தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] /பகுதி 23‏

1400 ஆண்டை சேர்ந்த இருதலைப்புள்]
தமிழ்,சுமேரியநாகரிகத்திற்குஇடையில்"இருதலை பறவை[இருதலைப்புள்ளில்] "யில்ஒரு ஒற்றுமை காணக்கூடியதாக உள்ளதுசுமேரியர்கள் இந்த இரு தலை பறவையைபோர் கடவுள் "நின்உர்ட"[Ninurta]வின் குறியீடு/சின்னம் என் கருதுகிறார்கள்.இதைநின் கிர்சு[Nin கிர்சுஎனவும் அழைப்பார்கள்.சங்கநூல்களில் மூன்று பாடல்கள் இந்தப்பறவையைப் பற்றி  குறிப்பிடுகின்றன.தோழி ஒருத்தி தனக்கும் தலைவிக்கும் உள்ளஉறவைஓர் உயிர் இரண்டு தலை பெற்றிருப்பது போன்ற உறவு என்கிறான். [கலித்தொகை89].ஆசிரியன் நல்லந்துவனார் பரிபாடலிலும் இந்த உவமையை பாவித்துள்ளார்.தகடூர்யாத்திரை ஒரு இழந்தபோன பண்டைய நூல்.எனினும் இதை பற்றிய மேற்கோள்கள் மற்றநூல்களில் உண்டு.குறிப்பாக இணைக்குறள் ஆசிரியப்பா 8. இந்த எடுத்துக் கூறுகள்அதியமானுக்கும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் இடையே நடை பெற்ற போரை,இருதலை புள் தமக்கிடையில் சண்டை இடுவது போல ஒப்பிடுகிறது[புறத் திரட்டு/785].இதுஎன்னத்தை காட்டுகிறது என்றால் தமிழர்கள் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கும்இந்த பறவைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்பதும் அவர்களுக்கு இந்த பறவையைநன்றாக தெரியும் என்பதும் ஆகும்.
"யாமேபிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,இரு தலைப் புள்ளின் ஓர்உயிரம்மே"[அகம் 12]
"என் இவைஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று போர்எதிர்ந்தற்றாப் புலவல்நீ கூறின்என் ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது? "[கலித்தொகை 89]
"வினவுதி யாயின் கேண்மதி சினவாது ஒருகுடர் படுதர ஓர்இரை தூற்றும்இருதலைப் புள்ளின் ஓர்உயிர் போல அழிதரு வெகுளி தாங்காய்"[புறத் திரட்டு/785]

சுமேரியன் பெண்தெய்வமான ஈனன்ன[ Inanna]-  காளி ஒப்பீடு :

