"முதியோர்களின் வாழ்வின்....


சில நிகழ்வுகள்" / உராய்வு


கடந்த காலத்தில் கட்டழகாகத் திகழ்ந்தவர்கள், கம்பீரமாக தோற்றமளித்தவர்கள், வீரமான செயற்பாடுகளுடன் விரைவாக செயற்பட்டவர்களே இன்றைய முதியோர். இன்று கட்டழகு குலைந்து, கம்பீரம் குறைந்து, முதியோர் என்ற முத்திரை பதித்து இவர்கள் காலம் கழிக்கின்றனர். மனித வாழ்வில் மட்டுமல்ல அனைத்து உயிரினங்கள் வாழ்விலும் தவிர்க்க முடியாத இயற்கை நியதிகளில் ஒன்றுதான் முதுமையாகும்.  பொதுவாக 65 வயதைத் தாண்டியவர்களே முதியோர் எனக் கருதப்படுகின்றனர். இவர்கள் சிலவேளை 'தனக்கு வயதாகி விட்டதே என்று கவலைப்படுவதும் உண்டு. இது இயற்கையின் நியதி என்பதை அனைவரும் மறந்து விடக் கூடாது.         

 

எப்படியென்றாலும்  இன்று முதியோர்கள் வீட்டிற்குள்ளே அல்லது வெளியே எதாவது ஒன்றை கையாளும் பொழுது, தமக்கு வயது போய்விட்டதே என்ற உணர்வாலும், வயதிற்கு ஏற்ற பலவீனத்தாலும், மிகவும் கவனமாக அவதானமாக, மெதுவாக, தமது உடல் நிலையை கவனத்துக்கு எடுத்து, அதை செயல்படுத்துகிறார்கள். முதியோர்கள் மிகவும் அபாயகரமான மற்றும் அபாயமற்ற  விபத்துக்கள் போன்றவற்றை [fatal and non fatal accidents] பொதுவாக விழுவது மூலம் [falls] அடைகிறார்கள். அது மட்டும் அல்ல , 65 அகவைக்கு மேற்பட்டோர்களில் , முக்கால் வாசி பேர் [almost three quarters] அதிகமாக கை, கால், தோள்களில் [arms, legs and shoulders] காயத்துக்கு அல்லது வலிகளுக்கு உள்ளாகிறார்கள். 

 

அப்படியான ஒரு விபத்து முதியோர்களிடம் ஏற்படின், அதனால் காயங்கள் [injuries] எதாவது ஏற்படின், அது நீண்ட காலம் குணமடைய எடுக்கலாம், சிலவேளை அது முற்றாக குணமடையாமல் கூட போகலாம்? மேலும் முதியோர்கள் பொல்லு [பொல்லுத்தடி / walking stick] அல்லது சக்கர நாற்காலி [wheelchair] போன்றவற்றை தம் அசைவுக்கு [moving around] துணையாக மற்றும் இலகுவாக இருப்பதற்காக, அதிகமாக  பாவிக்கிறார்கள். சில முதியோர்கள் வாகனமும் செலுத்துகிறார்கள். எனவே இவை எல்லாவற்றிலும் உராய்வு அல்லது உராய்வு விசை [frictional force] முக்கிய பங்கு அளிக்கிறது. உதாரணமாக, ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது சறுக்கும்போது, இரு தொடு பரப்புகளுக்கிடையே செயல்படும் விசை உராய்வு விசையாகும். பொருளின் இயக்கத்திற்கு எதிர்த்திசையில் இந்த உராய்வு விசை செயல்படும் என்பது குறிப்பிடத் தக்கது. 

 

