தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :80

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
(முடிவுரை:01)
திராவிடர்களின் தோற்றுவாய்,ஆஃப்பிரிக்காவுடன் அவர்களின் தொடர்பு,ஆரியர்களின் படையெடுப்பு,தெற்கு இந்தியாவிற்கு அவர்களின் குடிபெயர்வு பற்றி இன்று பல கோட்பாடுகளும் மற்றும் ஆய்வுகளும் விளக்கம் அளிகின்றனஅந்த விளக்கம் மூலம்,திராவிடர்கள் சிந்து சம வெளியின் ஆரம்ப நிறுவனர் என்பதையும்,இந்தியா உப கண்டத்தின் தொல்குடி மக்கள் இவர்களே என்பதையும்,இவர்களின் மூலத்தை மூல-ஈலமைட்டு,சுமேரியா,மூல-சஹாராவில்[Proto-Elamite, the Sumerian, the Proto-Saharan] தேடவேண்டும் என்பதையும்,எடுத்து கூறுகிறது.எல்லா கோட்பாடுகளும் ஆய்வுகளும் அவை எந்த விளக்கத்தை கொடுத்தாலும் எல்லாம் திராவிடர் ஒரு கம்பீரமான திறமையான இனம் எனபதில் ஒன்றாய் உள்ளன.
ஆஃப்பிரிக்காவுடனான திராவிடர்களின் தொடர்பு இலகுவில் நிராகரிக்கக் கூடியது அல்ல,அது மட்டும் அல்ல அதில் ஆதாரம் இல்லாமலும் இல்லை.கோட்ப்ரே  ஹிக்கின்ஸ்,தனது Anaclypsis என்ற முதன்மை  ஆக்கத்தில்[a lengthy two-volume treatise written by religious historian Godfrey Higgins,and published after his death in 1833] ஹெரோடோடஸ்[Herodotus] என்ற கிரேக்க வரலாற்று அறிஞரின் கதை ஒன்றை எடுத்து கூறுகிறார்.அங்கு கருப்பு இனத்தவர்களின் நாட்டிற்கான ஹெரோடோடஸின் பிரயான அனுபவத்தை கூறும் போது,"ஹெரோடோடஸ் கிரேக்க நாட்டிற்கு திரும்பிய பின் அவரை சூழ்ந்த மக்கள் அவரை பார்த்து எங்களுக்கு எதியோப்பியா என அழைக்கப்படும் கருப்பு இன மக்கள் வாழும் அந்த சிறந்த பெரும் நாட்டைப்பற்றி கூறுங்கள் எனக்கேட்டதற்குஹெரோ
டோடஸ் பதில் அளிக்கும் போது,அங்கு இரண்டு பெரும் சிறப்பு வாய்ந்த எதியோப்பியா நாடுகள் உண்டு என்றும்,ஒன்று இந்தியாவிலும் மற்றது எகிப்திலும் என்றார்"என குறிப்பிட்டு உள்ளார்.ஆஃப்பிரிக்கா கண்டத்திலும் தென் கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதியிலும் பரவியிருந்த இந்த கருப்பு மக்களின் சிறப்பு மிகுந்த நாகரிகத்தினை ஒன்றாக பார்க்கும் பயனிகளினதும் வரலாற் றாசிரியர்களினதும் குறிப்புகளில் இது முதலாவதும் அல்ல,இறுதியும் அல்ல.திராவிடர்கள் பொதுவாக கருப்பு நிற உடல் கட்டமைப்பையும் கருத்த முடியையும் கண்ணையும் பெரிய நெற்றியையும் கொண்டு உள்ளார்கள்.இப்படி யாக ஆஃப்பிரிக்கருடன் ஒத்த உடல் கட்டமைப்பை,தோற்றத்தை திராவிடர்கள் கொண்டு இருப்பதால்,இவர்கள் ஆஃப்பிரிக்காவை தோற்றுவாயாக கொண்டவர்கள் என கருதுகிறார்கள்.என்றாலும் உடல் பண்பின் ஒற்றுமைகள் எல்லா நேரமும் ஒரு நெருங்கிய தொடர்பை காட்டாது.ஏனென்றால்,ஒரு இனத்தின் தோலின் நிறம் சூரிய ஒளியின் பிரகாசமான நிலைமைக்கு ஏற்றவாறு காலப்போக்கில் மாற்றம் அடைகிறது என நவீன மரபியலாளர்கள்[Modern geneticists] பரிந்துரைகிறார்கள்.இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன.ஒன்று காக்கேசியன்[Caucasian] எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலியன்[Mongolian] எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட்[Negroid] என்கிற கருப்பினம்.மேற்கண்டவாறு மனித இனப்பாகுபாடு இருப்பினும்,தற் காலத்தில் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது.இனத்துக்கு இனம் கண்,வாய்,மூக்கு ஆகியவற்றின் அமைப்பு மாறுபட்டு உள்ளது.தலை அமைப்பும் மயிரிழை அமைப்பும் கூட வேறுபட்டுள்ளன.பொதுவாக நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராலாய்ட்[Australoid] என்று துணை இனமாக பிரித்துக்
காட்டுகின்றனர்.உலக மக்கள் அனைவரும் ஆஃப்பிரிக் காவில் இருந்து வந்தவர்களே.காலப்போக்கில் அந்ததந்த காலநிலைக்கு ஏற்ப பல்லாயிரம் வருட கால பரிணாம வளர்ச்சி காரணமாக வேறுபட்ட உடல் தோற்றங்களை,தோல் நிறத்தை தழுவிக் கொண்டது.இதனால் மனித இன மானது வெள்ளையினம்,கருப்பினம்,சீன இனம்,திராவிட இனம் என்றெல்லாம் வேறுபட்டன.திராவிடர்களின் ஆப்பிரிக்கன் ஒத்த தன்மை இரண்டு இடங்களிலும் நிலவிய ஓரளவு ஒரே விதமான கால நிலையின் விளைவாகும் . அது மட்டும் அல்ல செனிகல்மாலிநைகர்சாட்சூடான்எதியோப்பியாசோமாலியா போன்று தென் இந்தியாவும் அதே அட்சரேகையில்[latitude] இருப்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இதை விட ஆஃப்பிரிக்காவின் கிழக்கு கரை யையும் தென் இந்தியாவையையும் பிரிப்பது இந்தியப் பெருங்கடல் அல்லது இந்து சமுத்திரம் மட்டுமே.மேலும் இந்தியா உப கண்டம் கிழக்கு ஆஃப்பிரிக்காவுடன் முன்னர் இணைக்கப்பட்டு இருந்ததாக புவியியலாளர்கள்[geologists] முன் மொழிகிறார்கள்.