உளி தொடாத கல் சிலையாகாது


இருள் கொண்ட  வாழ்வில்
இருளுக்கு வெளிச்சம் காட்டாவிடின்
உளி தொடாத கல் சிலையாகாது,
அதே போல
இருள் கொண்ட வாழ்வும்
ஒளி பெறாது!

அன்பெனும் தேடல்
தொலைந்து போனால்
ஆனந்த வாழ்வும்
வந்து சேராது,
தனிமை வாழ்வும்
விடிவு பெறாது!

எழுதகோல்கள் மயங்கி ப்போனால்
எழுத்து வரிகள் உயிர் பெறாது,
உணர்வுகளும் இருளில் மூழ்கி போகும்!

ஓயாமல்
மனதின் இருளை நகர்த்தி
ஒளி மயமான
வாழ்வை உண்டாக்க
மனதை தெளிவாக்கி
இன்பத்தை உண்டாக்கி
அடியொன்று வைத்து
படியொன்று ஏறியே,
வெற்றிப்படியை
முத்தமிட்டு
விடிவைக் காண்போம்.
அகிலன்

0 comments:

Post a Comment