நாம் எம் இளம்பிராயத்தில் இருந்து உராய்வு என்ற சொல்லை கேள்விப்பட்டு இருந்தாலும், உராய்வு என்றால் என்ன ? விசை என்றால் என்ன ? மற்றும் இவையை  நாம் எப்படி எம் அன்றாட நடவடிக்கைகளில் தொடர்பு படுத்தலாம் என்பது, எல்லோருக்கும் தெரியும் என்று கருதமுடியாது. ஒரு பொருத்தமான உதாரணமாக, தடுப்பக்கருவியை [பிரேக்கை / brake] பயன்படுத்துவதன் மூலம் ஒரு வாகனத்தின் வேகத்தை வீதியில் குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவதை குறிக்கலாம். இன்னும் ஒரு ஆச்சரியமான உதாரணமாக, ஒரு கிராம புரத்தை கருத்தில் கொள்வோம். வயல் வெளிகளில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் கட்டிப் போடும்போது நீளமான கயிற்றைக் கொண்டு கட்டுவார்கள். சில சமயம் கம்புகளில் முடிச்சுகள் போட்டுக் கட்டாமல், முளைக்கம்பு மீது நான்கைந்து சுற்றுகள் மட்டுமே சுற்றிவிட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதுவும் அவிழாமல் இருக்கும். முடிச்சுகள்தான் அவிழாமல் இருக்கிறது என்று நினைத்தால், முடிச்சு போடாமலேயே கயிறுகளும் அவிழ்வதில்லை. அது ஏன்? இதற்குக் காரணம், நூலுக்கும் பொருளுக்கும் உள்ள உராய்வு விசைதான். இதனால்தான் முடிச்சுகள் அவிழ்வதில்லை.

 

உராய்வு விசையை கவனத்தில் எடுத்தால், அது உராயும் இரு மேற்பரப்புகளின் தன்மையிலும், மற்றும் அதன் பொருளிலும் [The materials that are in contact and the nature of their surfaces]  தங்கி உள்ளது தெரியவரும். உதாரணமாக ஒரு மென்மையான மற்றும் ஈரமான தரையில் நடக்க கடினமாக இருப்பதும் மற்றும்  வாழைத்தோலில் மிதித்து நழுவி விழுவதும் இதனால் ஆகும். மேலும்  ஒரு வேளை உராய்வு விசை முற்றிலும் இல்லாமல் இருக்குமானால், மலைகள் மீது திரண்டு நிற்கும் பாறைகள் உருண்டு விழும். நடக்கவோ உட்காரவோ ஓடவோ முடியாமலும் சுவர்க் கடிகாரங்களை மாட்ட ஆணி அடிக்க முடியாமலும்  பூட்டைப் பூட்ட முடியாமலும் (பூட்டு செய்யவே முடியாது) போகும்.

 

உராய்வை வெல்ல அல்லது தோற்கடிக்க நாம் அதற்கு எதிராக கடும் வேலை செய்யவேண்டி இருந்தாலும், பல வேளைகளில் அது எமக்கு உதவும் விசையாகவும் உள்ளது. உதாரணமாக, எமது சப்பாத்துக்கும் தரைக்கும் இடையிலான உராய்வு, எம்மை வழுக்குவதில் இருந்து தடுக்கிறது [friction between our shoes and the floor stop us from slipping]. அது போல, காரின் சில்லுக்கும் வீதிக்கும் இடையில் உள்ள உராய்வு காரை சறுக்குவதில் இருந்து தடுக்கிறது [friction between tyres and the road stop cars from skidding]. அவ்வாறே பிரேக்குக்கும் மற்றும் சக்கரத்துக்கும் இடையில் உள்ள உராய்வு வண்டியை நிற்பாட்டிட அல்லது மெதுவாக்க உதவுகிறது [friction between the brakes and wheel help bikes and cars to slow down]. எனவே இங்கு எல்லாம் உராய்வு விசை பயனுள்ள விசையாக எமக்கு தொழிற்படுகிறது.

 

கார் அல்லது சக்கர நாற்காலியின் தடுப்பக்கருவியை அழுத்தும் பொழுது, பிரேக் பட்டைகள் [brake pads] சக்கரத்தை இறுக்கி பிடிக்க [grip the wheel], டயர்களும்  இதனால், தரையை இறுக்க பிடிக்கிறது. இறுதியாக வண்டி ஓய்விற்கு வருகிறது. எனவே பிரேக் பட்டைகள் மற்றும் டயர்கள் [brake pads and tyres] நல்ல தரத்தில் இருப்பது அவசியம். அப்ப தான் குறுகிய நேரத்தில் வாகனத்தை ஓய்வுநிலைக்கு கொண்டுவர முடியும் என்பதை முதியோர்கள் கட்டாயம் புரிந்து இருக்க  வேண்டும்.  இதன் மூலம் தமக்கு ஏற்படும் தேவையற்ற விபத்துகளை அவர்கள் தடுக்கமுடியும்.

