சித்தரின் முத்தான 3 சிந்தனைகள் / பகுதி:07சிவவாக்கியம்-051
 

சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே

சொற்குருக்கள் ஆனவர்களும்சோதியான ஈசன் உடம்பில் ஆவதும்மெய்க்குருக்கள் ஆனவர்களும் வேண்டிய பூசை செய்வதும்  சற்குருக்கள் ஆனவர்களும்சாஸ்திரங்கள் யாவும் சொல்வதும் செய்க்குருக்கள் ஆனவர்களும் ஆகிய அனைவருமே தூமையில் கருவாகி திரண்டுருண்டு உருவானவர்களே. [ எனவே பெண்களைத் தீட்டு என ஒதுக்குதலை கண்டிக்கிறார் .

***************************

சிவவாக்கியம்-052
 

கைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்
பொய் இறந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய் கடந்து உம்முளே  விரைந்து கூடல் ஆகுமே.
 

எவ்வளவோ கை முறைகள் கொண்டு யோக ஞானம் கற்றாலும் நம் மெய்யில் மெய்யான இடம் எதுவென அறியாமல் கண்களை சிமிட்டி நிற்கிறீர்கள். .ஈசன் இருக்கும் இடம்எங்கே என்று தெரிந்து கொள்ளாமல் எவ்விடத்தில் மனதை இறுத்தி தியானம் செய்கிறீர்கள். பொய்யாயின யாவையும் ஒழித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்துஅங்கேயே சிந்தையைப் பொருத்தி அதையே நோக்கி தியானிக்க வல்லவர்கலானால் மெய்ப்பொருளில் சோதியாக விளங்கி எல்லாவற்றையும் கடந்து நின்ற ஈசனை உங்களுக்குள்ளேயே கண்டு விரைவில் சேர்ந்து கூடி இறவா நிலையைப் பெறுங்கள்.

*************************************

சிவவாக்கியம்-060


அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ
உகாரம் என்ற அக்கரத்துள் உவ்வு வந்து உதித்ததோ
அகாரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே

அகாரம் என்ற 'எழுத்தில் ஒரெழுத்தான அவ்வு தோன்றியதோ! உகாரம் என்ற ' எழுத்தில் ஊமைஎழுத்தான உவ்வு வந்து தோன்றியதோ! இந்த எட்டிரண்டுமான ' '-வும் ''-வும் 'சி'என்ற சிகாரம் இன்றி தோன்றியிருக்க முடியுமாஇதனை எவ்வித மன விகாரமும் அற்ற யோகிகளே விரிவாக எடுத்துரைத்து விளக்க வேண்டும். எந்த மொழி எழுத்துக்களுக்கு முதல் எழுத்தாக இருப்பது (.) புள்ளியாகவும்பேசும் எழுத்தாக மாறும் பொது 'சி'யாகவும் உள்ளதுஆதலால் சிகாரம் இல்லாமல் எந்த எழுத்தும் நிற்காது என்பதி புரிந்துகொண்ட அந்த ஓரெழுத்தை உணர்ந்து தியானியுங்கள்..

அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment