பொன்பொழிய ஒரு சுவாமி ........


பொன்சாமி:    

19.80g 22kt Gold God Murti02


Vollbild anzeigenபொன்னையரும், சின்னையரும்கண்ணையரும், அன்னையரும் பொன்னூர், நன்னூர் , கண்ணூர் என்றென்று எந்நாளும் கண்ணுயர்த்தும் மண்ணூர் ஒன்றில், பொன் மாளிகை ஒன்றை பின்வாசல். முன்வாசல், தன் வாசல்பன்வாசல்  என்றென்று நன்னாக பொன்னாலே வடிவமைத்து, தன்னறையும், பின்னறையும், சின்னறையும், கன்னறையும்  மின்னும் பொன்னாலே அன்றாடம் மிக நிரப்பி, பொன்மண்டபம் ஒன்றைப் பொன் சோடனை செய்து, வண்ணமயமான பொன்தீபம் கண்ணில் மின்னபொன் சாமரை தன்னை அன்போடு வீசிவிட, பொன்னாபரணங்கள் நன்னாகவே அணிந்து, பொன்கோல் கரம் கொண்டு, பொன் தீபம் ஏற்று, பொன் மலர் தூவ, பொன் மாலையிட்டு, நன்காவல் சூழ, உன்னதமான பொன் மேடை தன்னில், சின்னனே இல்லாத பொன் சிம்மாசனத்தில் தன்னாக, பொன்னாக, கண்ணாக வீற்றிந்து, தன்னாலே இந்நாளும், அந்நாளும், எந்நாளும் எல்லாமே நன்னாய் முடியும் என்று முன்னாலே நின்னிருக்கும் பன்னாயிரத்தினருக்கு, பொன் வாய்தனைத் திறந்து சொன்னாரே என்பதனால், தன்னுள் நின்னிருக்கும் புண்களையும், பெண்களையும், சிண்களையும் கண்கொண்டும், தன்வினை ஒன்றையும் நீக்கவே இயலாது துன்பத்தில் கண்கெட்டு நின்றாலும், பொன்மலச் செம்மல் பொன்வாய் தன்னைத் திறந்து நன்னாக சொன்னாரே என்பதனால்,நன்னாகக் கண்ணிருந்து சொன்னாலும், ஒன்றும் பண்ணாதுநாமெல்லாம்  எந்நாளும் பின் சென்று, பன்னாட்டு மொழிகளிலே மென்மைமிகு  பண்பாடல் பல பாடிப், பண்புடனும், அன்புடனும், பணிவுடனும் பொன் சாமியின் முன் பொன் கேட்டும், மண் கேட்டும், பெண் கேட்டும், கண் கேட்டும் பொன்விழாக் கண்டு அன்றாடம் கொண்டாடி மன்றாடி வேண்டிடுவோம்!
ஒரு வசனம் ஆக்கம்: செல்வதுரை சந்திரகாசன்

4 comments:

 1. ஆமேன்!!!!

  ReplyDelete
 2. கண்ணுறங்கு,பொன்னுலகம் நீ காணும்வரை.

  ReplyDelete
 3. சாம்பவிWednesday, December 02, 2015

  இங்கு ஐயப்பன் ஆலயத்தில் இம்முறை மாலை போட்டவர் பின் பக்கமாக தவறி வீழ்ந்து மண்டை உடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் நினைவு இழந்த நிலையும் கிடக்கிறார்.உங்க பொன்னும் நீங்களும்..

  ReplyDelete
 4. கண்ணன்Thursday, December 03, 2015

  உதாரணமாக முருகனுக்கு பொன்னால வேல் செய்து கொடுத்தால் நல்ல பொன் கொழிக்கும் நம்ம வீட்டில என்று நம்பும் மண்ணாசை கொண்டவர்கள் இவற்றை உணரப்போவதில்லை.நீ கொடுத்தா என்ன கொடுக்காட்டில் தான் என்ன உனக்கு ஒன்னு தான் நடக்கும்

  ReplyDelete