யார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா?

நத்தார் என்றாலே கிறிஸ்மஸ் தாத்தா எங்கே என்று எதிர்பார்க்கும் அளவுக்கு Santha Claus இன்று நத்தாருடன் ஒன்றாகிவிடடார் கிறிஸ்மஸ் தாத்தா.
இந்த Santa Claus எனப்படும் பாத்திரத்துக்கும் நத்தார் தினத்துக்கு என்ன  தொடர்பு என்பது  இன்று  எனது ஆய்வாகும். 

உண்மையில், நாலாம் நூற்றாண்டில், அன்றைய ஜெர்மனி, இன்றைய துருக்கி பிரசேத்தில் Myra  என்னும் ஊரில் வாழ்த்த St Nicholas என்னும் பாதிரியார் தன் இளமைக் காலத்திலேயே விட்டுப் போன அவரது தந்தையாரின் பெரும் அளவிலான செல்வத்திற்கும் அதிபதியானார்., அவர் ஊரில் வறுமையால் வாடும் மக்களுக்கும்,  பெண்பிள்ளைகளுக்கு சீதனப்பணம் இல்லாது அல்லலுறும் பெற்றோர்களுக்கும் தான் யார் என்று காட்டிக்கொள்ளாமலேயே பொருட்களையும், தங்க நாணயங்களையும் வீட்டினுள் வீசிவிட்டுப்  போவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். வீட்டு ஜன்னல் மூடி இருந்தால் குசினிப் புகைக் குழலினூடே போட்டுவிட்டுச் சென்று விடுவார்.

இவர் மாலுமிகளுக்கும் நல்ல உதவிகள் செய்து அவர்களின் நன் மதிப்பைப் பெற்றார். கடைசியில், இவர் இறந்த பின்னர் ஒரு டிசம்பர் 6  ஆம் திகதியில், விசுவாசமுள்ள மாலுமி ஒருவர் இவரது எலும்பு ஒன்றை துருக்கியில் களவெடுத்து இத்தாலியில் Bari என்ற ஊரில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதுகாத்து வைத்தார். அங்கு,  ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த/ இறந்த தினம் தெரியாத காரணத்தினால், அந்த டிசம்பர் 6  ஆம் திகதி பெரும் விழாக் கொண்டாடினார்கள்.

நாளடைவில் அவர் புகழ் மங்கிப் போனது. 19  ஆம் நூற்றாண்டிலே கிறிஸ்மஸ் நாளிலே நல்ல குணம் படைத்த குழந்தைகளுக்கு பரிசு கொடுப்பதற்காக ஒருவர் தேவை என்று என்று பல நாடுகளிலும் உணரப்பட்ட்து. இங்கிலாந்தில் Father Chrismas என்றும், கிழக்கு ஐரோப்பாவில் Christkind  என்ற  சிறிய இயேசுக் குழந்தை தேவதை என்றும், அமெரிக்காவில் Kris Kringle  என்றும் ஆரம்பிக்கப்பட்ட்து.

இறுதியில், அமெரிக்காவின் டச்சு குடியேறிகள்  St Ncholas இன் பழைய கதையை திரும்பவும் கொண்டு வந்து Kris Kringle , St  Ncholas என்பன மெதுவாக  'Sinterklaas'  ஆக மாறி, இப்போது கடைசியில்   'Santa Claus' என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இப்போது அவர் டிசம்பர் 6 க்குப் பதிலாக  டிசம்பர் 25  இல் தான் வருவார்!

அதாவது, இது பிற்காலத்தில் கிறீஸ்துவத்தை மெருகூட்டுவதற்காக, பெயர் மாற்றப்பட்டு  டிசம்பர் 6  இல் இருந்து  25 ஆம் திகதிக்கு தள்ளிப் போடப்பட்ட ஒன்று! எனவே நத்தாருக்கும் தாத்தாவுக்கும்  எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது உண்மை 

அமெரிக்காவில் தொடங்கினால் சொல்லவும் வேண்டுமா? உலகம் முழுவதும் பரவுவதுதானே வழக்கம். 

ஆனால், சில நாடுகளில் இன்னமும் டிசம்பர் 6  தான் பரிசு வழங்கும் நாளாகக் கொண்டாடப்படுகின்றது!

              ஆக்கம்:செல்வதுரை,சந்திரகாசன்                         

0 comments:

Post a Comment