கொரோனா வைரஸ் அலைகள்" / பகுதி 01

 

 "முதல் மற்றும் இரண்டாவது கொரோனா அலை'' 



உலகின் பல பாகங்களில் கோவிட் 19 குறைந்து வருவது போல தோற்றம் அளித்தாலும், அது மீண்டும் சில இடங்களில் , குறிப்பாக ஐரோப்பாவில் ஐக்கிய இராச்சியம், பெல்ஜியம், இத்தாலிகளின் கொரோனா வைரஸ் புள்ளிவிவரங்கள்   செப்டம்பர் 2020 நடுப்பகுதியில், மிகவும் கவலை அளிப்பதாக இருக்கின்றன. மேலும் பிரான்ஸ், போலந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் புள்ளிவிபரங்களும் ஒரு அதிகரிப்பை காட்டுகின்றன. இவை ஐரோப்பாவில் இரண்டாவது அலை ஆரம்பிக்க தொடங்குகிறது என்ற ஒரு பயத்தை, உண்மையை வெளிக்காட்டுகின்றன. அதேவேளையில், உலகின் மற்ற பகுதிகளிலும், உதாரணமாக ஈரான், இஸ்ரேல், சவூதி அரேபியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் இன்னும் முதலாவது அலை உயர்ந்தது கொண்டு இருப்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. ஆகவே, உலகின் பல இடங்களில் அது தணிந்து கொண்டு இருந்தாலும், அதே நேரத்தில் குறிப்பிடட சில இடங்கள் கொரோனாவின் கூர்முனைகளைப் பார்க்கின்றன என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும். அது மட்டும் அல்ல, உலகளாவிய [சர்வதேச] பரவல் இன்னும் உருவாகி வருகிறது. 

 

நான் முதலாம் அலையின் போது, ஏப்ரல்  5, 2020 இல் இருந்து எழுதிய  "கொரோனா வைரஸ் / வரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா ? வரலாறு கற்பித்த பாடங்களை பின்பற்றுகிறோமா ?" என்ற நான்கு பகுதி கட்டுரையை தொடர்ந்து, இரண்டாவது அலையைப் பற்றியும், கொரோனா வைரஸ் பற்றிய மேலதிக விபரங்களையும் அறிவு பூர்வமாக அலசலாம் என்று எண்ணுகிறேன்.

 

உலகம் முழுவதும், அங்குள்ள அரச அதிகாரிகள், கோவிட் 19 ஐ கட்டுப்படுத்த, முன்பு கடுமையாக ஏற்படுத்திய, பொருளாதாரம் முடக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் அல்லது பெரும்பாலவானவற்றை இன்று தளர்த்தும் அல்லது முழுமையாக திருப்பி கொண்டுவர நடவடிக்கைகளை எடுக்கும் இந்த தருவாயில், பொது மக்கள் மற்றும் புத்திஜீவிகள் அனைவரின் மனதிலும் உள்ள பயத்தை, இரண்டு சொற்களில் நாம் வெளிப்படுத்தப்படலாம். அது "இரண்டாவது அலை"  பற்றிய பயமே. 

 

கவலை என்னவென்றால், ஒருமுறை தணிக்கப்பட்ட, தொற்று நோய் புதுப்பிக்கப் பட்ட வலிமையுடன் மீண்டும் தோன்றும் என்ற இயல்புதான் , அதை கட்டுப்படுத்தும் அல்லது குணப்படுத்தும் மருந்துகள் இன்னும் முறையாக மற்றும் பெரும் தொகையாக, எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக கண்டு பிடிக்கப் படாத இன்றைய சூழலில், அதன் இரண்டாவது வருகை, தொற்றுநோயை மீண்டும் உயர்த்தும், முன்போல சுகாதார அமைப்புகளில் சிக்கல்களை ஏற்படுத்தி சிதைக்கலாம் மற்றும் மீண்டும் நாடளாவிய அல்லது பெருபாலான இடங்கள் முடக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற எண்ணப்பாடு தான். இன்று ஆசியா, ஐரோப்பா  மற்றும் யு.எஸ். ஆகியவற்றின் சில சில இடங்களில் புதிய கொரோனா வைரஸ் அடையாளங்கள் ஏற்படுவது இதை உறுதி படுத்துவதுடன் ஒரு பீதியையும் மக்களிடம் ஏற்படுத்துகிறது என்பதே இன்றைய உண்மை.

