நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 05B

 [சீரழியும் சமுதாயம்] 
👳👳👳👳👳👳👳👳👳👳👳👳👳👳👳👳👳👳👳👳👳👳👳
தற்பால்ச்சேர்க்கையில் ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் பாலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் கே [gay] என்கிறார்கள். அதுபோல ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதை லெஸ்பியன் [lesbian] என்கிறார்கள். இந்த தற்பால் சேர்க்கையை விரும்பும் மனிதர்கள் இருபால் சேர்க்கையை விரும்பும் நபர்களாக இருக்கவும் பொதுவாக வாய்ப்புண்டு.
கே என்ற சொல், உகவை அல்லது மகிழ்ச்சியை குறிக்கும் பழைய ‘gai’ என்ற பிரஞ்சு சொல்லில் இருந்து பன்னிரெண்டாம் நூறாண்டில் பிறந்த சொல்லாகும். இது தொடக்கத்தில் “joyful”, “carefree” “full of mirth”, or “bright and showy” இப்படி குறித்தாலும், பிற்காலத்தில் ஆண்-ஆண் உறவை குறிக்கும் சொல்லாக மாறியது, ஆனால், லெஸ்பியன் என்னும் சொல் வித்தியாசமான வரலாற்றை கொண்டுள்ளது. கி.மு 600ல் லெஸ்பாஸ் [island of Lesbos] என்ற தீவைச் சேர்ந்த, ஓரின சேர்க்கையாளரான ஸாப்போ [சாஃபோ / Sappho] என்ற கிரேக்கப் பெண்ணின் காதல் கவிதைகள் மூலம் அவர் எதிர்பாலினத்தை விட தன் பாலினத்தின் மீதே அதிகம் காதல் கொண்டிருந்தார் என்பது தெரிய வருகிறது.  சாஃபோ-வின் கவிதைகளில் பெருமபன்மை யானவை இன்று அழிந்துபோயின. பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை குறிக்கும் லெஸ்பியன் என்ற சொல் சாஃபோ-வைக் குறித்தே உருவாக்கப்பட்டது. லெஸ்போஸ் தீவை பிறப்பிடப்பிடமாகக் கொண்டதால் சாஃபோ லெஸ்பியன் என்று அழைக்கப்பட்டார். அதுவே பின் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை அடையாளப்படுத்தும் சொல்லாக வழங்கப்பட்டது ஆகும். 
விஞ்ஞானிகளிடையே எதிர்பால், இருபால், ஓரினச்சேர்க்கை அல்லது வேறு பாலியல் நோக்குநிலை [heterosexual, bisexual, gay or lesbian orientation], எப்படி, ஒரு தனிப்பட்ட ஒருவரிடம் உருவாகுகின்றன என்பதற்கான, சரியான தனித்தன்மை வாய்ந்த காரணம் பற்றி இன்னும் ஒருமித்த கருத்து இல்லை. பலர் இயற்கையும் மற்றும் வளர்ப்பும் காரணம் என்கிறார்கள். என்றாலும் பொதுவாக, ஒரு ஒருபால் மரபணு [gay gene] ஒன்று இருக்கலாம் என்ற கருத்து இன்று நிலவுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களாக ஒருவர், வளர்ப்பு காரணம் இன்றி, இயற்கையாகவே அப்படியான பாலுணர்ச்சியுடன், பிறந்து இருந்தால் ?, அது அவர்களின் தேர்வு அல்ல, எனவே நாம் அவர்களும் இணைந்து குடும்பமாக வாழ வழிவிட வேண்டும், அதில் ஒரு தப்பில்லை. ஆனால் என்னை ஒரு கவலையும் வாட்டுகிறது, ஏனென்றால்

