செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]



தேவனாதன் - தேவநாதன்

   தேவ  நாதன்  தேவநாதன்இராம  நாதன்  இராமநாதன் என வருவது வடமொழிமுறையாகும் . தேவன்  நாதன்  என்றும்இராம  நாதன் என்றும் கொண்டு தேவனாதன்என்றும்இராமனாதன் என்றும் எழுதுவது முறையாகாது.

வேலை கொடு - வேலைக் கொடு

வேலை கொடு என்றால் உழைப்பதற்கு வேலை கொடு என்ற பொருள் தரும்.. வேலைக்கொடு என்றால் கூரிய ஆயதமாகிய வேலினைக் கொடு என்ற பொருள் தரும்எனவேபொருள் உணர்ந்து எழுதுக.

பூவை முகருகிறோம் - பூவை மோக்கிறோம்

பூவை முகருகிறோம் என்பது தவறாகும்பூவை மோக்கிறோம் என்பதே சரியாகும்.திருக்குறளில் ''மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து''என்று வருவதைக் காண்க.

எத்தனை - எவ்வளவு

இச்சொற்களைப் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும்எத்தனை என்பது எண்நைக்குறிக்கும்எவ்வளவு என்பது அளவைக் குறிக்கும்எத்தனை பாடல் எழுதினாய்?எவ்வளவு துணி வாங்கினாய்என எழுத வேண்டும்எவ்வளவு நாளிதழ் விற்றாய்?என்பது தவறாகும்எத்தனை நாளிதழ் விற்றாய்என்பதே சரியாகும்எத்தனை அழகுஎன்பது தவறாகும்எவ்வளவு அழகுஎன்பதே சரியாகும்.

ஆம் - ஆவது

ஆம் என்பது எண்ணோடு சேர்ந்து வரும்ஆவது என்பதும் எண்ணோடு சேர்ந்துவருவதுண்டுஆம் என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்ஆவது வரிசை முறையைக்குறிக்கும்சான்று: ''முதலாம் பாகம்இரண்டாம் பாகம்.'' ''இரண்டாவது பதிப்புஆறாவதுபதிப்பு''. ஆவது ஐயப்பொருளிலும் வரும்செடி யைஆடாவது மாடாவது மேய்ந்திருக்கும்.ஐயத்தைக் காட்டும் சொல்லாக ஆவது பயன் படுத்தும்போது இடையில் அல்லது என்றசொல் வருதல் கூடாதுசெடியை ஆடாவது அல்லது மாடாவது மேய்ந்திருக்கும்என்றெழுதுவது தவறாகும்.

மங்களம் - மங்கலம்

மங்கலம் என்னும் சொல்தான் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதுதமிழிலுள்ளஅகர முதலிகள் மங்கலம் மங்களம் என்னும் இரண்டிற்கும் ஒரே பொருளைத்தான்தந்துள்ளனமங்கலம் என்னும் சொல்லே தொன்மையும் செம்மையும்வாய்ந்தது.மங்களம் என்பது போலிச் சொல்லாகும்.

கருப்புக் கொடி - கறுப்புக் கொடி

கறுப்பு என்பது வெகுளியைக் குறிக்கும்நிறத்தையும்  உணர்த்தும் என்று தொல்காப்பியர்கூறுகின்றார். ''கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள'' ''நிறத்து உரு உணர்த்தற்கும் உரியஎன்ப'' (தொல்உரி, 74, 75) பிங்கல நிகண்டு கறுப்பு என்ற சொல்லுக்கு ''கருநிறமும்சினக்குறிப்பும் கறுப்பே'' என்கிறது.
கருப்பு என்னும் சொல்லுக்குப் பஞ்சம் என்பதுதான் பொருளாக இலக்கியங்களிலும்அகரமுதலிகளிலும் காணப் படுகிறது.கறுப்புச்சாமிகறுப்பண்ணன் என்று எழுதுவதே மரபாகக் கொள்க என கிபரந்தாமனார்கூறுகிறார்

கறுப்பு - கருமை நிறம்கறுப்பன் - கருமை நிறம் உள்ளவன்கறுப்பி - கருமை நிறம்உள்ளவள்கறுப்புத் தேள் - கருந்தேள்கருமை என்பது கார் என்னும் சொல்லின் அடியாகப்பிறந்ததுகார் என்பதன் அடியாகப் பிறந்த கருமை என்னும் பொருளைத்தரும்மேற்காட்டப்கட்டுள்ள சொற்கள் நான்கும் அடிப்படைச் சொல்லில் உள்ள இடையினஎழுத்திற்கு(ருமாறாக வல்லின எழுத்தைப்(றுபெற்றுப் பயன்கடுவது தமிழ் மரபில்ஏற்பட்டுள்ள ஒரு புதிர் போலும்.

கருமை என்பது கரிய நிறம் என்னும் பண்பைக் குறிக்கும்கருமை என்பதன் அடியாகப்பிறந்த கருப்பு என்ற வடிவத்தை மூவரதராசனாரும்பாவாணரும் பயன்படுத்தியுள்ளனர்.
கருப்புக் கொடிகருப்புச்சாமிகருப்பண்ணன் என எழுதுவது பிற்கால வழக்காகும்.

இறைப்பணி - இறைபணி

இறை - உயிரீறு உயர்திணைப்பெயர்உயர்திணைப் பெயரீற்று உயிர்முன் வல்லினம்இயல்பாகும்.(நன்னூல்.159) எனவே இறைபணி என்று இயல்பாக எழுத வேண்டும்.ஆனால் அறம் 10 பணி ஸ்ரீ அறப்பணி என்று மிகுத்து எழுத வேண்டும். (மெய்யீறுவேற்றுமையில் மகரவீறு கெட்டு அற என நின்று வரும் வல்லனம் மிகுந்து அறப்பணிஎன்றாகும்)

துணை கொண்டு - துணைக்கொண்டு

துணை என்னும் சொல் தனிச்சொல்லாக நின்று துணையைக் கொண்டு என்ற 
        பொருளில்இரண்டாம் வேற்றுமைத் தொகையாக வரும்போது வருமொழி வினையாகவந்தால்,பெரியோர் துணை கொண்டு வினை செய்தான் என்பது போல் இயல்பாக வரும். (நன்னூல். 255)

துணைக்கொள் என்று இரண்டு கொற்கள் ஒட்டி ஒரு வினையாக வரும் போது மிகுந்துவரும். ''பெரியாரைத் துணைக்கோடல்'' (திருக்குறள்அதிகாரம் 45) ;. ''பெரியாரைத்துணைககொள்'' (ஆத்திசூடி 83) என்பன காண்க.

பின்புரம் - பின்புறம்

பின்புரம்மேற்புரம் என்பன தவறாகும்பின்புறம் மேற்புறம் என்றே எழுத வேண்டும்.புறம் - இடத்தைக் குறிக்கும்புரம் - ஊரைக் குறிக்கும். (விழுப்புரம்பிரமாபுரம்இடது புறம்,வலது புறம் என்பன பிழையாம்இடப்புரம்வலப்புரம் என்பனவே சரியாம்.
  நன்றி:கவிஞர் கி.பாரதிதாசன்                                                                                    [அடுத்த வாரம் தொடரும்]

0 comments:

Post a Comment