தாய் தெய்வ வழிபாடு என்பது மிகவும்தொன்மையானதுஉலகின் பல பகுதிகளிலும் அதுஇருந்தது என்று சொல்லும் தொன்மையானஅடையாளங்கள் பல இருக்கின்றன.ஆனால்அவற்றின் ஆரம்பம் இந்தியாவிலும்அதிலும்குறிப்பாக தமிழ் மரபிலும் இருந்தன.
இந்தப் பிரபலமான காளியின் உருவத்தில் ஒருகையில் பாசக்கயிறைக் காணலாம்.அது ஈனன்னகையில் உள்ளது போல் இருக்கிறது.மேலும் கைகள்உயரத் தூக்கி வைத்திருப்பதையும்   காணலாம்
சுமேரிய மக்கள் செமிட்டிக்இனஞ் சாராதவர்கள்[non-Semitic people].பொதுவாக பருத்துக் குட்டையானவர்கள்,மேலும் மூக்கு கண் அமைப்புகளும் நன்றாகவே தென்இந்திய திராவிட தமிழருடன் ஒத்து போகிறது .சுமேரியபெண்கள் சேலை போன்று இடது தோலில் இருந்துதுணியால்  உடம்பை போர்கிறார்கள்.ஆண்கள் வேட்டிமாதிரி இடுப்பில் கட்டுகிறார்கள்.தமது இடுப்புக்குமேல் பகுதியை  வெறுமையாகவிட்டுவிடுகிறார்கள்.இவை எல்லாம் மேலும் திராவிடதமிழருடன் ஒத்து போகிறது.
பண்டைய கடலோடிகள் தாம் நடு கடலில் இருந்தபோது கரையை/தரையை கண்டுபிடிக்க பறவைகளைபயன்படுத்தினார்கள்.என்றாலும்   திசைகாட்டிகள் பயனுக்கு வந்த பின்இம்முறை கைவிடப்பட்டதுஇப்படியான மிகவும் சுவாரசியமானபறவைகளைப் பற்றிய குறிப்புகளை சுமேரியன் ,சிந்து சம வெளி,தமிழ்இலக்கியங்களில் காணக்கூடியதாகவும் உள்ளது.சிந்து சம வெளி முத்திரையில்படகு ஒன்று தனது இரு பறவைகளை இரு முனையிலும்கொண்டுள்ளது.மேலும் வைஷ்ணவ மகான்கள் [ஆழ்வார்கள்இந்தஉவமையை தமது பாடலில் புகுத்தி உள்ளார்கள்.முதலாவதாக சுமேரியன்பண்பாட்டை பார்ப்போம்.
மனித இனத்தை அழிக்கவென கடவுள் அனுப்பிய பெருவெள்ளத்தில்இருந்து உயர் தப்பி பிழைத்தவர் 'உத்தனபித்தம்’[Utnapishtim] என்றமாமனிதர்ஆகும்.மனித இனத்துடன் கோபம் கொண்ட என்லில்[God Enlil]என்ற சுமேரிய கடவுள் அவர்களை முற்றாக பெரும் வெள்ளத்தில் அளிக்கதீர்மானித்ததாக  கில்கமேஷ் [Gilgamesh] காவியம் கூறுகிறது.கில்கமேஷைஒரு படகு கட்டுமாறு உத்தன்பித்தம் கூறினான்.வெள்ளம் தணிய அவன் ஒருபுறா,ஒரு  தூக் கணாங் குருவி,ஒரு அண்டங் காக்கை[காகம்ஆகியபறவைகளை கரையை/தரையை கண்டுபிடிக்க அனுப்பினான் எனகுறிக்கப்பட்டுள்ளது

1931 இல் நில அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சம வெளி முத்திரைஇரண்டு முனையிலும் கப்பல் தளத்தில் பறவைகள் இருப்பதைகாட்டுகிறது.இந்த பறவைகள் கடற்பயணத்திற்கு உதவ பயன்படுத்தப்பட்டது.பறவைகளை விடுவிற்கும் போது,அவை தரையை கண்டால் திரும்பி வராது.இது அவர்களுக்கு தரையை கண்டுபிடிக்க உதவியது.

ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த குலசேகர ஆழ்வார் விஷ்ணுவிற்கு ஒரு பாட்டுபாடுகிறார்.அதில் தரையை கண்டுபிடிக்காத பறவை போல் நானும் மீண்டும்ஆண்டவனின் மலர் பாதத்திற்கு  வருகிறேன் என்கிறார்இன்னும் ஒரு புதுமைஎன்னவென்றால்,அவரும் மற்றவர்களும்[தமிழ் துறவிகளும்குறிப்பிடுவதுகாகத்தை மட்டுமே.இது சுமேரியாவில்  அண்டங் காகத்தை[காகத்தைதிசையை கண்டுபிடிக்க பயன் படுத்தியதுடன் ஒத்து போகிறதுஇதோ அந்தபாடல்:
‘’வெங்கண்திண் களிறு அடர்த்தாய்வித்துவகோட்டம்மானே
எங்குப் போய் உய்கேன்உன் இணையடியே அடையல் அல்லால்
எங்கும் போய்க் கரை காணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும்
வங்கத்தின் கூம்பு ஏறும் மாப் பறவை போன்றேனே’’
(பெருமாள் திருமொழிகுலசேகர ஆழ்வார்/நாலாயிர திவ்ய பிரபந்தம்/691)
பயங்கரமான கண்களையுடைய வலிய (குவலயாபீடமென்னும்யானையைகொன்றவனே!வித்துவக்கோடு அம்மானே!;உனது தாமரை பாதங்களையே(நான்சரணமடைவதல்லாமல் வேறு யாரிடத்திற்போய் அடைக்கலம்பெறுவேன்?அலையெறிகிற கடலினிடையிலே நான்கு திக்கிலும் போய்ப்பார்த்து எங்கும் கரையைக் காணாமல் திரும்பி வந்து (தான் முன்பு)பொருந்திய மாக்கலத்தினுடைய பாய்மரத்தின் மீது சேர்கிற பெரியதொருபறவையை போல் ஒத்து நிற்கிறேன் என்கிறது.

0 comments:

Post a Comment