கணினியில் ஊழல் செய்யும் ஏமாற்றுத் திருட்டுப் பேர்வழிகள்:

(Computer Scammers and Hackers )
நீங்கள் வீட்டில் இருக்கும்போது திடீரென்று ஒரு தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு உங்களைத் திடுக்கிட வைக்கும்ஒரு வட இந்திய பெண்மணி தன் 100% இந்திய ஆங்கில உச்சரிப்பு அழுத்தத்தினுடன்தான் (ஒரு ஆங்கிலேய பெண்போன்று ) உதாரணமாக மிச்செல் என்ற பெயரும்தான் உங்கள் உள்நாட்டு இணையம் வழங்கும் ஸ்தாபனத்தின் தொழில் நுட்பப் பிரிவிலிருந்து பேசுவதாகவும் அறிவிப்பார்உங்கள் கணினிபிழையான பல தரவிறக்கங்கள் செய்த காரணத்தினால்விஷமமான பல கொடிய வைரசுக்களை உள்ளிறக்கியபடியால்,அங்குள்ள தமது பிரதான கணினி பல பின்னடைவுகளைச் சந்தித்துப் பாதகம் நேர்ந்ததால்உங்கள் இணையத் தொடர்பை நாளைய தினத்திலிருந்து துண்டிக்கப் போவதாக முடிவெடுத்திருக்கின்றோம் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுவார். (i.e.: I am Mitchelle, talking from Technical Division of Tesltra / Bell Canada... Your internet will be disconnected tomorrow, …).

இந்த அழைப்புகணினி நுட்பத்தில் பலவீனமானவர் சிலரைக் கண்டு பிடித்துஅவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க முனையும் திருடர் வாழும் ஒரு வீட்டில் இருந்தே வருகின்றதுசெய்தியைக் கேட்பவர்களில் சிலர் 'ஐயோ குய்யோஎன்று அலறி அவர்கள் வலையில் சிக்குவார்கள் என்று எதிர்பார்த்துத் தான் இப்படி ஒரு பொறியை வீசுவார்கள்அவர்கள் கதைக்கும்போதுஏதோ ஒரு பெரிய வேலைத்தலத்தில் பலர் வேலை செய்வது போல சப்தம் பின்னணியில் ஒலிக்கச் செய்தும் விடுவார்கள்.மறு முனையில் யாராவது அகப்பட்டுவிடடால் 'மேனேஜர்இடம் -அதாவது கணவரிடம்- (பெயர் பீட்டர்ஜேக்கப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுஅவர் சாதுரியமாகக் காயை நகர்த்துவார்.

இவர்களுக்கு உங்கள் தொலை பேசி இலக்கம் மட்டும்தான் தெரியும்.உங்கள் பெயர்விலாசம் ஒன்றும் தெரியாதுநீங்கள் கணினி இணைய இணைப்பு உள்ளவரோஎந்தக் கொம்பனியுடன் இணைய தொடர்பை வாங்கி இருக்கின்றீர்கள்நீங்கள் பாவிக்கும் கணினி என்னஇயக்க தளம் என்ன என்ற ஒரு அறிவும் கிடையாது.

அவர்களின் முக்கிய நோக்கம் என்னவெனில்,  உங்களை பயமுறுத்தி,நம்பவைத்து,  உங்கள் கணினியினுள்அவர்கள் சொல்லியவாறு எல்லாம் உங்களைக் கொண்டு டைப் பண்ண வைத்து உங்கள் கணினியை தம் வீட்டிலிருந்தே ரிமோட் ஆக இயக்க அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவதே!. இதற்கு முதலேசில சிவப்பு நிற கோப்புகளைக் உங்கள் கணினியில் காட்டி அவை எல்லாம் வைரசுகள் என்று பயமுறுத்தி விடுவார்கள்கணினி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும்தாங்கள் தயாராக வைத்திருக்கும் பல வைரசுகளை உள்ளேற்றி விடுவார்கள்பின்னர்அவற்றை பூதாகாரமாகக் காட்டி,இவற்றை எல்லாம் வேறு ஒருவராலும் ஒழிக்க முடியாதுதம்மிடம் உள்ள,மிகவும் உயர் சக்தி வாய்ந்த வைரஸ் அகற்றி ஒன்றால்தான் முடியும் என்றுஅதை விற்று ஒரு $300 ஐ உங்கள் கடன் அட்டை மூலம் கறந்து விடுவார்கள்நீங்கள் படு ஏமாளி என்று அறிந்தால் இந்த வியாபாரம் தொடர்ந்து மேலும் மேலும் பல வைரஸ் அகற்றிகள் விற்பதன் மூலம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

