தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகள் /Tamil movie songs lyrics

படம் பாசம்(1962)

பாடல்- பால் வண்ணம் பருவம் கண்டு

பாடல் ஆசிரியர் - கண்ணதாசன்

இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடியவர்கள்:பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி

 

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

 

(இசை)

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

 

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

 

பெண்: கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா

கார் வண்ணக் கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

கார் வண்ணக் கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

பூ..வண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா

 

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

 

ஆண்: மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா

மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா


பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்


பெண்: பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை கெட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா

பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை கெட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா

 

ஆண்: நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா

 

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

 

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.


🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻


படம் -புதிய பறவை(1964)

பாடல்- பார்த்த ஞாபகம் இல்லையோ

பாடல் ஆசிரியர் -கண்ணதாசன்

இசை -எம்.எஸ்.வி

பாடியவர்-p.சுசீலா 

 

F)ஆஹா

F)ஆஹா

F)ஆஹா

 

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

மறந்ததே எந்தன் நெஞ்சமோ

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

 

அந்த நீல நதிக்கரை ஓரம்

நீ நின்றிருந்தாய் அந்திநேரம்

 

அந்த நீல நதிக்கரை ஓரம்

நீ நின்றிருந்தாய் அந்திநேரம்

நான் பாடி வந்தேன் ஒரு ராகம்

நாம் பழகி வந்தோம் சிலகாலம்

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

 

இந்த இரவைக் கேளது சொல்லும்

அந்த நிலவைக் கேளது சொல்லும்

 

இந்த இரவைக் கேளது சொல்லும்

அந்த நிலவைக் கேளது சொல்லும்

உந்தன் மனதைக் கேளது சொல்லும்

நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்

 

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

 

அன்று சென்றதும் மறந்தாய் உறவை

இன்று வந்ததே புதிய பறவை

 

அன்று சென்றதும் மறந்தாய் உறவை

இன்று வந்ததே புதிய பறவை

எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை

நாம் சந்திப்போம் இந்த நிலவை

 

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

மறந்ததே எந்தன் நெஞ்சமோ

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ


👁👁👁👁👁👁👁👁👁👁👁👁

பாடல்:முத்துக்கு முத்தாக /Muthukku Muthaga

பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர்கள்: கன்டாசாலா

படம்:அன்புச்சகோதரர்கள்/Anbu Sagodharargal 

ஆண்டு:(1973)

முத்துக்கு முத்தாக

சொத்துக்கு சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்

கண்ணுக்கு கண்ணாக

அன்பாலே இணைந்து வந்தோம்

ஒண்ணுக்குள் ஒண்ணாக (2)

 

தாயாரும் படித்ததில்லை

தந்தை முகம் பார்த்ததில்லை

தாலாட்டு கேட்டதன்றி

ஓர் பாட்டும் அறிந்ததில்லை (2)

 

தானாக படித்து வந்தான்

தங்கமென வளர்ந்த தம்பி (2)

 

தள்ளாத வயதினில் நான்

வாழுகிறேன் அவனை நம்பி

 

முத்துக்கு முத்தாக

சொத்துக்கு சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்

கண்ணுக்கு கண்ணாக

அன்பாலே இணைந்து வந்தோம்

ஒண்ணுக்குள் ஒண்ணாக

 

அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம்

வேதமெனும் தம்பியுள்ளம் (2)

 

அன்னையென வந்த உள்ளம்

தெய்வமெனக் காவல் கொள்ளும் (2)

சின்னத்தம்பி கடைசித்தம்பி

செல்லமாய் வளர்ந்த பிள்ளை (2)

 

ஒன்றுப்பட்ட இதயத்திலே

ஒரு நாளும் பிரிவு இல்லை

 

முத்துக்கு முத்தாக

சொத்துக்கு சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்

கண்ணுக்கு கண்ணாக

அன்பாலே இணைந்து வந்தோம்

ஒண்ணுக்குள் ஒண்ணாக

 

ராஜாக்கள் மாளிகையும்

காணாத இன்பமடா

நாலுகால் மண்டபம்போல்

நாங்கள் கொண்ட சொந்தமடா (2)

 

ரோஜாவின் இதழ்களைப் போல்

தீராத வாசமடா (2)

 

நூறாண்டு வாழவைக்கும்

மாறாத பாசமடா

 

முத்துக்கு முத்தாக

சொத்துக்கு சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்

கண்ணுக்கு கண்ணாக

அன்பாலே இணைந்து வந்தோம்

ஒண்ணுக்குள் ஒண்ணாக

👱👱👱👱👱👱👱👱👱👱👱👱👱


படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்

Alibabavum 40 Thirudargalum(1956)

பாடல்:மாசிலா உண்மை காதலே/

masila unmaik kathale 

பாடலாசிரியர்: A.மருதகாசி

இசை: தக்ஷ்ணமூர்த்தி

பாடியவர்கள் ஏ.எம்.ராஜா மற்றும் பானுமதி.