கருத்த ஆஃப்பிரிக்கர்களினதும் திராவிடர்களினதும் மொழி ஒற்றுமை பல அறிஞர்களால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.இந்த மொழி ஒற்றுமை நவீன ஆஃப்பிரிக்க மொழியில் மட்டும் இன்றி பண்டைய எகிப்து மொழியிலும் காணப்பட்டுள்ளது.உதாரணமாக, கலாநிதி  ..அறவாணன்,கலாநிதி கிள்ய்டே அஹமத் வின்டர்ஸ், கலாநிதி  U. P. .உபத்யாய[Dr Aravaanan,Dr Clyde Winters, Dr. U. P.  Upadhyaya] போன்றோர்கள் ஆஃப்பிரிக்கர்களுக்கும் திராவிடர்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி விரிவாக எழுதியுள்ளார்கள்.என்றாலும் இவர்கள் அனைவரும் 1970 ஆண்டளவில் தான் எழுதி உள்ளதுடன் இவர்கள் எவருமே மரபியலாளர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் நைகர்-கொங்கோ குடும்பத்தைச் சேர்ந்த ஆஃப்பிரிக்க மொழிகளில்[Niger-Congo family of languages] இருந்து திராவிட மொழி தோன்றியதாக ஆஃப்பிரிக்க-திராவிட கருது கோள் வாதாடுகிறது.ஆகவே திராவிட பண்பாட்டுடன் தொடர்புடைய பெரும்பாலான கலாச்சார மற்றும் தொழில்பநுட்பங்கள் ஆஃப்பிரிக்காவை மூலமாக கொண்டவை என்கிறது.இதனால் சில ஆய்வாளர்கள் இந்தியர்களை,இந்தோ-ஆஃப்பிரிக்கன்[Sudroid] இனம் என அழைக்கிறார்கள்.செனிகல் ஜனாதிபதி லெப்போல் சேடர் செங்கோர்[Leopold Sedar Sengkor],உலகத் தமிழாராய்ச்சி நிறுவன கருத்தரங்கில் 23ம் திகதி மே  மாதம்,1974 விரிவுரை நடத்தும் போது,அவர் தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் முந்தய வரலாற்று அறிஞர்களை நோக்கி இந்து சமுத்திரம் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே தோன்றி இருந்தால் ஒழிய மற்றும் படி கிழக்கு ஆஃப்பிரிக்காவிற்கும் தென் இந்தியாவிற்கும் இடைப்பட்ட இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சி செய்து அங்கு புதைந்து கிடைக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று.வேண்டு கோள் விடுத்தார்.இது அதிகமாக கடற்கோள் மூலம் கடலின் அடியில் மூழ்கிய ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென் னாஃப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்ட லெமூரியா அல்லது குமரி கண்டம் என  இலக்கியங் களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் ஒரு நீண்ட நிலப்பரப்பை அவர் குறிப்பிட்டு இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.மனித இனத்தின் கதை எமது மரபணுக்களில் குறியீட்டு சொல்[code word] மூலம் எழுதப்பட் டுள்ளது.மரபணு (gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும்.இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப் படுகின்றன.மரபுப் பண்புகளுக்கு மரபணுதான் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.மரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) என்பது மரபணுத்தொடரில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அளவிலான மாற்றங்களைக் குறிக்கும்.இது மரபணு விகாரம் எனவும் அழைக்கப்படுகின்றது.மற்றும் மரபியல்படி,மரபணுத்தொகை (Genome) என்பது ஒரு உயிரினத்தின் முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது.இது உயிரினத்தைப்பற்றிய அனைத்து மரபியல் தகவல்களையும் குறிக்கிறது.இன்று நாம் மரபணுவை வாசிக்கக்கூடியதாக உள்ளது.ஆகவே இதுவரை கிடைக்கப்பெற்ற எல்லா தொல்பொருள் தவல்களையும் மொழியியல் ஆய்வுகளையும் இந்த புதிய  டிஎன்ஏ[DNA] ஆய்வுகளுடன் இணைத்து ஒரு வரலாறு எடுத்துரைத்தால் அதில் ஒரு உண்மை அல்லது அர்த்தம் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து,ஒரே ஆரம்ப மொழியை பேசி,ஒருமித்த கலாச்சாரம்,கருத்தாக்கம், மரபு,நம்பிக்கை,ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம்.இப்படி ஆரம்பித்த இனம்,பிறகு வெவ்வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும்,அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால்,கடைசி வரை அவர்கள் சகோதரர்களே/ஒரே இனமே.பொதுவாகக் கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர்,பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள்.இவர்கள் 1]கட்டையான மக்களாக பொதுவாக 5 அடி 4 அங்குல [1.626 மீட்டர்] உயரத்தையும்,2]தோல்,பழுப்பு நிறத்தில் இருந்து கிட்டத்தட்ட கருப்பு நிறம் வரையும்.3] அதே போல கண் கருப்பில் இருந்து இருண்ட பழுப்பு வரையும்,4]பொதுவாக நீண்ட தலையோட்டையும் ,நீண்ட குறுகிய முகத்தையும் அகன்ற நெற்றியையும்,5] கருப்பு அல்லது இருண்ட பழுப்பு முடியையும்,6]நேரான, நீண்ட,குறுகிய மூக்கையும்,7]இரத்த வகைகள் பொதுவாக O (37 சதவீதம்), A (22 சதவீதம்), B (33 சதவீதம்).and AB (7 சதவீதம்) ஆகவும் திராவிடர்களின் பொதுவான இனப்பாகுபாடுடைய பண்புகள் அமைகின்றன.

