கொரோனா வைரஸ் அலைகள்" / பகுதி 03

"முதல் மற்றும் இரண்டாவது 

கொரோனா வைரஸ் அலைகள்" இன்று உலகின் அதிகமாக எல்லா நாடுகளும் கோவிட் 19 ஆல், பல விதங்களில் பாதிக்கப்பட்டு, பல முடக்கல்களையும் பல கட்டுப்பாடுகளையும் எதிர் நோக்கியும் மற்றும் வேலைகள், தொழில் வாய்ப்புக்கள், கொண்டாட்டங்கள், ஒன்று கூடல்கள், விளையாட்டுக்கள் மற்றும் களியாட்டங்கள் போன்றவற்றை  ஓரளவு இழந்தும் அல்லது குறைத்தும் வாழும் இந்த சூழலில், அவர்களின் கவலைகளை போக்க சில கேள்விகளை முன்மொழிந்து அதற்கான விடையையும் தேட உள்ளோம்.

 

1] கொரோனா வைரஸின் முதலாவது அலை கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதா அல்லது முற்றாக முடிவுற்றுவிட்டதா ?

 

இல்லை, நாங்கள் இன்னும் முதல் அலைகளில் இருக்கிறோம். ஒரு வகையில், கொரோனா வைரஸின் பரவல் அலை போல் இல்லா விட்டாலும், அது மெத்தை உறையில், ஒட்டுவேலை செய்தது போல [more like a patchwork quilt than a wave], உதாரணமாக, அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், அங்கு வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு பகுதிகளை, ஒரு சீரற்ற வழியில் இன்னும் கொரோனா வைரஸ் பாதித்து கொண்டு இருக்கிறது. சில பட்டணங்களும்  நகரங்களும் கடுமையான பரவலுக்கு உள்ளாகி, இன்று அவை மீண்டு எழுவது போல் தெரிகிறது, அதேவேளை, மற்றும் சில மாநிலம், கொரோனா பரவலில் பெரிதாக பாதிக்கப் படவில்லை. சில மாநிலங்கள் இப்போது தான் ஒரு உயர்வை, கொரோனா பரவலில், அனுபவித்து வருகின்றன. இன்னும் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும், அதாவது மக்கள் ஒன்றாக நெருக்கமாக வாழும் அல்லது வேலை செய்யும் இடங்கள் தான் கொரோனா பரவலுக்கு முக்கியமாக இலக்காகின்றன. உதாரணமாக மருத்துவ இல்லம், கூட்டு குடும்பங்கள், சிறைச்சாலைகள், இறைச்சி பதப்படுத்தி பொதியிலிடும் தொழிற் சாலை போன்ற வணிக நிலையங்கள் [nursing homes, multi generational households, prisons and businesses such as meat packing plants] போன்றவையாகும். மேலும் சில பகுதிகள், எண்ணிக்கையளவில், புதிதாக தொற்றுக்கு உள்ளவர்களின் தொகையில் அல்லது மரணத்தில், குறைந்து வருவதாகக் கூறினாலும், உள்ளூர் மயமாக்கப்பட்ட  நோயின் திடீர் அதிகரித்தல் அல்லது பரவுதல் [localised outbreaks], மருத்துவ இல்லங்களில் அல்லது ஒன்றுகூடும் நிகழ்வுகளில் இன்னும் தொடர்கின்றன. உதாரணமாக, தொற்றுக்கு உள்ளாகிய ஒரு நபர், இப்படியான ஒன்று கூடும் நிகழ்வுகளில், அதை பலருக்கு பரப்புகிறார். அந்த நபர், தொற்றை பலருக்கு பரப்பும் முதன்மை நபராக [அல்லது மேம்பட்ட பரப்பியாக  / “superspreader”] கருதப்படுகிறார்.

 