 

ஆண்: மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

பெண்: பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

ஆண்: கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

(இசை)

ஆண்: நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே

பெண்: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

BitMusic

ஆண்: நெஞ்சிலே நீங்கிடாதோ கொஞ்சும் இன்பமே

பெண்: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

பேசும் வார்த்தை உண்மை தானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

மாசிலா உண்மை காதலே

மாறுமா செல்வம் வந்த போதிலே

ஆண்: கண்ணிலே மின்னும் காதலே

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

(இசை)

ஆண்: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பெண்: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

BitMusic

ஆண்: உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பெண்: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

ஆண் பெண் இருவரும்:

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாறுமோ….

💕💕💕💕💕💕💕💕💕💕

திரைப்படம் : மரகதம்/ maragatham (1959)

இசை: S M சுப்பையா நாயுடு

பாடியவர்கள்: J P சந்திரபாபு, ஜமுனா ராணி

பாடல் ஆசிரியர்: R. பாலு

 

* OPENING MUSIC **

ஆண்: குங்குமப் பூவே..

கொஞ்சு புறாவே..

குங்குமப் பூவே....

கொஞ்சு புறாவே....

தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்

பொங்குது தன்னாலே

** INTERLUDE **

பெண்: போக்கிரி ராஜா..

போதுமே தாஜா..

போக்கிரி ராஜா....

போதுமே தாஜா....

பொம்பள கிட்டே ஜம்பமா வந்து

வம்புகள் பண்ணாதே

** MUSIC **

பெண்: தந்தன தானா சிந்துகள் பாடி

தந்திரம் பண்ணாதே..

** INTERLUDE **

பெண்: தந்தன தானா சிந்துகள் பாடி

தந்திரம் பண்ணாதே..

நீ மந்திரத்தாலே மாம்பழத் தானே

பறிக்க எண்ணாதே

மந்திரத்தாலே மாம்பழத் தானே

பறிக்க எண்ணாதே

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி

போக்கிரி ராஜா...

போதுமே போதுமே போதுமே போதுமே

போதுமே தாஜா...

ஆண்: குங்கும குங்கும குங்கும குங்கும

குங்குமப் பூவே..

கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும்

கொஞ்சு புறாவே..

** INTERLUDE **

ஆண்: ஜம்பர தட்டும் தாவணி கட்டும்

சலசலக்கையிலே...

** INTERLUDE **

ஆண்: ஜம்பர தட்டும் தாவணி கட்டும்

சலசலக்கையிலே

என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு

என்னமோ பண்ணுதடி

என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு

என்னமோ பண்ணுதடி

குங்கும குங்கும குங்கும குங்கும

குங்குமப் பூவே..

கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும்

கொஞ்சு புறாவே..

பெண்: சித்திரப் பட்டு சேலையைக் கண்டு

உனக்கு தெரியுமா...

** INTERLUDE **

சித்திரப் பட்டு சேலையைக் கண்டு

உனக்கு தெரியுமா..

நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்

எனக்குப் புரியுமா..

நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்

 

எனக்குப் புரியுமா..

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி

போக்கிரி ராஜா..

போதுமே போதுமே போதுமே போதுமே

போதுமே தாஜா..

** MUSIC **

ஆண்: செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்

சம்மதப்பட்டுக்கனும்...

** INTERLUDE **

ஆண்: செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்

சம்மதப்பட்டுக்கனும்...

தாளமும் தட்டி மேளமும் கொட்டி

தாலிய கட்டிக்கனும்

தாளமும் தட்டி மேளமும் கொட்டி

தாலிய கட்டிக்கனும்

குங்குமப் பூவே..

கொஞ்சு புறாவே..

தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்

பொங்குது தன்னாலே..

**CONCLUDING MUSIC **

🍀🌸🍀🌸🍀🌸🍀🌸

திரைப்படம் : பலே பாண்டியா (1962)

பாடல்:அத்திக்காய் காய் காய் / Athikai Kaai Kaai

இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடியவர்கள்: TMS,P.சுசீலா, PBS,ஜமுனாராணி

பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்

 

பெண் : அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப் போல் பெண்ணல்லவோ

நீ என்னைப் போல் பெண்ணல்லவோ

** INTERLUDE **

ஆண் : அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ

என்னுயிரும் நீ அல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே...

 

** INTERLUDE **

பெண் : ....

....

** MUSIC **

பெண் : கன்னிக் காய் ஆசைக் காய்

காதல் கொண்ட பாவைக் காய்

அங்கே காய் அவரைக் காய்

மங்கை எந்தன் கோவைக் காய்..

** INTERLUDE **

பெண்:கன்னிக் காய் ஆசைக் காய்

காதல் கொண்ட பாவைக் காய்

அங்கே காய் அவரைக் காய்

மங்கை எந்தன் கோவைக் காய்

ஆண் : மாதுளங்காய் ஆனாலும்

என்னுளங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ..

