இவ்வாரம் -சினிமாத் துளிகள்


சாமி 2’
விறுவிறுப்பாக இருக்கும் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்,பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள சாமி 2   திரைப்படம் சாமி செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீமராஜா
சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் நடித்துள்ள சீமராஜா திரைப்படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

சர்கார்’
தீபாவளி விருந்தாக வருகிறது, விஜய் நடிக்கும் 62-வது படம். ‘சர்கார்’ இத்துடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார்  மற்றும் ராதாரவி, யோகி பாபு, பழ கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு நடித்தார்கள்.

  'பேட்ட'
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்திற்கு , 'பேட்ட' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் திரிஷா நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'அடங்கமறு'
காவல்துறை அதிகாரியாக ஜெயம் ரவியின் 'அடங்க மறு' திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.இப்படத்தில் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்
 இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

'வடசென்னை
வெற்றிமாறன் இயக்கத்தில்  நடிகர் தனுஷ், இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் ’வடசென்னை’. வடசென்னையை மூன்று விதத்தில் காட்ட முடிவெடுத்த வெற்றிமாறன், அதை  மூன்று பாகங்களாக இயக்கியுள்ளார். வடசென்னை’ தீபாவளி விருந்தாக வருகிறது.

தொகுப்பு:கயல்விழி ,பரந்தாமன் .
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭0 comments:

Post a Comment