அவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]


அவள் ஒரு புதிர்?
 நிலா ஒளியில் காய்ந்து
கனா ஒளியில் மிதந்து
நலமா என கேட்டு
நங்கை இவள் வந்தாள்
பலா பழம் சுவைத்து
கானா    பாட்டு பாடி
சுகமா என கேட்டு
சுந்தரி இவள் வந்தாள்
நெருங்கி வந்து இருந்தாள்
நெஞ்சம் குளிர கதைத்தாள்
குறும்பாய் சில செய்தாள்
மறுத்தால் முறைச்சு பார்த்தாள்
சுருங்கி சிணுங்கி வாடுவாள்
கொஞ்சம் விலத்தி இருப்பாள்
வெறுப்பாய் நான் பார்த்தாள்
நறுக்காய் அவள் சிரிப்பாள்
மனம் திறந்து பேசுவாள்
கள்ளம் கபடம் இல்லை
சொல்ல எதோ வருவாள்
நாணி கோணி போயிடுவாள்
சினம் சில  கொள்வாள்
உள்ளம் அப்ப கொதிப்பாள்
கொல்ல அவளுக்கு தோன்றும்
கூனிக் குறுகிக் போயிடுவாள்
சந்திக்க பதுங்கி வருவாள்
பாடம் புரியலை என்பாள்
புத்தகம் கையில் இருக்கும்
கவனம் எங்கோ இருக்கும்
சிந்திக்க நல்லா தெரியும்
அடம் பிடிக்கவும்   தெரியும்
வித்தகம் கண்ணில் காட்டுவாள்
கவனம் தன்னில் இருக்கும்
கூட்டத் திற்குள் கூட்டமாய்  
கிட்ட மெல்ல வருவாள் 
காதில் மெதுவாய் கூறி
சைகை காட்டி மறைவாள்
பாட்டுக் குள்  பாட்டாக
வட்ட நிலா ஒளியில்
மதில் மேல் இருந்து
வசை பாடி  ஏசுவாள்
 பதறி ஓடி வருவாள்
பிந்தி விட்டது என்பாள்
துள்ளி ஏறி இருப்பாள்
மெல்ல போ என்பாள்
சிதறி தேங்காய் உடைப்பாள்
முந்தி வேண்டியது என்பாள்
அள்ளி நீறு பூசுவாள்
சொல்ல ஏனோ மறுப்பாள்

வழமாக கூடல் வளர
முறியாத ஊடல் அல்ல
விரிவான விளக்கம் உண்டு 
எரிகின்ற தீபம் அவள் 

அழகான தேவதை அவள்
அறியாத பருவம் அல்ல
தெரியாது ஒன்றும் இல்லை
புரியாத புதிர் அவள்??
[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]


3 comments:

 1. சரி, அவள்தான் யார்? தமிழ் நங்கையோ?

  ReplyDelete
  Replies
  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Monday, April 15, 2013

   நீறு பூசி தேங்காய் உடைக்கிறாள்
   நூறு சாட்டுகள் மௌனமாய் சொல்கிறாள்
   கூறு போடாமல் வசை பாடுகிறாள்
   வேறு வேண்டுமா? யாரென அறிய ?

   Delete
 2. அழகான கவி.விரிவான விளக்கம் உண்டு. எரிகின்ற தீபம் அவள். 🌹

  ReplyDelete