பெண் : இத்திக்காய் காயாதே

என்னைப் போல் பெண்ணல்லவோ..

 

** INTERLUDE **

பெண் : ஓஒஓஒ ஓஓ ...

ஆஅஆஅ ஆஆ ...

** MUSIC **

 

ஆண் : இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக் காய்..

** INTERLUDE **

ஆண் : இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக் காய்..

பெண் : உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இருவர்: அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ..

** MUSIC **

 

இருவர்: ஹா ஹா

ஹா ஹா

பெண் : ஏலக் காய் வாசனை போல்

எங்கள் உள்ளம் வாழக் காய்

சாதிக் காய் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக் காய்..

** INTERLUDE **

பெண் : ஏலக் காய் வாசனை போல்

எங்கள் உள்ளம் வாழக் காய்

சாதிக் காய் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக் காய்

ஆண் : சொன்னதெல்லாம் விளங்காயோ

தூது வழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இருவர்: அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ..

** MUSIC **

இருவர்: ஹா ஹா

ஹா ஹா

ஆண் : உள்ளமெலாம் மிளகாயோ

ஒவ்வொரு பேர் சுரைக்காயோ

வெள்ளரிக் காய் பிளந்தது போல்

வெண்ணிலவே சிரித்தாயோ..

** INTERLUDE **

ஆண் : உள்ளமெலாம் மிளகாயோ

ஒவ்வொரு பேர் சுரைக்காயோ

வெள்ளரிக் காய் பிளந்தது போல்

வெண்ணிலவே சிரித்தாயோ

பெண் : கோதை என்னை காயாதே

கொற்றவரங்காய் வெண்ணிலா

ஆண் : இருவரையும் காயாதே

தனிமையிலேங்காய் வெண்ணிலா

நால்வரும்: அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ

ஆஹாஹா..

ஓஹோஹோ.. ஹோ ஹோ

ம்ஹும் ஹும்...

 

பெண் : அத்திக்காய்

காய் காய் ஆலங்காய்

வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப் போல்

பெண்ணல்லவோ

 

பெண் : நீ என்னைப்

போல் பெண்ணல்லவோ

 

ஆண் : அத்திக்காய்

காய் காய் ஆலங்காய்

வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ

 

ஆண் : என்னுயிரும்

நீ அல்லவோ அத்திக்காய்

காய் காய் ஆலங்காய்

வெண்ணிலவே

 

பெண் : …………………..

 

பெண் : { கன்னிக் காய்

ஆசைக் காய் காதல்

கொண்ட பாவைக் காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய் } (2)

 

ஆண் : மாதுளங்காய்

ஆனாலும் என் உள்ளங்காய்

ஆகுமோ என்னை நீ காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ

 

பெண் : இத்திக்காய்

காயாதே என்னைப்

போல் பெண்ணல்லவோ

 

பெண் : ……………………..

 

ஆண் : { இரவுக்காய்

உறவுக்காய் ஏங்கும்

இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும்

காய் நேரில் நிற்கும்

இவளைக் காய் } (2)

 

பெண் : உறவங்காய்

ஆனாலும் பருவங்காய்

ஆகுமோ என்னை நீ

காயாதே என்னுயிரும்

நீயல்லவோ

 

ஆண் & பெண் : அத்திக்காய்

காய் காய் ஆலங்காய்

வெண்ணிலவே இத்திக்காய்

காயாதே என்னுயிரும் நீ

அல்லவோ

 

ஆண் & பெண் : ……………….

 

பெண் : { ஏலக்காய் வாசனை

போல் எங்கள் உள்ளம்

வாழக் காய் ஜாதிக் காய்

பெட்டகம் போல் தனிமை

இன்பம் கனியக் காய் } (2)

 

ஆண் : சொன்னதெல்லாம்

விளங்காயோ தூது வழங்காய்

வெண்ணிலா என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

 

ஆண் & பெண் : அத்திக்காய்

காய் காய் ஆலங்காய்

வெண்ணிலவே இத்திக்காய்

காயாதே என்னுயிரும் நீ

அல்லவோ

 

ஆண் & பெண் : ……………….

 

ஆண் : { உள்ளமெல்லாம்

மிளகாயோ ஒவ்வொரு

பேர் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் கிளர்ந்தது

போல் வெண்ணிலவே

சிரித்தாயோ } (2)

 

பெண் : கோதை

என்னை காயாதே

கொற்றவரங்காய்

வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலேங்காய்

வெண்ணிலா

 

ஆண் & பெண் : அத்திக்காய்

காய் காய் ஆலங்காய்

வெண்ணிலவே இத்திக்காய்

காயாதே என்னுயிரும் நீ

அல்லவோ

 

ஆண் & பெண் : ……………….

🍋🥭🍐🍋🍋🥭🍐🍋


0 comments:

Post a Comment