தமிழர்கள்,ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது என மரபு வழித் தமிழர் வரலாறு கூறுகிறது கடல் கொந்தளிப்பில் இரு தரம் தமது நாட்டை பறி கொடுத்தார்கள் என்றும்,ஒவ்வொரு தடவை யும் மன்னன் புது தலை நகரத்தை நிறுவி அடுத்தடுத்து மூன்று சங்கங்களில்-தலைச்சங்கம்,இடைச்சங்கம்,கடைச் சங்கம்-தமிழை வளர்த்தான் என மேலும் கூறுகிறது.பண்டைய நாகரிகங்களான சுமேரிய நாகரிகத்துடனும் சிந்து சம வெளி நாகரிகத்துடனும் தமது வரலாற்றை ஒப்பிட்டு பார்க்க அல்லது இணைக்க இந்த செவிவழி கதையே அவர் களை தூண்டியது எனலாம்.ஹிராஸ் பாதிரியார்[Father Heras] சிந்து சம வெளி மக்களை திராவிடனுடன் அடையாளம் காட்டுகிறார்.1960 இல் இந்த திராவிட அடையாளத்தை நிருவிப்பதற்காக இஸ்காண்டினேவிய[வட ஐரோப்பாவின் ஒரு பகுதியாகும்.டென்மார்க்,நார்வே,ஸ்வீடன்,ஆகிய நாடுகள் இதில் அடங்கும்/Scandinavian] ஆசிய ஆய்வுகள் நிறுவனம் பல அறிவிப்புக்களை செய்தது.இந்த கோட்பாடை ஜப்பானிய வரலாற்றாசிரியரும்,எழுத்தாளரும்,தமிழறி ஞருமான பேராசிரியர் நொபொரு கராஷிமா [Noboru Karashima ] தீவிரமாக ஆதரிக்கிறார்.மேலும் இன்றைய பல நவீன ஆய்வுகள் மொகஞ்சதாரோ ஹரப்பா உட்பட்ட பெரிய நகரங்களை உள்ளடக்கிய பண்டைய சிந்து சம வெளியில் வாழ்ந்த குடி மக்கள் திராவிடர்கள் என ஊகிக்கிறது.பெரும்பாலான தமிழர்கள் தமது தோற்றுவையை கி மு ஆறா யிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  மொகஞ்சதாரோ,ஹரப்பாவில் தேடுகிறார்கள்.எப்படியாயினும் அவர்களின் நம்பிக் கையை உறுதிப்படுத்த,இன்றைய டிஎன்ஏ தொழில்நுட்பத்துடன் ஒரு ஒழுங்கு படுத்திய ஆய்வு தேவைபடுகிறது..

