba[Sumerian. aba/apa and Tamil.அப்பா], ama[அம்மா ], Ur[ஊர் ] போன்றவை,இந்த அடிப்படைசொல்களை வாசிக்கும் போது எந்த தமிழனும் இதை மறுக்கமாட்டார்கள்.ஆச்சிரியமான விடயம் என்னவென்றால் தமிழ் மொழியும்இந்த அடிப்படை சொல்களை கொண்டே உருவாக்கப்பட்டவை என்பதே.

0 comments:

Post a Comment