நீங்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயின் பரவலைப்பற்றி ஆய்வு செய்தால், ஒரு சிலரே பலருக்கு அதை பரப்புவதை காணலாம். அது பொதுவாக 80/20 வீதத்தில் இருப்பதாக கருதுகிறார்கள் [more or less follows the 80/20 Pareto Principle]. அதாவது 80% புதிய தொற்றுக்கள், 20% அல்லது அதிலும் குறைந்த நோய் காவிகளால் தான் பரப்பப்படுகிறது [80% of new transmissions are caused by fewer than 20% of the carriers]. சுருக்கமாக ஒரு சிலரே பலருக்கு ஆக்கிரோஷமாக வைரஸை பரப்புகிறார்கள் [it’s a select minority of individuals who are aggressively spreading the virus]. பெரும்பாலான வைரஸ் பரப்பல், எதாவது ஒரு ஒன்றுகூடல் நிகழ்ச்சியின் பொழுதே ஆரம்பித்து உள்ளது. அங்கு அதிகமாக ஒரு மேம்பட்ட பரப்பியே [superspreader] காரணமாக இருந்து உள்ளார். உதாரணமாக, வாஷிங்டன் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பாடகர் பயிற்சியே 52 ஆட்களுக்கு பரப்பியது, அது போல, தெற்கு கொரியாவின் ஆரம்ப பரவலுக்கு, சியோலில் இருந்த ஒரு பெரிய தேவாலயம் தான் காரணமாக இருந்தது. மற்றும் ஜோர்டானில் திருமணம் வைபவம் ஒன்றே 76 தொற்றுக்கு காரணமாகியது [ a choir practice in Washington State infected about 52 people; a megachurch in Seoul was linked to the majority of initial infections in South Korea; and a wedding in Jordan with about 350 guests led to 76 confirmed infections].

 

தொற்றுநோயியல் நிபுணர்கள [Epidemiologists], தொற்றுக்களை தணிப்பதற்கு மூன்று விடயங்களை குறிப்பாக பரிந்துரைக்கிறார்கள். அவ்வற்றை அகற்றுவதன் மூலமே, இலகுவாக கட்டுப்படுத்தலாம் என்பது அவர்களின் கணிப்பு. அவை, காற்றோட்டம் குறைந்த அடைக்கப்பட்ட இடங்கள், நெரிசலான இடங்கள் அல்லது அமைப்புக்கள், மற்றும் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்புகள் பேணுதல் போன்றவையாகும் [closed spaces with poor ventilation, crowded settings, and close contact with others]. எனவே நாம் இவ்வற்றை தவிர்க்கக் கூடிய முறைகளை, வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.  உதாரணமாக திறந்த வெளி அல்லது வெளிப்புறத்தில் இருக்கைகளை ஏற்படுத்துதல், எந்த உட்புற அமைப்புகளிலும் காற்றோட்டத்தை அதிகரித்தல் மற்றும் ஆறு அடி அல்லது இரண்டு மீட்டர் சமூக இடைவெளி கடை பிடித்தல், தொற்றை தணிக்க வழிசமைக்கும் என்பது வல்லுனர்களின் கருத்தாகும்

 

2] ஏன் கொரோனா வைரஸ் பலபகுதிகளில் மீண்டும் உச்சமடைகிறது ?

 

சமூகத்தை கட்டுப்பாட்டில் இருந்து தளர்த்தும் பொழுது, அந்த சமூக குழு தாம் முன்பு அன்றாடம் செய்தவைகளை, மீண்டும் செய்ய ஆவலாக முற்படுகிறது. ஆனால் எமக்கு இன்னும் கொரோனாவிற்கு எதிரான பயனுள்ள சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லை [effective therapy or vaccine], எனவே, உண்மையில் இந்த தளர்வு அல்லது மீண்டும் இயல்பு நிலைக்கு உள்ளாக்கும் பொழுது, சில பாதுகாப்பான நடவடிக்கைகளை பராமரித்து செயல் படுத்த வேண்டும். உதாரணமாக, சமூக இடைவெளி, முகமூடி அணிதல், மற்றும் கைகழுவுதல் போன்ற கட்டுப்பாடுகளுடன் அவதானமாக மக்கள் நடமாடுவார்கள் என்பதே அரசின் அல்லது சுகாதார வல்லுனர்களின் நம்பிக்கையாக இருந்து இருக்கும். ஆனால் சிலர் இந்த தடுக்கும் முறைகளை கைவிட்டதே, மீண்டும் தொற்று உயர்வுக்கு காரணமாகும்.     

 

மற்றது திருப்பவும் இயல்பு நிலைக்கு திறந்து விட்ட பொழுது, சிலரின் இத்தகைய கட்டுப்பாட்டு முறைகளின் மீறலின் விளைவு, உடனடியாக தெரிய வாய்ப்பில்லை, அவர்கள் அதை தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, மற்றும் சிலரை தூண்டியும் இருக்கலாம்? பொதுவாக இவ்வற்றின் விளைவுகளால், கோவிட் 19 இன் தாக்கம், தெரியக்கூடிய அளவிற்கு அதிகரிக்க, இரண்டு கிழமைக்கு மேல் எட்டு கிழமை வரை எடுக்கலாம். எனவே மக்கள் இந்த அடிப்படை கட்டுப் பாடுகளை ஒழுங்காக எல்லா நேரமும் பின்பற்று வார்களாயின், பின்விளைவுகள் பெரிதாக இருக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 04 தொடரும்

0 comments:

Post a Comment