சிரிக்க... சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ்

 




-01-

கணவன்: நீ சமைச்ச  சமையலில் இண்டைக்கு ஒரு பெரிய மாற்றம் இருக்கிறது.

மனைவி: அடடே! என்ன மாற்றமுங்க?

கணவன்: வழமையாய் கறிக்குள்ள கருத்த மயிர்தான் வரும், இன்றைக்கு வெள்ளை மயிர் வந்திருச்சு!

 

-02-

மாமி: மருமகளே, காலை எழுந்தவுடன் என்ன செய்வாய்?

மருமகள்: என் காதுகளை மூடுவேன், கண்களைத் திறப்பேன் மாமி

 

-03-

காதலி: நான் செத்துப்போயிட்டா நீ என்ன பண்ணுவ?

காதலன்: நானும் செத்துப்போய்டுவேன்.

காதலி: ஏன்? அவ்வளவு பாசமா?

காதலன்: இல்ல, நீ அங்கேயும் வந்து ஏன் லேட்டா வந்தன்னு சண்டை போடுவியே, அதுக்கு பயந்துதான்!

 

-04-

காதலன்: உனக்கு முன்னாடி எனக்கு மூணு காதலி இருந்தாங்க.

காதலி: (கோபமாக) என்னது? அப்புறம் ஏன் என்கிட்ட வந்தீங்க?

காதலன்: அப்புறம்தான் தெரிஞ்சது, "முன்னாடி இருந்த மூணு பேரும் பரவாயில்லை"னு!

 

-05-

காதலி: நான் அழகில்லாம   இருக்கேனா?

காதலன்: இல்லையே, நீ நிலா மாதிரி.

காதலி: (சந்தோசமாக)நிஜமாவா?

காதலன்: ஆமா, (தனக்குள்)நிலவை நேர பார்த்தால் தானே புரியுது, எவ்வளவு மேடு பள்ளமும் ,கரடு முரடு என்று!

 

-06-

காதலன்: ஏன் அழுதுட்டு இருக்க?

காதலி: என் ஃபேஷியல் சரியா வரல.

காதலன்: ... அது மேக்கப்பா? நான் ஏதோ புதுசா 'மாஸ்க்' போட்டுருக்கன்னு நினைச்சேன்!

 

-07-

காதலி: நாம ஏன் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்?

காதலன்: ஏன்னா, நமக்கும் வேற யாரும் கிடைக்கல, அவங்களுக்கும் நம்மள பிடிக்கல!

 

-08-

காதலன்: நீ தூங்கும்போது நீ தேவதை மாதிரி இருப்ப.

காதலி: அப்போ முழிச்சிருக்கும்போது?

காதலன்: அப்போதான் நீ 'தேவதை'ங்கிறது நான் கண்டது கனவுன்னு புரியுது!

 

-09-

காதலி: நீங்க எனக்காக நிலாவை பிடிச்சு வருவீங்களா?

காதலன்: முதல்ல உன் மேக்கப்பை கலைச்சிட்டு வா, அப்புறம் நிலாவை பத்தி பேசவேண்டிய தேவையே வராது!

 

-10-

காதலி: நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் உங்க கவலைகளை பகிர்ந்துப்பேன்.

காதலன்: எனக்கு கவலையே இல்லையே?

காதலி: அதான் கல்யாணத்துக்கு அப்புறம் வந்திடும்னு சொல்றேனே!

 

-11-

காதலி: நான் உங்களை விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க போறேன்.

காதலன்: ஐயோ பாவம்! அந்த அப்பாவியும் யாருன்னு தெரியலையே!

 

-12-

காதலி: நீங்க ஏன் எப்பவும் பழைய ஜோக் சொல்றீங்க?

காதலன்: ஏன்னா, புது ஜோக் சொன்னா உனக்கு புரியறதுக்குள்ள நம்ம கல்யாணமே முடிஞ்சிடும்!

 

-13-

போலீஸ்: ஏப்பா திருடா, மூணாவது தடவையா பொலிஸ் நிலையம்  வர்ற? உனக்கு வெட்கமா இல்ல?

திருடன்: நீங்க தினமும் இங்கேயே தான சார் இருக்கீங்க, உங்களுக்கு இல்லாத வெட்கம் எனக்கென்ன?

 

-14-

இன்ஸ்பெக்டர்: ஏட்டு, அந்த கைதி தப்பி ஓடியிற்றானே , ஏன் பிடிக்கல?

ஏட்டு: அவன் ஐயப்ப மாலை போட்டிருந்தான்  சார், அதான் பிடியாம  விட்டுட்டேன்!

 

-15-

குடிமகன்: சார், என் மனைவியை காணோம்.

போலீஸ்: எப்படியாவது கண்டுபிடிச்சு தந்துடுறோம்.

குடிமகன்: அவசரம் இல்ல சார், நிதானமாவே தேடுங்க!

 

-16-

திருடன்: சார், என்னை ஜெயில்ல போடுங்க.

போலீஸ்: ஏன்?

திருடன்: பொண்டாட்டி சமையலை விட ஜெயில் கஞ்சி எவ்வளவோ மேல் சார்!

 

-17-

நீதிபதி: சாட்சி சொல்ல வந்த இடத்துல ஏன் தூங்குறீங்க?

சாட்சி: வக்கீல் குறுக்கு விசாரணை பண்றத பார்த்தா, எனக்கு தூக்கம் தான் வருது சார்!

 

-18-

வக்கீல்: நீங்க ஏன் உங்க மனைவியை விவாகரத்து பண்ண விரும்புறீங்க?

நபர்: அவங்க 6 மாசமா என்கிட்ட பேசவே இல்ல சார்.

வக்கீல்: யோசிச்சு முடிவெடுங்க, இவ்வளவு அமைதியான மனைவி கிடைக்கிறது கஷ்டம்!

 

-19-

நீதிபதி: உங்களுக்குத் தண்டனையா 500 ரூபாய் அபராதம் அல்லது 10 நாள் ஜெயில்.

குற்றவாளி: சார், அந்த 500 ரூபாயை என் வக்கீல் கிட்ட வாங்கிக்கோங்க, என்கிட்ட இருந்த எல்லாத்தையும் அவர்தான் வாங்கிட்டாரு!

 

-20-

நண்பன் 1: வக்கீல்கள் ஏன் எப்பவும் கருப்பு கோட் போடுறாங்க?

நண்பன் 2: ஏன்னா, அவங்க சொல்ற பொய்கள் எல்லாம் வெள்ளையா தெரியக்கூடாதுன்னுதான்!

 

😁😁😁😁😁தொகுப்பு:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment