அதிசயம்! அற்புதம்! மாலை மேலே சென்று கழுத்தில் தானாகவே அணிந்தது!


பல சமயங்களில், கடவுள்மார்களின் சிலைகளில் இருந்து பூவோ, பூ மாலையோ மேலே இருந்து கட்டவிழ்ந்து கீழே விழுவதை அதிசயம் என்றும், அற்புதம் என்றும் பக்தர்கள் பெரிது படுத்தி விளம்பரம் செய்து கொள்ளுவார்கள். இதனால் அவர்களுக்கோ, அல்லது இந்த உலகத்துக்கோ என்ன இலாபம் என்ற சிந்திக்கவே மாட்டார்கள்.

என்ன பொருளும் கீழ் நோக்கித்தான் விழும், மேல் நோக்கிச் செல்லாது. அப்படி மேலே சென்றால்தான் அது அதிசயம். (மீண்டும் - அப்படித்தான் மேலே போனாலும் அதனால் உங்களுக்கு என்ன பலன்?) 

பின்வரும் வீடியோ பதிவுகளை பார்க்கவும்; கடவுள் என்ன மாதிரியான அற்புதங்களைச்ச் செய்து காட்டுகின்றார் என்று!


முதலாவது, வாத்து ஒன்றுக்கு மாலை தானாகவே கீழே இருந்து மேலே போய் கழுத்தில் அணிகின்றது!

-- வீடியோ 1  --

"ஆஹா, ஓஹோ, என்ன அதிசயம்! இந்த அற்புதத்தைக் கேள்விப்பட்ட பக்தர்கள், அந்த வாத்துக் கடவுளை வணங்கிப் பெரும் பொருள் பெற்றுப் பெரு  வாழ்வு வாழ்வதற்கு ஆயிரக் கணக்கில் படை எடுத்துச் செல்கின்றார்கள்" என்று சொன்னால், என்னை ஒரு கிறுக்கன் என்று சொல்வீர்கள்.
ஆனால் ஒரு சிலையில் இப்படி க்காட்டினால் என் கதையை நம்பி விழுந்து வணங்க பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ்வார்கள்.

மீண்டும் அபூர்வ சக்தி ஒன்றை பாருங்கள்!  கிழித்தெறியப் பட்ட  காகித துண்டுகள் மேலே கிளம்பி வந்து ஒன்றாய் இணைகின்றன! ஆஹா என்ன அற்புதம்!

-வீடியோ 2 -
இதுபோல ஏமாற்று வேலைகள் பலவற்றையும் செய்து, எல்லாம் கடவுள்தான் செய்கின்றார் என்று நம்ப வைப்பதற்கு பலர் இருக்கின்றார்கள்! இவற்றை நம்பிப் பின்னால் அலைந்து திரியவும் ஏராளமானவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்!

தற்போதைய தொழில் நுட்பத்தை வைத்து விரும்பிய அதிசயங்கள் என்னவென்றால் செய்து காட்டலாம். 
அவர்கள் செய்யும் பித்தலாட்ட்ங்களை அதே தொழில்நுட்பம் மூலம் நுணுக்கமாக எடுத்துக் காட்டியும் இக்கருத்தினை   செவிமடுக்காது  அவர்கள் பின்னால் திரியும் [பய]பக்தர் கூட்டமும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.
தொழில் நுட்ப வளர்ச்சி எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றது! அத்தோடு, மூட நம்பிக்கைகளும் சேர்ந்து கூடவே வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன!
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭

5 comments:

 1. இந்த தொழிநுட்பத்தோட சேர்ந்து தான் முழு மோட்டு நம்பிக்கைகளும் வளர்த்துக்கொண்டு இருக்கிறது.கண்டா நிண்டவங்களை எல்லாம் முகநூலில் போட்டு இவர்களை பகிர்ந்தால் பெரும் பலன் சிலமணி நேரத்தில் கிடைக்கும் என்று பதிவிட பல பலரும் அதை நிறைவேற்றி படு முட் டாலாக மாறிவிடுகிறார்கள். இப்படி எத்தனை எத்தனையோ ....

  ReplyDelete
 2. ஈரோடு மூர்த்திSunday, August 26, 2018

  ஓம் வாத்து ஓம்! ஓம் வாத்து ஓம்!!

  இந்த அற்புத செய்தியை ஷேர் பண்ணினால் அருள்மிகு வாத்துக் கடவுள் உங்களுக்குத் பெரும் செல்வத்தை அள்ளித் தருவார்!

  1 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 1 கோடி ரூபா, 24 மணி நேரத்தில்.
  2 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 500 லட்ஷம், 48 மணி நேரத்தில்.
  1 நிமிடத்தினுள் 50 பேருக்கு ஷேர் பண்ணினால் 500 லட்ஷம், 48 மணி நேரத்தில்.
  2 நிமிடத்தினுள் 50 பேருக்கு ஷேர் பண்ணினால் 250 லட்ஷம், 72 மணி நேரத்தில்.

  லைக் பண்ணினால் வெறும் 1000 ரூபாதான்.

  அலட்சியம் செய்தால், 24 மணி நேரத்தில் குடும்பமே கஷ்டத்தில் வாடும்!

  எனக்கு 1 கோடி ரூபா கிடைத்ததுபோல உலகத்தில் உள்ள எல்லோருக்குமே அப்படிக் கிடைக்க வேண்டும் என்ற பரோபகார நல் நோக்கத்தில்தான் பரந்த சிந்தனையுடன் இதை சொல்லுகின்றேன்!

  ஓம் வாத்து ஓம்! ஓம் வாத்து ஓம்!!

  ReplyDelete
 3. ஈரோடு மூர்த்திWednesday, August 29, 2018

  ஓம் வாத்து ஓம்!
  ஓம் வாத்து ஓம்!

  பேரருள் கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் வாத்து மஹா சுவாமிகளின் இந்த செய்தியை
  1 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 1 கோடி ரூபா 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.
  2 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 25 லட்ஷம் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.
  5 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 25 லட்ஷம் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.
  1 நிமிடத்தினுள் 10 பேருக்கு ஷேர் பண்ணினால் 5 லட்ஷம் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.
  10 நிமிடத்தினுள் 10 பேருக்கு ஷேர் பண்ணினால் 1 /2 லட்ஷம் 48 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.
  லைக் பண்ணினால் வெறும் 1000 ரூபாதான்.
  அலட்சியம் செய்தாலோ 12 மணி நேரத்தினுள் பெரும் கஷ்டம் நிகழும்.

  எனக்கு கிடைத்த கோடிபோல, உலகில் எல்லோருக்குமே கிடைக்க வேண்டும் என்ற பரந்த, பரோபகார நற்சிந்தனையுடன், பொறாமையே இல்லாத நான் இதை உங்களுக்கு அறிவிக்கின்றேன்.

  ஓம் வாத்து ஓம்!
  ஓம் வாத்து ஓம்!

  ReplyDelete
 4. ஓம் வாத்து ஓம்!

  ஓம் வாத்து ஓம்!


  பேரருள் கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் வாத்து மஹா சுவாமிகளின் இந்த செய்தியை

  1 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 1 கோடி ரூபா 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.

  2 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 25 லட்ஷம் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.

  5 நிமிடத்தினுள் 100 பேருக்கு ஷேர் பண்ணினால் 10 லட்ஷம் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.

  1 நிமிடத்தினுள் 10 பேருக்கு ஷேர் பண்ணினால் 5 லட்ஷம் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.

  10 நிமிடத்தினுள் 10 பேருக்கு ஷேர் பண்ணினால் 1 /2 லட்ஷம் 48 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கும்.

  லைக் பண்ணினால் வெறும் 1000 ரூபாதான்.

  அலட்சியம் செய்தாலோ 12 மணி நேரத்தினுள் பெரும் கஷ்டம் நிகழும்.


  எனக்கு கிடைத்த கோடிபோல, உலகில் எல்லோருக்குமே கிடைக்க வேண்டும் என்ற பரந்த, பரோபகார நற்சிந்தனையுடன், பொறாமையே இல்லாத நான் இதை உங்களுக்கு அறிவிக்கின்றேன்.


  ஓம் வாத்து ஓம்!

  ஓம் வாத்து ஓம்!

  ReplyDelete
 5. காந்தன்Wednesday, September 12, 2018

  நான் உடனே 100 அனுப்பினேன்; ஒன்றுமே கிடைக்கவில்லையே! எனது வாகனம்தான் விபத்துக்குள்ளானது!

  ReplyDelete