1]⊳ அடுத்த தலைமுறைக்கு எமது நாகரிகத்தை கொண்டு செல்ல அவர்களால் குழந்தைகளை உருவாக்கும் தகுதி இயற்கையாகவோ அல்லது வேறு வழியாகவோ இன்னும் இல்லை. என்றாலும் அவர்கள் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என யாரும் வாதாடலாம், அது பிழையில்லை, இன்றைய சூழலில் ,உதாரணமாக 2010 ஆம் ஆண்டின் பிரிட்டனில் உள்ள பாலியல் மனப்பான்மை மற்றும் வாழ்க்கை பாணியிலான தேசிய ஆய்வு [The National Survey of Sexual Attitudes and Lifestyles (Natsal) in Britons], வயது வரம்பு 16 முதல் 74 வரை உள்ள பெண்களில் 1% மற்றும் ஆண்களில் 1.5% தங்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று கருதுகின்றனர் என்கிறது, மேலும் பெண்களில் 1.4% மற்றும் ஆண்களில் 1% பேர் தங்களை இருபால் உறவு கொண்டவர்கள் என கருதுகின்றனர் என்கிறது. அது மட்டும் அல்ல, வயது வரம்பில் 16 முதல் 44 வயது வரை உள்ள பெண்களிலும் ஆண்களிலும், இப்படியான ஓரின பாலின அனுபவங்களைக் கொண்டிருக்கும் விகிதாசாரம் கடந்த 20 ஆண்டுகளில் வியத்தகு அளவு கூடியுள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது. உதாரணமாக பெண்களில், 1990 ஆம் ஆண்டில் 4% இருந்து 2000 ல் 10% மற்றும் 2010 இல் 16% ஆக உயர்ந்து உள்ளது காணப்பட்டுள்ளது  - இது ஒரு குறுகிய காலத்தில், ஒருபால் உறவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை சுடிக் காட்டுகிறது, எனவே இந்த விகிதத்தில் அல்லது ஒரு ஏற்றத்தில் இந்த பாலின நடவடிக்கைகள் கூடிக்கொண்டு போனால், ஒருவேளை, ஒருகட்டத்தில் தத்து எடுக்க குழந்தைகளும் இல்லாமல் போகலாம் ? அல்லது அடுத்த தலைமுறைக்கு நாகரிகம் கலாச்சாரம் கடத்தும் வாய்ப்பு குறைந்து அதனால் சமூகம் சமுதாயம் உடைய தொடங்கலாம் ?
2]எச்.ஐ.வி[HIV] தொற்றுக்களால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆண்கள் [MSM] என்று அறிக்கைகள் தெரியப் படுத்துகின்றன. இது ஏனென்றால் ஆண்களுடன் பால் உறவு  வைத்துள்ள ஆண்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாலியல் செயல், பொதுவாக, குதவழிப் பாலுறவு [anal sex] ஆகும். இது இயற்கையான யோனி பால் உறவை [vaginal sex] விட எச்.ஐ. வி பரவ வாய்ப்பு அதிகமென புள்ளி விபரம் காட்டுகிறது. உதாரணமாக அமெரிக்க புள்ளிவிபரம் / எச்.ஐ.வி.அரசாங்கம் [U.S. Statistics / HIV.gov]  இல், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்  சமீபத்திய மதிப்பீடுகள் படி[According to the latest estimates from the Centers for Disease Control and Prevention (CDC)]: 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 38,700 பேர் எச்.ஐ. வி நோயினால் புதிதாக பாதிக்கப்பட்டனர். அதில் ஒருபால், இருபால், மற்றும் ஆண்களுடன் பால் உறவு வைத்த ஆண்கள் மிகவும் பாதிக்க பட்டவர்களில் அடங்குகின்றனர். இவர்கள் அந்த 38,700  பேரில், 26,000 ஆக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது [Gay, bisexual, and other men who have sex with men bear the greatest burden by risk group, representing an estimated 26,000 of new HIV infections per year.]. அதேபோல, 2017 இல் :ஒருபால் மற்றும் இருபால் ஆண்கள், மொத்த எச் ஐ வி நோய் தொற்றியவர்களில் 66%  ஆக இருந்ததுடன், மொத்த எச்.ஐ.வி ஆண்களில் 82% ஆக இருந்தனர் [Gay and bisexual men accounted for 66%  of all HIV diagnoses and 82% of HIV diagnoses among males.] என்பது, இந்த பாலியலின் ஆபத்து தன்மையை வெளிக் காட்டுகிறது.
அமெரிக்க தரவுகளைப் பயன்படுத்தி 2009 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஒருபால் திருமணத்தை அனுமதிப்பதன் மூலம் புள்ளி விவரரீதியில் குறிப்பிடத்தக்க பாதகமான விளைவு எதுவும் இதுவரை ஏற்படவில்லை என்று தெரிகிறது. 2014 இல் மற்றொரு அமெரிக்க ஆய்வு, ஒரே பாலின ஜோடிகளை திருமணம் செய்வதற்கு அனுமதித்தது, எதிர் பாலின திருமண விகிதத்தை குறைத்தது என்பதற்க்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் சுடிக் காட்டுகிறது. மேலும்  ஒருபால் திருமணம் அனுமதிக்கப் பட்டு, சமூகத்தின் மேலான அதன் தாக்கத்தின் விளைவுகளை அல்லது பாரம்பரிய திருமணத்தின் சமூக நோக்கத்தை அது பலவீனப்படுத்துகிறதா என்பனவற்றை கண்காணிக்க ஒப்பீட்டளவில், எமக்கு ஒரு குறுகிய கால இடைவெளி மட்டுமே இருந்து உள்ளது. எனவே  இந்த ஆராய்ச்சிகளில் இருந்து கிடைக்கப் பட்ட கண்டுபிடிப்புகள் ஒரு முதல் கட்டம் என்பதால், அதன் முடிவுகளை நாம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று நான் நம்புகிறேன்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 06A  தொடரும்
ஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

பகுதி: 06A வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? பகுதி: 06A


0 comments:

Post a Comment