ஏன்? ஏன்? ஏன்? ..


தமிழராய் பிறந்து பழம் பெரும் பெருமைகள் பேசிக்கொள்கிறோம்.ஆனால் நிகழ்காலத்தில் பெருமையாகப் பேசுவதற்கு என்ன செய்தோம் என்றால் ஒன்றுமில்லை என்றே கூறவேண்டும்.
பதிலாக,    -ஒற்றுமையின்மைதுரோகத்தனம் பண்பாட்டு சிதைவுகள் காழ்ப்புணர்ச்சிஒதுக்கல் போன்ற பல அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாமே நம் இனத்தில் இவ்வளவையும் பிரயோகித்துக் கொண்டு அடுத்த இனத்தவரினை  குறை சொல்வதில் என்ன பயன்?
அண்மையில் IBC தமிழில் ஒரு நிகழ்வில் வந்த நேயர்கள் கூறிய கருத்துக்கள் சித்திக்கத்தக்கவை.

வேலை செய்யும் இடங்களில் தமிழன் பொறுப்புள்ளவனாக இருந்துவிடடால் ,கீழ் வேலை செய்யும்
1. தமிழன்மேல் மேலதிக வசைப் பிரயோகம்

2. தமிழன் திறமைகளை மழுங்கடித்தல்

3. தமிழன் முன்னேறாதபடி தடுத்தல்

4. மேலதிகாரிகளுக்குப் போட்டுக் கொடுத்தல் 
5.தமிழனுடனும்  அடுத்த நாடடவருடனும் வேலை விடயத்தில் வேறுபாடு காட்டி தமிழனை உளரீதியாக பாதிப்புக்கு உட்படுத்தல்
இப்படியான பல கேடித்தனங்கள் புலம்பெயர் நாடுகளில் நடந்து கொண்டு இருக்கின்றன. தமிழர்களும் தங்கள் குடும்ப நிலைகளைக் கருத்தில் கொண்டு ஊமைகளாக தம் கடமைகளைச் செய்கின்றனர்.

✍ஆக்கம்:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment