இராவணன் நல்லவனா?..கேள்வி(04...09)

கேள்வி(04):-  ஏன் முனிவர்கள் எல்லாம் இராவணனைப் பார்த்து நடுங்கி விஷ்ணுவிடம் அவதாரமெடுக்கச் செய்யவேண்டும்?

முனிவர்கள் நடுங்கி விஷ்ணுவிடம் முறையிட்டனரா? பிரம்மரிஷி வஷிஸ்டர் நடுங்கியதாக தெரியவில்லை. பரசுராமரும் நடுங்கியதாகத் தெரியவில்லை. ராமன் பிறக்க யாகம் செய்ய வந்தாரே ரிஷ்யசிருங்கர் அவரும் நடுங்கவில்லை.. திரிலோக சஞ்சாரி நாரதரும் நடுங்கவில்லை.. விஷ்வாமித்ரரும் யாகத்திற்கு தசரத ராமனிடம் உதவி கேட்டாரே தவிர விஷ்ணுவை அவதரிக்கச் சொன்னதாக தெரியவில்லை.. ராமனும் காடுகளில் பலப்பல முனிவர்களை கண்டு வணங்கி வாழ்த்து பெற்றதாக அறிகிறோம். இவர்களெல்லாம் ராவணனால் தொல்லை செய்யப்பட்டனரா?

கேள்வி(05):-   முனிவர்களும் தேவர்களும் வாழ முடியாத ஓர் நாட்டை எப்படி சொர்க்க புரியாக ஏற்றுக் கொள்ள முடியும் ?

மனிதர்கள் வாழ்ந்தாலே அது நாடு. முனிவர்கள் தேவர்கள் தேவையில்லை..

 

கேள்வி(06):-இராவணன் ஆரம்பித்து இன்று வரை அங்கே நிம்மதி இல்லை! ஆக ராவணன் ஆட்சி என்று நான் சொன்னதில் தவறேது இருக்கமுடியும்?

 

அது ராவணன் ஆரம்பித்த நிம்மதி சீர்குலைப்பு இல்லை. அனுமன் ஆரம்பித்தது.. இலங்கையை காத்த இலங்கிணியை கொன்றது அனுமன் தானே.. இலங்கையை அதன் பின் பலப்பல மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர்.

கேள்வி(07):-வெறும் பேச்சினால், அனுமன் கோபத்தைக் கிளறிவிட்டு ஊரையே எரித்த ஓர் உத்தமன் ஆண்ட நாடு எவ்விதமய்யா சொர்க்கம்?

அசோகவனத்தை அழிக்கும் வானரத்தை, அழிக்க நினைப்பது எப்படி கெட்ட செயலாகும்? அது ராவணன் தவறா என்றா சொல்கிறீர் விபீஷணன் தவறல்லவா? யார் வந்து நான் தூதனென்றால் தூதன் ஆகிவிடுவானா? தூதனைக் கொல்லாதே என்று விபீஷணன் சொல்லாவிட்டால் அனுமன் வாலில் தீவைத்திருப்பானா? கேள்வி(08):-ஓர் தூதுவனை எப்படி நடத்த வேண்டுமென்பது கூட அறியாத ஓர் அரசன் நல்லவனா?

அனுமன் தூதுவன் என்று சொல்லிக் கொண்டான்.. ராமன் அரசன் அல்ல.. அரசபதவியை துறந்தவன்.. துறவிக்கு தூதன் ஏது? அயோத்தியின் அரசன் அப்போது செருப்பு.

கேள்வி(09):-முக்காலமும் உணர்ந்த விஷ்ணு, பிற்காலத்தில் இராவணன் கொடியவன் என்று அறிந்திருப்பான்.. அப்படியிருந்தும் ஓர் அவதாரம் எடுத்து இராவணனைக் கொல்ல நேரிடுகையில் எதன் அடிப்படையில் இராவணன் நல்லவனாகிறான்?

விஷ்ணு முக்காலமும் அறிந்தவரென்கிறீர்,ராவணன் என்று கெட்டவன் அறிந்திருக்கிறான்.. அதனால்தான் அவதாரம் எடுத்து வதைக்கிறான் என்றீர்.. எய்யும் அம்பை நோவானேன்.. ராவணனைப் படைத்த பிரம்மாவையே ஒழித்து விடலாமே.. இல்லை இல்லை சனகாதி முனிவர்களின் சாபத்திற்கு ஜெய விஜயர்களுக்கு வழங்கப்பட்ட வரம் என்கிறீரா அப்போது நல்லவர்களுக்கு இன்னல் விளைக்கும் வரம் தந்த விஷ்ணுதானே குற்றவாளி.. ராவணன் எப்படி குற்றவாளி...

 

18 வருடங்களாக தேவாசுர யுத்தம் நடந்தது. அதில் தேவர்கள் பக்கமாக தசரதர் போரிட்டார். சம்பாசுரன் என்ற அசுரனை எதிர்த்துப் போரிட்டபொழுது தேரின் அச்சாணி ஒடிந்து விழ தசரதனின் தேர் நிலைதடுமாறியது. தசரதனுக்கு தேரோட்டிய கைகேயி தன் கைவிரலை அச்சாணியாய் கொடுக்க போரில் தசரதன் வெற்றிபெற்றார். கைகேயியைப் பொற்றி இரண்டு வரம் தர முன் வர கைகேயி அதை நேரம் வரும்போது வாங்கிக் கொள்கிறேன் என்கிறாள்.. 

(கேள்விகள் தொடரும்...)............THAMARAI,VENTHAN

0 comments:

Post a Comment