"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்"


💔[மனைவியை இழந்து துடிக்கும் ஒரு கணவனின் சோகம்]💔 


"ஏழடி நடந்தாய், 
ஏழாயிரம் கனவு கண்டாய்,

தாளடி தொழுதாய், 
பல்லாண்டு வாழ்க வென

ஓரடி, ஈரடி, மூவடிஎன
வாழ்வில் அடிவைத்து      

சீரடி பாவில் அம்மாவென,
 சிறப்படி வைத்தாய் 

ஆறடி சேலையில், 
அழகாய் தொட்டில் கட்டி,

காலடியில் வைத்து
முத்துகளை வளர்த்தெடுத்தாய்

ஈரடி திருக்குறளை 
இதயத்தில் ஏற்றி வைத்து,

வாழையடி மரபை 
பெருமையாகப்  பேணிகாத்தாய்.

வேரடி கேட்டோர் 
விழியடி விரித்து நிற்க, 

சொல்லடி கொடுத்துத் 
 தலை நிமிர வழிசமைத்தாய்.  

ஏனடி போனாய் 
ஏகாந்தமாய் எம்மை விட்டு,

யாரடி எம்மை 
அன்பாய் இனி பார்ப்பார்?"

💔💔💔[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]💔💔💔0 comments:

Post a Comment