சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பகுதி:05சித்தர்கள் இறைவனை முழுதும் உணர்ந்தவர்கள். அதனால் அவர்கள் ஆன்மிக வழி நின்று ஞானம்  எய்தினார்கள். ஆரியர்கள் கொண்டுவந்த ஆலய வழிபாடு கண்டு அவர்கள் ஆன்மிகத்தின்  எதிர்காலம் குறித்துப் பயந்தனர். அதுபோலவே இன்று ஆன்மிகம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அவைகளை இங்கு திரட்டித் தருகிறார் கயல்விழி-பரந்தாமன்.

ஆன்மீகம் என்ற பெயரில் அருவருப்பு 

                ஆன்மீகம் என்ற பெயரில் இன்னும் சிலர் செய்யும் செயல்கள், பார்பவருக்கு மனதில் அருவருப்பை உண்டு பண்ணக் கூடியதாக இருக்கும். இந்த பிரிவினர் மண்ணில் உருண்டு புரளுதல், மண்சோறு சாப்பிடுதல், தீமிதித்தல், ஊசி, கம்பி, வேல், திரிசூலம் என கூர்மையான ஆயுதங்களை தன உடம்பில் குதி கொள்ளுதல், நிர்வாண பூசை நடத்துதல், தலையில் தேங்காய் உடைத்தல், அலகு குத்துதல் என்ற பெயரில் உடம்பு முழுவதும் ஊசிகுத்துதல், உயரத்தில் தொங்குதல், தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளுதல், கத்தியால் கீரிக்கொள்தல், ஆடு, கோழி இவைகளை பலியிட்டு கோவிலை சுற்றி ரத்தக் களறி ஆக்குதல், இவைகளை துடிக்கத் துடிக்க கடித்து பச்சை ரத்தம் குடித்தல் போன்ற இன்னும் பல செயல்களை ஆன்மீகம் என்ற பெயரில் செய்துவருவார்கள்.
                 இவர்களுக்கு இந்த ஆன்மீக செயல்களை செய்ய வழி காட்டுபவர்களை பூசாரிகள், கோடங்கிகள் என்று கூறுவார்கள். இந்த பாமரமக்களுக்கு யாகம், ஹோமம், வேள்வி இவைகளில் அவ்வளவாக நம்பிக்கை இராது. இவர்களுக்கு என்று ஒரு கோயில், ஒரு தெய்வம், அதற்கென்று ஒரு வழிபாட்டு முறைகள் உண்டாக்கப்பட்டு வழிபட்டு வருவார்கள். இவர்கள் வணங்கும் தெய்வங்களை குலதெய்வம், கிராம தெய்வங்கள்,எல்லை தேவதைகள் என்று கூறுவார்கள். பெரும்பாலும் இவர்கள் துர்தேவதைகளையே தெய்வங்களாக ஏற்று வழிபாடு செய்து வருவார்கள்.
                   இது போன்ற அருவருப்பான செயல்களை "ஆன்மீகம்" என்ற பெயரில் ஏழை எளிய மக்கள் செய்து வருகின்றார்கள். இதுவும் ஆன்மீகம் அல்ல, என உணருங்கள். இவர்களை பார்த்து என்குரு சிவவாக்கிய சித்தர் கூறுவதை கேளுங்கள்.

தங்கள் தேகம் நோய்பெறின் தனைபிடாரி கோயிலிற்
பொங்கல் வைத்தும் ஆடு, கோழி பூசை பலியை இட்டிட
நங்க சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே -என்கிறார்.
                      உலக மக்களே நீங்கள் நோய் வாய்ப்பட்டு விட்டால் உங்கள் ஊரில் உள்ள அம்மன், பிடாரி, கருப்பு தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி, பன்றி, என முப்பூசை இட்டாலும் அதனால் நோய், பிரச்சனை, கஷ்டம் தீராது. ஆனால் இந்த உயிர்களை கொன்ற பாவம், உங்கள் வாழ்வில் அதிகம் சிரமம், கஷ்டத்தை தரும். மேலும் சரீரமும், வாழ்க்கையும், தேய்ந்து போகும்.

                       இந்த வழிபாட்டு முறைகளும் ஆன்மீகம் அல்ல, இந்த முறையும்  ஞானம் அடைய உதவாது, தன்னையறியும் பக்குவத்தை தராது என புரிந்து கொள்ள வேண்டும்.


மீதி அடுத்த பகுதி 06 வாசிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு..06

ஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / .01..
⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎

tags: anmigam / kadavul / saivam / hindu / anma / siththar / kovil / koyil / puja / thevaram / samayam / kuravar / periyar / vazhipadu / nerththi / thondu / vazhkai / manithan

2 comments:

  1. Hi, I do tһink this is a great website. I stumbledypon іt ;) I may return yet again since I book-marked it.
    Money and freedom is the bеst way to change, maу
    уou be rich and continue to guidee others.

    ReplyDelete
  2. Có thể sẽ phải thay thế linh kiện điện tử trên chúng.

    ReplyDelete