 

உங்கள் சப்பாத்துக்கும் தரைக்கும் இடையில் உராய்வு இல்லாமல், உங்களால் என்றுமே முறையாக நடக்க முடியாது. உதாரணமாக உராய்வு இல்லையென்றால், நாம் எல்லோரும், எமக்கு மேல் எந்த கட்டுப்படும் இல்லாமல்  வழுக்கிக்கொண்டு இருப்போம். நீங்கள் நடக்கும் பொழுது, முன்னோக்கி போக முயற்சிப்பதற்காக. நீங்கள் உங்கள் பாதத்தை பின்னுக்குத் தள்ளுகிறீர்கள். உராய்வு உங்கள் சப்பாத்தை தரையுடன் வைத்திருப்பதால் [friction holds your shoe to the ground], உங்களால் நடக்க முடிகிறது. எனவே சவக்காரம் படிந்த அல்லது எண்ணெய் படித்த தரை, [soapy or oily surfaces] மிகவும் குறைந்தளவு உராய்வை கொண்டு இருப்பதால், அப்படியான வழுக்கும் மேற்பரப்புகளில் [slippery surfaces] நடப்பதை கட்டாயம் முதியோர் தவிர்க்கவேண்டும். 

 

இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று உராயும் பொழுது கைகள் சூடு ஆவதை உணர்ந்து இருப்பீர்கள் [hands feel warm]. உராய்வே இதற்க்கு பொறுப்பாகும். அதாவது இரு கைகளும் ஒன்றுக்கு ஒன்று தேய்க்கும் பொழுது, அங்கு சில அளவு எதிர்ப்பு ஏற்படுகிறது [some amount of resistance]. ஆனால் அதே கையை, சும்மா ஒன்றாக இணைக்கும் பொழுது [just put your hands together], அங்கு ஒரு எதிர்ப்பும் இருக்காது. எனவே எந்த அளவு வெப்பமும் [no amount of warmness] கையில் ஏற்படவில்லை. இவ்வாறு மேலும் பல நிகழ்வுகள் உராய்வு விசை மூலம் அன்றாட வாழ்க்கையில் நடை பெறுகின்றன.

 

அவை தீக்குச்சி கொளுத்துதல் [Lighting Matchsticks], நடத்தல் [Walking], எழுதல் [Writing], ஓட்டுதல் [Driving], சறுக்குதல் [ஸ்கேட்டிங் / Skating], சுவரில் ஒரு ஆணியைத் துளைத்தல் [Drilling a nail into the wall], கம்பளத்தை ஒரு குச்சியால் அடிப்பதன் மூலம்  தூசி அகற்றல் [The dusting of the carpet by beating it with a stick], இஸ்திரியிடல் [Ironing a shirt], பொருள்களைப் பிடித்துக் கொள்ளுதல் [Holding onto objects], உங்கள் விரலில் மோதிரம் [Ring on your finger] மற்றும் இவை போன்றவையாகும். அதில் சிலவற்றை நாம் இங்கு விளக்கமாக தந்துள்ளோம். இதை ஆதாரமாக கொண்டு, மற்றவற்றை நீங்கள் புத்தகங்கள் ஊடாகவோ அல்லது வலைத்தளங்களிலோ அறியலாம். அது உங்களுக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன்,  உங்களை மேலும் மேலும் அறியத் தூண்டும்.

 

"யானை தந்த முளிமர விறகின்

கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து"

[புறநானுறு 247]

 

'யானைகொண்டுவந்து தந்த, காய்ந்த விறகால் வேடர்கள் மூட்டிய தீயின் ஒளியில்' என்று இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் கூறுகிறது. இங்கு கானவர் = வேடர் எப்படி உராய்தலை பாவித்து தீயை உண்டாக்கினார்கள் என்பதை அறிகிறோம். அவையே இன்றைய காலத்தில் தீக்குச்சி வடிவம் அடைந்தது எனலாம்.

முதியோர்கள் நடக்கும்போது காலை அதிகதூரம் வீசும்போதும் உராய்வுத்திறன் குறைந்து , சறுக்கிவிழும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். இதனையும் ,நடக்கும் மேற்பரப்பின் உராய்வுத்தன்மையையும் கருத்தில் கொள்வதன்முலம் அவ்வகையான ஆபத்துகளைத் தவிர்த்துக்கொள்ளலாம். 

[மூலம், ஆங்கிலத்தில் என் அண்ணா, கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம், 

மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]   

0 comments:

Post a Comment