5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த,ஹரப்பா காலத்தை சேர்ந்த நாலு எலும்பு கூடுகள் வடமேற்கு இந்தியாவில், இன்றைய அரியானா மாநிலத்தில்,ராகிகர்ஹியில்[ Rakhigarhi] உள்ள பண்டைய  இடுகாடு ஒன்றில் 23 ம் திகதி,தை மாதம்,2015 முதல் மேற்கொண்ட அகழ்வு ஆராச்சியில் தோண்டி எடுக்கப்பட்டன.அந்த இறந்தவர் உடலிலிருந்து கொஞ்சம் திசுக்கள்,எலும்பு மாதிரிகளை சேகரித்து அதில் இருந்து அவரது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களை தடயவியலாளர்கள்[forensic scientists] ஆராய்ந்து பார்த்து,சிந்து வெளி மனித குடியேற்றத்தின் வரலாற்றினதும் தோற்றுவாயினதும் இரகசியத்தை வெளிப் படுத்துவார்கள் என தொல் பொருள் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் . மேலும் ராகிகர்ஹியில் நிலம் மணலாக இருப்பதால் அந்த எலும்பு கூடுகள் நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டு இருக்க சந்தர்ப்பம் அதிகமாக உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே விரைவில் விஞ்ஞான பூர்வமான ஹரப்பானின் அடையாளம் வெளிச்சத்திற்கு வரும் என நாம் எதிர் பார்க்கலாம்.

பன்மொழிப்  புலவரும் பேராசிரியருமான இலங்கையை சேர்ந்த மறைந்த ஆறுமுகம் சதாசிவம்,மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன்[ProfessorA.Sathasivam from Sri Lanka and Dr. Loganathan Muttarayan from Malaysia.], போன்றோர்கள் சுமேரியனின் அடையாளத்தை திராவிடர்களுடன் திவீரமாக பரிந்துரைக்கின்றனர்.அது மட்டும் அல்ல,1975ல் காலமான பேராசிரியருமான வரலாற்றாளருமான கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி[K.A. Nilakantta Sastri,] சுமேரிய, திராவிட ஆலய வழிப்பாட்டின் ஒற்றுமையை எடுத்துக் காட்டினார்.தமிழர்களை அப்படி இல்லாவிட்டால்,திராவிடர்களை மத்திய தரைக்கடல் பகுதியுடன் இணைக்கும் கருதுகோளை இன்னும் ஆராய்ச்சி யாளர் Dr. N லஹோவரி[Dr. N. Lahovary] போன்ற  குறிப்பிடத்தக்க பல அறிஞர்கள் வாதிடுகிறார்கள்.இந்த கோட்பாடை உறுதிப்படுத்த ஒருவர் இரண்டு வழிமுறையில் ஆராய வேண்டி உள்ளது.இந்தியாவில் இருக்கும் ஒத்த மொழி குடும்பங்களுடன் சுமேரிய மொழியை நன்றாக ஆராய்தல் வேண்டும்.இரண்ட்டாவதாக  இன்று கிடைக்கக் கூடிய பண்டைய சுமேரியர்களின் எலும்புக்கூடுகளை உடல் பரிசோதனை செய்து சுமேரியருக்கும் திராவிடருக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கண்டறிய வேண்டும்.

[ஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01: ]

பகுதி 81 வாசிக்க → Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி 81.

பகுதி :81 முடிவுரை தொடரும்

0 comments:

Post a Comment