யாருக்காக இது யாருக்காக ?..?...?

   மதம் மனிதனுக்காக தான், தெய்வத்திற்காக அல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்வி இல்லை, மதம் தான் கல்வி, மதம் மனிதனுக்கு ஒழுக்கத்தை போதிப்பதற்கு உலகின் பலபகுதிகளில் அங்குள்ள சூழல்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது தான் மதம்.
    மதம் தெய்வத்தை வணங்குவதற்கு உருவாக்கவில்லை மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்பதற்காகதான்.
    நாட்டுக்கு நாடு தேசிய கொடி இருப்பது போல் அந்த அந்த மதத்திற்கும் சின்னமான ஒரு தெய்வத்தை வைத்து கொண்டார்கள்.அது மதத்தின் குறியீடாகும். நாளடைவில் கொள்கையை விட்டுவிட்டார்கள், குறியீட்டை தெய்வமாக கொண்டார்கள்.
  மதம் தெய்வத்தை சரிந்து இல்லை, கொள்கையை சார்ந்துள்ளது.கொள்கை அந்த அந்த நாட்டு சூழலை, மக்களை சார்ந்துள்ளது.
    ஒரு இந்து மதமாக இருந்தாலும் இந்தியாவின் வடக்கிலும் தெற்கிலும் ஒரே விதமான மத ஒழுக்கம் பேணப்படவில்லை. ஒவ்வொரு பிரதேசம் ,காலநிலை,சூழ்நிலைக்கு ஏற்றவாறு அக்காலத்தில் சமய  அனுஷ்டானங்கள் அமையப்பெற்றன. அதனால்தான்   அந்தந்த நாடுகளில் தோன்றிய மதங்கள்  அப் பிரதேசங்களை பொறுத்தே   அவர்களை வழி நடத்துகின்றது.  மதக் கொள்கை நாட்டையும், மக்களையும் சார்ந்தது, தெய்வத்தை அல்ல.

    எனவே ஒவ்வொருவரும் தாம் வாழும்  நாட்டின் சூழ் நிலைகளிற்கு ஏற்ப தங்கள் சமய அனுஷ்டானங்களை பின்பற்றி வாழ்வது தான் பொருத்தமாக இருக்கும். அதை விடுத்து கடுங்குளிர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு  
-[மைனஸ்]40c குளிருக்குள் கந்தசட்டியும் பிடிக்கவேணும், வேலைக்கும் போகவேணும் என்று அடம் பிடித்தால்   கந்தனைக் காணமுடியாது. காலனைத் தான் காண முடியும்.
--செழியன் 
                                                                                                              

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. இதே குளிர்நாட்டில் வாழ்ந்துகொண்டு திருவெம்பாவை க்காக அதிகாலையில் எழுந்து நீராட பெருசுகள் ''சுடுதண்ணியில் குளிக்கக் கூடாது'' என்று புது றீல் வேற விடுகினம்

    ReplyDelete
  3. சந்திரகாசன்Thursday, October 20, 2016

    தமிழ் நாட்டிலே ஆண்கள் சேட் போட்டுக்கொண்டு கோவிலுக்குள் போனால் அங்கு புழுங்கி அவியும்; ஆனால், குளிர் பிரதேசங்களிலும் சேட் போட்டுக்கொண்டு சுவாமியைத் தூக்கப்படாது என்று சம்பிரதாயம் கதைப்பது கொஞ்சம் முடிடாள்தனமாக இல்லை?

    ReplyDelete
  4. முருகனுக்கு விரதம்,பிள்ளையாருக்கு விரதம் என்று கூறி எதோ கடவுள் இவர்களை நம்பி வாழுற மாதிரியும் பேசுகினம்

    ReplyDelete