 

இந்த தொற்றுநோய், ஒரு புதிய நோய்க்கிருமிகளால் ஏற்படுத்தப்பட்டது, அதன் இயல்புகள் சரியாக அறியப்படாத இன்றைய நிலையில், மற்றும் இன்னும் இதற்கு எதிராக நோயெதிர்ப்பு தடுப்பு மருந்து முறையாக உற்பத்தி செய்யப்படா நிலையில், இதன் பரவலை அல்லது மீண்டும் வருவதை தடுப்பது இன்னும் ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. 

 

பொதுவாக தொற்று நோய்கள் அசாதாரணமானது. என்றாலும் குளிர் காய்ச்சல் [இன்ஃப்ளூயன்ஸா] என்பது அடிக்கடி ஏற்படும் காரணிகளில் ஒன்றாகும் [but influenza is one of the more frequent causes]. இங்கு அடிக்கடி நடப்பது என்னவென்றால், ஒரு சுனாமி மாதிரி, ஒரு புதிய அல்லது நூதனமான வேறுபாடுகளுடன் காய்ச்சல் வைரஸ் [a novel variant of flu virus], ஒவ்வொரு முறையும்  உலகம் முழுவதும் பரவுதலும் பின் தணிதலுமாகும். 

 

உதாரணமாக, கோவிட் 19 ஐ எடுத்தால், உலகின் பல நாடுகள், மக்களின் அன்றாட வாழ்வை முடக்கி , அவர்களின் இயக்கங்களை கட்டுப்படுத்தினார்கள். அதன் மூலம் நோய் பரவலை குறைத்தார்கள். ஆனால் அந்த தொற்று வைரஸ் மீண்டும் வெளியேறத் தொடங்கினால், பலரை அந்த தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே இன்றுவரை, விட்டு விட்டுவிட்டார்கள். உதாரணமாக, அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், டெக்சாஸ், கலிபோர்னியா மற்றும் புளோரிடா [Texas, California and Florida] போன்ற பகுதிகள் உட்பட சில பகுதிகளில், முடக்கலை தளர்த்தி, மீண்டும் இயல்பு நிலைக்கு திறந்து விட்டு ஒரு கிழைமைக்குள்,  உள்ளூர்மயமாக்கப்பட்ட தொற்று நோய் பரவலை [localized outbreaks] இன்று காணக் கூடியதாக உள்ளது. என்றாலும் அமெரிக்கா அதிகாரிகள் இன்னும் முதலாவது பரவல் முடிவிற்கு வரவில்லை, ஆகவே இரண்டாவது பரவல் இன்னும் அமெரிக்காவில் ஆரம்பிக்க வில்லை என்கிறார்கள் [However, as Anthony Fauci, director of the U.S. National Institute of Allergy and Infectious Diseases, pointed out in an interview with the Wall Street Journal, the U.S. is still in the first wave of its coronavirus outbreak -- it hasn’t yet receded].

 

நாம் இன்று புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்கள் மூலம் அறிவது, இன்னும் இந்த தொற்று நோய் உருவாகி வருகிறது என்பதேயாகும் [the pandemic is still evolving]. மருத்துவர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் [Doctors, public health experts and researchers] போன்றோர்கள், எப்ப முதலாவது அலை முடிவிற்கு வரும் ? மற்றும் இரண்டாவது அலை வருமா ? [ When will this first wave be over, and will there be a second wave of COVID-19 in the fall?] போன்ற கேள்விகளுக்கு இன்று விடை காண முயலுகிறார்கள். ஆனால், இன்று வரை சார்ஸ் கோவிட்  - 2 [SARS-CoV-2] பற்றி சிறிதளவே முழுமையாக தெரிந்து இருப்பதால், இந்த அடிப்படை கேள்விகளைப்  பற்றி சரியாக, அறுதியாக கூறுவது கடினமாக இருக்கிறது. எனவே நாம் முதலாவது, இரண்டாவது அலைகளைப்பற்றி இது வரை அறிந்தவற்றை ஒவ்வொன்றாக இனி பார்ப்போம்

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 02 தொடரும்

0 comments:

Post a Comment