தென்றல் காற்றே தூது செல்லாயோ..?


தென்றல் காற்றே  மெல்ல வீசு
தென்றல் காற்றே
மெல்ல வீசு
கோபம் இன்றி என்னை கிள்ளி
முத்தம் ஒன்று தந்து போ
கவலை உள்ளமும் உடை பட்டு
கண்ணீர் துளிகள் வெளியேறட்டும்

தில் தில் மனதில் ஏதோ ஒரு தில்
மண்வாசனையுடன் பூத்தது ஒரு காதல்
சிரிச்சு சிரிச்சு பேசி
மன மெல்லாம் குலுங்க செய்தவள்
பச்சை நிற சேலை கட்டிகிட்டு
பசுமையாக இழுத்து மயக்கியவள்

அந்தி சாயும் நேரத்திலே
அம்மன் கோயில் வீதியிலே
என் வருகைக்காக காத்திருந்து
கண் சிமிட்ட மறந்து இருப்பாள்
உயிரோட உயிர் சேர்ந்து
என் கூட வாழுறப்போ,
மிடுக்கான பார்வையிலே
சொடுக்கு போட்டதுமே
எங்கள் விழிகள்
காதலில் மயங்கி இருக்கையிலே
காதல் புரியாத அவன் அப்பன்
விடலை பொடியங்களை
கூட்டி வந்து
உசிர கொல்லும் வார்த்தைபேசி
அவளை இழுத்துச் சென்றனர்
கண்ணெதிரே காதல் இருந்தும்,
கண்ணுக்கெட்டா தூரத்துல போனாலும்
சொப்பனத்தில் சேர்வோமோ
தூது செல்ல யாரும் இல்லை
துரதிஷ்டசாலி நானே!
ஆக்கம்-காலையடி,அகிலன் 

0 comments:

Post a Comment