இந்த ஏமாற்று பேர்வழிகள் சிலவேளைகளில் தாங்கள் மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் இருந்து கதைப்பதாகவும் கூறுவர்சம்பாஷணையின் நடுவில்தாம் கதைத்துக் கொண்டிருப்பவருக்கு எந்த நிறுவனத்தை முதலில் சொன்னோம் என்று மறந்துபோய் மாறிக் கதைத்தும் மாட்டிக்கொள்ளுவது உண்டுமைக்ரோசொப்ட் இலிருந்து கதைத்து உங்களையே என்ன விண்டோவ்ஸ் பதிப்பு நீங்கள் பாவிக்கின்றீர்கள் என்று கேட்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

இவர்கள் கதைக்கும்போது உங்கள் நாட்டின் பிரதானமான ஓர் இணையம் வழங்கும் நிறுவனத்தின் பெயரைத்தான் கூறுவார்கள்தாம் வேலை செய்வதாகக் கூறிக்கொள்ளும் தலைமைக்கந்தோரின் உங்களூர் விலாசத்தையும் அறிந்து வைத்துச் சொல்லிக்கொள்வார்கள்.நீங்கள் இன்னொருவருடன் இணைய இணைப்பைப் பெற்று இருப்பதை அறிந்திருக்கவே மாடடார்கள்.

வைரஸ்களை நீங்களே வேறு தெரிந்தவர்கள் மூலம் அகற்றுவேன் என்று சொன்னால் விடமாடடார்கள்அது தம்மால் மட்டுமே முடியும்வேறு எவராலும் இயலாத காரியம் என்று சாதிப்பார்கள்சரிஇணையத் தொடர்பைத் துண்டியுங்களேநான் வேறு யாருடனும் போகலாம் என்றாலும் பயமுறுத்துவார்கள்வேறு எங்கும் உங்களுக்குத் தொடர்பு தரவே மாடடார்கள் என்று!

இதே கும்பல் நீங்கள் முன்பு உள்ளாகிய வாகன விபத்தில்உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு தொகை நஷ்ட ஈடடை வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு உங்களிடம் தொடர்பும் கொள்வார்கள்அப்படி ஒரு விபத்து நடந்தே இருக்காதுஅவர்களுக்கு உங்கள் வாகன இலக்கமோ எதுவுமோ தெரிந்தும் இருக்காதுஎப்படியும் உங்களை நம்ப வைத்து அந்தஇந்தச் செலவு என்று உங்கள் வங்கி விபரத்தை எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்வார்கள்.

இந்தத் திருடர்களிடம் இருந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே ஒரு வழிஇப்படியான அழைப்புகள் வந்ததும் உடனேயே துண்டித்து விடவேண்டும்திரும்பத்திரும்ப வந்தால்ஒரு சில சூடான வார்த்தைகளைப் பிரயோகித்துதிரும்பவும் உங்களை அழைக்கப் பயப்படும்படி எச்சரித்து விடவேண்டும்.

இவர்களிடம் இருந்து வேறு சில அப்பாவிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல உள்ளம் இருப்பவர்களை இருந்தால்இவர்கள் வேறு நபர்களிடம் போகாதபடிஒரு மணித்தியாலத்திற்கென்றாலும்நீங்களும் ஒன்றும் தெரியாதவர்போல் பாசாங்கு செய்துகதைப்பது புரிந்து கொள்ளாதவர் போல் நடித்துஅப்படியும் இப்படியும் பிழை விட்டு டைப் அடித்து திரும்பத் திரும்ப அவர்களிடம் ஒன்றும் விளங்காதவர்போல கேள்விகளைக் கேட்டு, bank card க்குப் பதிலாக blood bank இலக்கத்தைக் கொடுத்துஅவர்கள் பொறுமை இழக்கும் மட்டும் கொஞ்ச நேரம் விளையாடிக்கொண்டே இருங்கள்இவ்வளவு அவர்கள் நேரத்தையும் வீணாக்கிவேறு சில அப்பாவிகளைக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்குத் சேரும்.

இப்படிச் செய்யும்போது உங்கள் கணினி அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் போக விடாது இருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள்அதுவரை அவர்களால் உங்களை ஒன்றுமே செய்ய இயலாது!

இந்தத் திருட்டுக் கும்பல் காலம் செல்லச் செல்ல புதியமாறுபட்ட யுக்திகளைக் கண்டு பிடித்துஅவைமூலம் பல அப்பாவிகளை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள்!
ஆக்கம்:செல்வதுரை,சந்திரகாசன் 

0 comments:

Post a Comment